Pages

Monday, April 19, 2010

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் செம்மொழி மாநாட்டுப் பாடல் தயார்!



ஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, உலகத் தமிழ் செம்மாழி மாநாட்டுப் பாடல் குறுந்தகட்டை முதல்வர் கருணாநிதி வரும் மே மாதத்தில் வெளியிடுகிறார்.
உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் மாநாட்டுப் பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியிருந்தார். இந்த பாடலுக்கு இசையமைக்கும் படி ஏ.ஆர். ரஹ்மானை அவர் கேட்டிருந்தார். இதற்கு . ரஹ்மானும் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செம்மொழி மாநாட்டு பாடலுக்கான இசையமைக்கும் பணியை ரஹ்மான் முடித்துள்ளார். இதையடுத்து சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் வகையில் உள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. கனிமொழி எம்.பி. மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.
இப் படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல்வர் கருணாநிதி தலைமையில் மே மாதம் மத்தியில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் இப் பாடல் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த குறுந்தகடு திரையிடப்படும். அதேபோல தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் கிராமங்கள்தோறும் திரையிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது

Read More

மர்லின் மன்றோவாக கரீனா?


ஹாலிவுட்டின் மறைந்த கனவுக் கன்னி மர்லின் மன்றோ வேடத்தில் நடிக்கப் போகிறார் பாலிவுட் நடிகை கரீனா கபூர். உலக சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை மர்லின் மன்றோ. 1947 முதல் 1962 வரை அவர்தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தார்.

ஆனால் தனது 36-வது வயதில் அவர் மர்மமாக மரணம் அடைந்தார். இது கொலையா தற்கொலையா எனும் விவாதம் இப்போதும் தொடர்கிறது.

மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த மர்லின் மன்றோவுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியுடனும் தொடர்பிருந்தது.

பரபரப்பான திருப்பங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள், மர்ம முடிச்சுகள் நிறைந்த மர்லின் மன்றோ வாழ்க்கையை திரைப்படமாக்குகிறார் இந்தி இயக்குநர் மதுர் பண்டார்கர்.

இதில் மர்லின் மன்றோ வேடத்தில் கரீனா கபூரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் அவர் பெரும் சம்பளம் கேட்கபதால் சற்று இழுத்துக் கொண்டிருக்கிறது விவகாரம். இதில் சில அரை, முக்கால் நிர்வாணக் காட்சிகள் உள்ளதால்தான் இந்த தொகை என்று கரீனா தரப்பில் கூறுகிறார்கள்.

இதுபற்றி இயக்குனர் மதுர் பண்டார்கர் கூறுகையில், 'கரீனா கபூர் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும், அவர் கேட்கும் சம்பளம் மிரள வைக்கிறது. ஆனால் கரீனா நடித்தால் சரியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து பேசி வருகிறேன்" என்றார்.

Read More

குழந்தை சாப்பிட அடம் பிடித்தால்


தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் இது. "என் குழந்தையும் முதல் மதிப்பெண் வாங்கிடுமா' என ஒவ்வொரு பெற்றோரும் ஏக்கப் பெருமூச்சுடன் தத்தம் குழந்தையை தொடர்ந்து தயார்படுத்தும் உத்வேகம் இயல்பானது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! அறிவுத் திறன் கொண்ட குழந்தைக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம். ஆனால், ஆரோக்கியத்தை அருகில் உள்ள கடையிலோ அல்லது பெரிய "ஷாப்பிங் மால்'களில் வாங்க முடியாது. கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்.

ஆரோக்கியத்தின் அடையாளம்: "பால்குடி' மறக்கும் நிலையிலேயே "ப்ரீ கே.ஜி.', "எல்.கே.ஜி.' என படிக்க அனுப்பும் காலச் சூழலில் உள்ள நாம், குழந்தைகளை சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதுதான் முதல் சவால். நல்ல பசியுள்ள, சுறுசுறுப்பான சேட்டை செய்யும் குழந்தை ஆரோக்கியத்தின் அடையாளம்.

"சேட்டையெல்லாம் இருக்கிறது; குழந்தை சாப்பிடத்தான் மறுக்கிறது' என்று சொன்னால், நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில் குறையத் தொடங்கி விடும். பசியை எப்படி உண்டு பண்ணுவது - அந்த மந்திரம் தெரியுமா எனப் பல தாய்மார்கள் பதறிக் கேட்பது உண்டு. சித்த மருத்துவத்தில் "பசித் தீ தூண்டிகள்' என்று நம் முன்னோர் பல மூலிகைகளை அடையாளம் காண்பித்துள்ளனர்.

உரை மருந்து - அஸ்திவாரம்: குழந்தை பிறந்து 3 மாதம் ஆன உடனே, அதற்கு பசியைத் தூண்டுவதற்கான முயற்சி தொடங்கி விடுகிறது. "கடுக்காய், மாசிக்காய், அதிமதுரம், வசம்பு, அக்கரகாரம்' என மூலிகைகள் அடங்கிய உரை மருந்தை 3 மாத குழந்தையாயிருக்கும் போதே கொடுக்க ஆரம்பித்தால் "ரெடிமேட் போஷாக்கு' உணவுகள் பக்கம் போக வேண்டியிருக்காது.

குழந்தை வளர வளர நவ தானியங்களான திணை, ராகி, கம்பு, சோளம், பயறு வகைகள் அடங்கிய சத்துமாவு கஞ்சி, பனைவெல்லம் சேர்த்து தினம் ஒரு வேளை கொடுக்க வேண்டும்.

3 வயதில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் "சாப்பிட மாட்டேன்' என குழந்தை அடம் பிடிப்பதும், காற்றடித்தால் பறந்துவிடும் அளவுக்கு தகடாக இருப்பதும் பல பெற்றோருக்குப் பெருத்த கவலை. பஞ்சதீபாக்னி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும் சேர்ந்த தூள்.), தேற்றான் முதலிய சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுத்து வந்தால், பசி அதிகரித்து உடல் எடை கண்டிப்பாகக் கூடும்.

மருத்துவர் ஆலோசனை எதற்கெனில், உடல் எடை குறைவு எதனால் என்பதைத் தெளிவாகக் கணிப்பது மிக அவசியம், சாதாரண வயிற்றுப் புழுக்கள், ரத்த சோகை, மாந்தம், கணை ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') எனப் பல காரணங்கள் ""ஒல்லிக்குச்சி உடலுக்கு'' உண்டு.

இது தவிர அக்கறையின்மை எனும் பழக்கவழக்க நோயும் காரணமாக இருக்கலாம். "வருமுன் காப்போம்' என்ற மூதுரைப்படி பின்னாளில் நல்ல உடல் நலத்துடன் சாதிக்க வேண்டுமெனில் இந் நாளிலேயே உடல் வலுவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

கண் கூர்மையைப் பெருக்கும் பொன்னாங்கண்ணி, புத்தி கூர்மையைப் பெருக்கும் பிரமி, வல்லாரை, நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் நெல்லிக்காய், சீந்தில் என சித்த மருத்துவம் சொல்லும் எளிய மூலிகைகளை முறையாக ஆலோசித்து பெற்றுச் சாப்பிட வைத்தால் நாளைய தலைமுறை நிச்சயம் வெல்லும் என்பதில் சந்தேகமில்லை.
Read More