இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தின் மூலம், வடிவேலுவையும் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணனையும் ஒரே நேரத்தில் டக் அவுட் ஆக்கியவர் தம்பி ராமையா. முன்பெல்லாம் வடிவேலுவுக்கு காமெடி டிராக் எழுதிக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். வடிவேலுவை வாய் நிறைய பங்காளி என்று அழைக்கும் பாசக்காரர். அவ்வளவும் இந்திரலோகத்திற்கு முன்புதான். அப்படம் வெளிவந்த பின், "தம்பி... தப்பி தவறி கூட ஆபிஸ் பக்கம் வந்திராதே" என்று கூறிவிட்டார் வடிவேலு. இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை பிரித்து பிரித்து கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கி சிங்க, தங்க முத்து கோஷ்டிகளிடம் இன்னும் கூட ஏமாந்திருக்கலாம். தற்போது ஒரு கூடை முத்தம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தாலும் வடிவேலுவுடன் பழைய உறவை புதுப்பித்துக் கொள்ள துடியாக துடித்துக் கொண்டிருக்கிறாராம் தம்பி ராமைய்யா. யாரு வீட்டு கொல்லையிலோ தேங்காய் விழுந்தால் நமக்கென்ன என்று போகாமல், அது இளசா, பழசா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். எப்படி? "சிங்கமுத்து வடிவேலுவுக்கு செஞ்ச துரோகத்தை கண்டிக்கணும். இதனால் வடிவேலு மனசு என்ன பாடு பட்டிருக்கும். அவரு உழைப்பை சுரண்டினவங்களை சும்மாவிடக் கூடாது" என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார். அண்ணே வடிவேலு, சப்போர்ட் பண்ணிய சந்தோஷத்துல இன்னொரு முறை கால்ஷீட் கொடுப்பீங்க... |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.