Pages

Sunday, May 2, 2010

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்





இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT)
சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள்.
செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்.
Read More

மலையாளப் படத்தில் பாடகராக நடிக்கும் அமர்சிங்



சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து துரத்தப்பட்டு, வேறு கட்சியினரால் சீண்டப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ள அமர்சிங் இப்போது நடிக்கக் கிளம்பிவிட்டார்.

பாம்பே மிட்டாய் என்ற படத்தில் இந்துஸ்தானி பாடகராக நடிக்கிறாராம் அமர் சிங் . இந்தப் படத்தில் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இலங்கை வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாளின் மகளும், நடிகையும், நடனக்காரருமான நீலாம்பரி பெருமாள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

நடிப்பது குறித்து அமர்சிங் கூறுகையில், நடிக்க வந்து விட்டதால் உடனே அமிதாப் பச்சன், ஷாருக் கான் ரேஞ்சுக்கு என்னை நான் நினைத்துக் கொள்ளவில்லை.

எனது எல்லை என்ன என்று தெரியும். முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ நான் ஆசைப்படவில்லை. எல்லோருக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லோராலும் அமர் சிங் இடத்திற்கு வந்து விட முடியாது. எனக்கும் அது போலத்தான்.

டிம்பிள் கபாடியா எனது மனைவியாக நடிக்கிறார். அது மகிழ்ச்சி தருகிறது என்றார் அமர்சிங்.
Read More

ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆபரேஷன்



இங்கிலாந்தில் லைசெஸ்டர் நகரில் உள்ள கிளென்பீல்டு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர் ஆன்ட்ரே.
இவர் இருதய நோயாளி ஒருவருக்கு ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் ஆபரேஷன் செய்தார். அவர் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்து இந்த ஆபரேஷனை செய்தார்.
இதன் மூலம் ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் செய்வதற்கு ஆபரேஷன் தியேட்டரில் சர்ஜன் டாக்டர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வெளியூரில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கூட டாக்டர்கள் ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் ஆபரேஷன் செய்ய முடியும்.
இந்த ஆபரேஷன் 70 வயதான இங்கிலாந்து நாட்டுக்காரருக்கு செய்யப்பட்டது.
இதய துடிப்பு சீராக இல்லாமல் இருந்ததற்காக இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. ஒரு மணிநேரத்தில் அவரது இதயத்துடிப்பு சீரானது.
ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் ஆபரேஷன் செய்வது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கிறது என்றபோதிலும் அது கர்ப்பப்பை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்ற நோய்களுக்கான ஆபரேஷன்களில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் முறையாக அதை பயன்படுத்தி இதய நோய் ஆபரேஷனை டாக்டர் ஆன்ட்ரே செய்து இருக்கிறார். ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் முதன் முதலில் இதய ஆபரேஷன் செய்த டாக்டர் ஆன்ட்ரே தான்.
இந்த ஆபரேஷனை செய்யும் போது நான் என் அறையில் ரிலாக்சாக உட்கார்ந்து கொண்டு ரொம்ப ஜாலியாக இந்த ஆபரேஷனை செய்தேன்.
வழக்கமாக ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்யும் போது டாக்டர்கள் கனமான ஓவர்கோட் போன்ற பாதுகாப்பு சாதனங்களை அணிந்து இருக்க வேண்டும். இந்த ஆபரேஷனுக்கு இது போன்ற சாதனங்கள் எல்லாம் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார் ஆன்ட்ரே.


Read More