Pages

Tuesday, April 6, 2010

காதலனை கைப்பிடிக்கிறார் ஜெனீலியா

film

ஜெனீலியாவுக்கும், அவரது காதலரும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஜெனீலியா. இவர் 2003ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற இந்தி படத்தில் நடித்த போது, இவருக்கும் படத்தின் நாயகன் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் காதல் மலர்ந்தது. ரித்தேஷ், மகாராஷ்ட்ர மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மகன். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், அதை மறுத்துவந்தனர். இந்நிலையில் இவர்களது பெற்றோர் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமணம் ஜூலை மாதம் நடக்கிறது. இச்செய்தி குறித்து ஜெனீலியாவிடம் கேட்டபோது, அவர் மறுத்தார். இப்போதைக்கு திருமணம் இல்லை. அது தவறான தகவல் என்றார். ரித்தேஷ் ஓரு கட்டிடகலை நிபுணர், தனது வேலையில் அதிக நேரம் செலவழித்தாலும் ஜெனீலியாவுக்காக சற்று நேரம் ஒதுக்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

ஆயிஷாவிடம் 1 1/2 மணி நேரம் விசாரணை



சானியாமிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து ஆயிஷா என்பவர் சோயிப் என் கணவர் என்றும், தான் கர்ப்பம் அடைந்துள்ளேன் என்றும் புகார் தெரிவித்தார்.

ஆயிஷா கர்ப்பம் ஆனதாக கூறியது பற்றி சோயிப்பிடம் கேட்டதற்கு, ’’சோயிப் மூலம் அவர் கர்ப்பமானதாக யார் சொன்னது? நான் சிலவற்றை கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற புகார்களை திரைமறைவில் இருந்து அவர் கூறுவது ஏன் என்று எனக்கு தெரியாது. அவர் (ஆயிஷா) எங்கு இருக்கிறார்? 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 18 வயதுதான். அவருடைய வயதை கண்டுபிடியுங்கள்’’ என்று சோயிப் பதில் அளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ’’ஆயிஷாவுடன் நடந்த திருமணம் செல்லத்தக்கது அல்ல. இந்த விவகாரத்தை கோர்ட்டின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். தனக்கு திருமணம் நடந்தது குறித்து சட்டப்படி கோர்ட்டில் அவர் முதலில் நிரூபிக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் முதல் மனைவி எனக்கூறப்படும் ஆயிஷாவிடம் ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.


திருமண ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஐதராபாத்தில், சோயிப் மாலிக்-ஆயிஷா இடையிலான சந்திப்புகள் குறித்த தகவல்களை போலீசார் கேட்டறிந்தனர். ஆயிஷாவுக்கு சோயிப் மாலிக் அளித்த நினைவுப்பரிசுகள் குறித்த விவரங்களையும் கேட்டனர். இந்த விசாரணை, 1 1/2 மணி நேரம் நீடித்தது

Read More

காஞ்சி கோயிலில் நடிகை ரம்பா!...

காஞ்சி கோயிலில் நடிகை ரம்பா!
தனது வருங்காலக் கணவர் இந்திரனுடன் நடிகை ரம்பா காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். தனது கல்யாணப் பத்திரிகையை சாமியின் காலடியில் வைத்து பூஜை செய்தார்.

நடிகை ரம்பாவுக்கும், கனடா மேஜிக்வுட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் இந்திரன் என்கிற இந்திரகுமார் பத்மநாதனுக்கும் வருகிற 8-ந்தேதி காலை திருப்பதி திருமலையில் திருமணம் நடக்கிறது.

இந்த திருமணத்துக்கான அழைப்பிதழின் முதல் பிரதியை காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்வதற்காக நேற்று ரம்பாவும் இந்திரனும் காஞ்சிபுரம் சென்றனர்.

அவர்களுடன் ரம்பாவின் தாய் உஷாராணி மற்றும் அவரது குடும்பத்தினர், ன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் நேற்று காலை காஞ்சீபுரம் வந்தனர். காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற அவர்களை கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரி வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச்சென்றார்.

பிறகு நடிகை ரம்பா, திருமண அழைப்பிதழை அர்ச்சகரிடம் கொடுத்தார். அம்மன் காலடியில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் ரம்பா பேசுகையில், “திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதா இல்லையா என்பதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

நான் சீரியல்களிலெல்லாம் நடிக்கமாட்டேன். 2 மாதத்திற்கு முன்பு காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து அம்பாளை தரிசித்தேன். அம்மன் கழுத்திலிருந்த மாலையை எனக்கு போட்டனர்.

அப்போது மாலையுடன் தாலிக்கயிறும் வந்தது. அப்போதிலிருந்து அம்பாள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தான் எனது திருமணமும் அம்பாள் அருளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது… ” என்றார்.
Read More

விடுதலை செய்யக்கோரி நளினி மனு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி...



சென்னை : நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று 19 ஆண்டுகாலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அறிவுரைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் நளினியை விடுவிக்க தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தன்னை விடுவிக்குமாறு நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
Read More