இதுவரை 116 வேதியியல் தனிமங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தற் போது 117-வது தனிமத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.தனிமங்கள் பொதுவாக அவற்றின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கொண்டு வகைப் படுத்தப்படுகிறது. புதிதாக உருவாக் கப்பட்டுள்ள தனிமம், கால்சியம் மற்றும் பெர்கிலியம் தனிமங்களை மோதச் செய்து தயாரிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக `அன்அன்செப்டியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் இணைந்து இந்த தனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தனிமம் இதுவரை உள்ள தனிமங்களை விட உறுதியானதாகவும், எடை கூடியதாகவும் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இந்த தனிமத்தைக் கொண்டு தனித்திறன்மிக்க பொருட்களை தயாரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்த ஆய்வு கட்டுரை வேதியியல் தலைமை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் இந்த தனிமம் புதிய பெயருடன், ஆவர்த்தன தனிம அட்டவணையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.