Pages

Friday, April 30, 2010

லட்சுமிராய்க்காக, வாலி எழுதிய பாடல்

முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி கதை-வசனத்தில் வளர்ந்து வரும் படம், `பெண் சிங்கம்.' இந்த படத்தில், உதயகிரண்-மீராஜாஸ்மின் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
 
படத்தில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் இணைந்து நடனம் ஆடும் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ``அடி, ஆடி அசையும் இடுப்பு-சோறு ஆக்கி வைக்கும் அடுப்பு...அட, ஏண்டி அதுக்கு உடுப்பு?-அதை எடுக்க சொல்லு விடுப்பு...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு, தேவா இசையமைத்து இருக்கிறார்.
 
இந்த பாடல் காட்சிக்காக, சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு பெரிய குடோனில் மூன்று பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் ஆடிப்பாடுவது போல் 4 நாட்கள் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.
 
`பெண் சிங்கம்' படத்தில் வேலு நாச்சியாரின் ஓரங்க நாடகமும் இடம்பெறுகிறது. வேலுநாச்சியாராக மீராஜாஸ்மின் நடித்த காட்சி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள கலையரங்கில் படமாக்கப்பட்டது.
 
கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பு வளையத்தில் உதயகிரணும், ராதாரவியும் மோதுகிற சண்டை காட்சி ஒன்றும் சமீபத்தில் படமானது.
 
இந்த படத்துக்காக கலைஞர் கருணாநிதி எழுதிய ``ஆகா! வீணையில் எழுவது வேணுகானமா? திருவாவடுதுறையின் தோடி ராகமா? திருவெண்காட்டு மகுடி நாதமா?'' என்ற பாடலும், கவிஞர் வைரமுத்து எழுதிய ``நீ சொன்னால் தேய் பிறை வளரும்...நீ தொட்டால் தீப்பொறி மலரும்'' என்ற பாடலும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படுகின்றன. அத்துடன், `பெண் சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
 
ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் என்.ஜெயமுருகன், ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் ஆகிய இருவரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் விவேக், ரிதீஷ் எம்.பி, சுதர்சனாசென், ரம்பா, ரோகிணி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மதன்பாப், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விஜய் ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், பார்த்திபனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவருமான பாலி ஸ்ரீரங்கம் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.
Read More

அமிதாப் ஜோடியாகிறார் குஷ்பு!

ஜூன் ஆர் தமிழ் படத்தை இயக்கியவர் ரேவதி வர்மா. இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

ஆப் கே லியே ஹம் என்ற இப்படத்தில் மாதவன், ஜெயாபச்சன், ரவீனா டன்டன், ஆயிஷா தாகியா நடிக்கின்றனர். இதையடுத்து மேட் டேட் என்ற படத்தை இந்தியில் இயக்குகிறார்.
இதில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இது பற்றி ரேவதி வர்மா கூறும்போது,
அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்க உள்ளேன். அப்பா வேடத்துக்கு அமிதாப் பச்சன்தான் பொருத்தமாக இருப்பார். அதனால் அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளேன். அவரது மனைவியாக குஷ்பு நடிப்பார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது என்றார்.
Read More

சுறா படம் பார்க்கப்போன விஜய் ரசிகர் தலை நசுங்கி பலி



நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்க்கப்போன ரசிகர் விபத்தில் தலை நசுங்கி மரணம் அடைந்துள்ளார்.

கோவை ஆர்.எஸ். புரம் சுக்கரவார் பேட்டை சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஈஸ்வரன்(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது தான் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார்.

ஈஸ்வரன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இன்று விஜய்யின் சுறா படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு தனது நண்பர்களோடு பூக்கடையில் உள்ள ஒரு தியேட்டரில் கட்அவுட்கள் கட்டியுள்ளார். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு சென்றார்.

இன்று அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்ட ரசிகர்கள் காட்சிக்காக டிக்கெட் வாங்கியிருந்தார். இதையடுத்து இன்று அதிகாலை படம் பார்க்க அதே பகுதியை சேர்ந்த நண்பர் குணசீலன அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பினார்.

சுக்ரவார் பேட்டை அருகே வரும் போது கரூரில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு மணல் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சைக்கிளில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி பைக் லாரிக்கு அடியில் சிக்கியது. லாரியின் பின் பக்க டயர் ஈஸ்வரன் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னால் இருந்த குண சீலன் கால் துண்டானது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விபத்தில் ஈஸ்வரன் இறந்த செய்தி கேட்டதும் தியேட்டரில் நின்ற நண்பர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரி வந்தனர். அவர்கள் ஈஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
Read More

'சுறா' படம் ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்


சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் நடிகர் விஜய் நடித்த சுறா படம் இன்று உலக முழுவதும் ரிலீஸ் ஆனது. நெல்லை ராம் தியேட்டரில் திரையிடப்பட்ட சுறா படத்தை காண ரசிகர் கள் தாரை தப்பட்டம் முழங்க பால்குடம் எடுத்து வந்தனர். சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் நடிகர் விஜய், நடிகை தமன்னா நடிக்கும் சுறா படம் இன்று உலக முழுவதும் வெளியானது. `சுறா' விஜய்க்கு 50வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காலையிலேயே திரையரங்குகளில் காத்திருந்தனர். படப்பெட்டி வந்ததும் அதற்கு மாலை அணிவித்து ஆட்டம் பாட்டத்துடன் அதை திரையரங்குக்குள் கொண்டு சென்றனர்.

ஒரு ரசிகர் பால்குடம் எடுத்து விஜயின் படத்திற்கு அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் பிரமாண்ட கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள், வாழை தோரணங்களால் அலங்கரிப்பட்டு இருந்தன. மேலும் தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.  திரையில் விஜய் தோன்றியதும் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும், விசில் அடித்தும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வடிவேலுவின் கலக்கல் காமெடியால் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர். படம் துவக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சிகளையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் கதை சென்றது. விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் வந்த தால் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் புல்லானது. டிக்கெட் கிடைக்காதவர்கள் நீண்ட வரிசையில் அடுத்த காட்சிக்காக காத்திருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்தனர்.
Read More

அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!




நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.
 
Read More

இந்தியாவிலேயே இவருதான்!

பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரிதான் பாடா படுத்துது ஆக்ஷன் படங்களோட நிலைமை! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளேதான்கிற மாதிரி வர்ற ஆக்ஷன் படங்களோட அந்தஸ்தை, கிரேன் வச்சு து£க்கும் போலிருக்கு கரண் நடிச்ச 'கனகவேல் காக்க' படம்!.
கதையின் தேவை கருதி கரண், தன்னையும் தன் இமேஜையும் அழித்துவிட்டு கதாபாத்திரத்தின் பலத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாகவோ, சாதாரண மனிதனாகவோ இல்லை. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியாக இருக்கிறார். இந்த துணிச்சல் அபூர்வமானது என்று பூடகமாக போட்டு தாக்கும் இயக்குனர் கவின் பாலா, படத்தில் துப்பாக்கி ஒன்றையும், பேனா ஒன்றையும் பாத்திரங்களாகவே உலவ விட்டிருக்கிறாராம். பொதுவாகவே தங்கள் பட ஹீரோவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் எந்த டைரக்டரும். ஆனால் கவின் பாலா கண்களில் தெரிகிற நம்பிக்கை, "இது நெசந்தான்யா" என்கிறது ஒவ்வொரு முறையும்! இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை இந்த படத்தில் கரண் செய்திருக்கிறார் என்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.
சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் பத்திரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் பா.ராகவன். "நான் இந்த படத்தின் வசனங்களில் வாழ தொடங்கி விட்டேன்" என்றாராம் படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். அப்படியரு விறுவிறுப்பான வசனங்களை எழுதியிருக்கிறாராம் பா.ராகவன்.
கவின்பாலா சொல்கிற விஷயங்களில் ஒரு அரிதாரமில்லாத உண்மை இருக்கிறது. எப்படி? இந்த படத்தின் ஒரு ஏரியாவை விலை பேசுவதற்காக ப்ரிவியூ பார்த்தாராம் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனின் சதீஷ்குமார். அப்புறம்? நானே எல்லா ஏரியா ரிலீசையும் பார்த்துக்கறேன் என்று மொத்தமாக அள்ளிக் கொண்டாராம்.
கவின்பாலாவின் வரவு, கலையுலகின் 'கும்ப மேளா'வாக இருக்கட்டும்
Read More