Pages

Wednesday, March 31, 2010











Read More

தம்பி இப்படி ஏன் செய்தான் என்று தெரியவில்லை.......



தம்பி இப்படி ஏன் செய்தான் என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்களை தீர்க்க உன்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயறபட தயாராக உள்ளதாகக்குறிப்படும் சித்தார்த்தனை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து இந்த உரையாடலை நிகழ்த்தினேன்.

தீபச்செல்வன் :
தமிழ் மக்களின அரசியலில் ஒன்றிணைவது என்பது மிக முக்கியமான விடயமாயிருக்கிறது. ஆரம்ப காலம் முதல் மிக முக்கிமான விடயமாக இருந்த பொழுதும் மே 17 இன் பின்னர் அதற்கான பல அவசயங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடர்ந்தும் ஒன்றினைதல் நிறைவேறாமலிருக்கிறது. நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இம்முறை பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வந்திருந்தன. முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நான் உரையாடும் பொழுது நீங்கள் இறுதி வரை இணைவதாக குறிப்பிட்ட பொழுதும் பின்னர் இணையவில்லை என்று குறிப்பிட்டார். நீங்கள் ஏன் அவ்வாறு இணைந்து போட்டியிடவில்லை?

சித்தார்த்தன் :
மே 17 எமது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை மே 17க்கு முன்னர், மே 17இற்கு பின்னர் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பார்க்க வேணடி உள்ளது. அதற்கு முன்பு நடந்தவற்றை இப்பொழுது அப்படியே விட்டு விட்டு இனி நடக்க வேண்டியவற்றைப் பார்க்க வேண்டும். இந்த யுத்த்தில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டடு லட்சக் கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டத்தை தொடங்கிய எல்லோருக்குமே ஒன்றுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். இதற்காக எல்லாவற்றையும் விட்டு நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் அவர்களிடம் நான் ஒன்றை குறிப்பிட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் தென்பகுதியில் ஒத்துள்கொள்ளாத தன்மை உள்ளது. அதனால் இந்தப் பெயரை நாம் மாற்ற வேண்டும் என்று கேட்டேன்.

இனி ஈழம் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. ஓன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைதான் நாங்கள் எல்லோரும் கேட்கிறோம். அதை நாங்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும். கடந்த காலத்தில் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொழுது அது தெற்கில் வேறு அர்த்த்தை கொடுத்து இறுதிவரை சரத்பொன்சேகாதான் ஜனாதிபதி என்ற நிலையிருந்து பின்னர் இறுதியில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகிந்த ஜனாதிபதியானார். தெற்கை எதிர்கொள்ள சமாளிக்க இந்த மாற்றயங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது.

சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்Nhதாம்.

தீபச்செல்வன் :
இந்த தேர்தலின் பிறகு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீங்கள் இணைந்து செறய்படுவீர்களா?

சித்தார்த்தன்
தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிருபாமா எங்களை சந்திக்கும் பொழுது ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு தீர்வுகளை முன் வைக்கிறீர்கள். அதை விடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து நியாமான தீர்வைnhன்றை முன்வைத்தால் நாங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்றித் தருவோம் என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு நாங்கள் இந்தத் தேர்தலில் இணைய முடியாத நிலையிருப்பதை சொல்லிய அதேவேளை தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்று சொன்னோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஒரு தீர்வை நோக்கிச செல்லும் அதேவேளை இப்பொழுது தேவைப்படுபவற்றை ஆரம்ப கட்டமாக செய்ய இணைந்து செயற்பட தயராக உள்ளோம்.

தீபச்செல்வன் :
அவசரகாலச்சட்டம் முதல் இன அழிப்பு, யுத்தம், வன்முறை என்று எல்லாமே நடந்தேறிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் அரசாங்கத்தில் இணைந்திருந்தீர்கள் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து இருந்தீர்கள். ஆதரவளித்தீர்கள். இவற்றை தடுக்க ஏன் உங்களால் முடியாமல் இருந்தது?

சித்தார்த்தன்
நான் 2001 இற்கு பிறகு பாராளமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியிருத்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுபோல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் ஞாயமில்லை என்று சொன்னோம். சோன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்Nhதம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்தா குறிப்பிட்டார்.

இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை; சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால்தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.

தீபச்செல்வன் :
இப்படி அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் பொழுது எதை உங்களால் சாதிக்க முடிந்தது?

சித்தார்த்தன்
1990ஆம் ஆண்டு நாங்கள் எப்படி நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டி வந்தது என்று குறிப்பிட வேண்டும். 90 இல் முள்ளி வாய்க்காலைப் போலத்தான் வவுனியா இருந்தது. தாண்டிக் குளத்திற்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்திய இராணுவக் காலமான அப்பொழுது நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலத்தியே இருந்தோம். கொழும்பிலும் மலை நாட்டிலும் என்று எங்கள் பாதுகாப்பிற்காக பிரிந்திருந்தோம். அப்பொழுது வவுனியா அச்சமான சூழலுடன் இருந்தது. நாங்கள் ஓமந்தைக்குச் சென்று வெள்ளைக்கொடி காட்டி மக்களை கூட்டி வந்தோம். நாங்கள் அன்று இதில் ஒதுங்கி இருந்திருந்தால் இது ஒரு தமிழ் பகுதி இல்லாமல் போயிருக்கும். அம்பாறையாக அல்லது திருகோணமலையாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.

வன்னியில் இன்று மக்கள் வாழ்வதாக இருந்தால் இராணுவத்தின் மத்தியில்தான் வாழ வேண்டும். அதுபோலத்தன் வவுனியா மக்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. அதற்காக இந்த மக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவதா? நூங்களும் அப்படித்தான். விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினைகளும் பிறகு இருக்கவில்லை. எங்களை விட மிக அதிகமாக இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் வேலை செய்திருக்கிறார்கள்.

நாங்கள் அழிவுதான் போராட்;டம் என்று பார்க்க வில்லை. எமது மக்களின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தவரை எங்கு எதிர்க்க வேண்டுமே அங்கு எதிர்த்துதான் இருக்கிறோம். வவுனியாவில் இராணுவ முகாங்களை அமைத்து அதைச் சுற்றி மக்களை குடியமர்த்த இராணுவம் இடமளிக்காத பொழுது அதை எதிர்த்து அங்கு மக்களை குடியமர்த்தியிருக்கிறோம். நாங்கள் இல்லா விட்டால் இங்கு பல குடியிருப்புகள் இல்லாமல் போயிருக்கும். எங்கள் மக்கள் வாழ வேண்டும். வாழத்தானே நாங்கள் போராட்டம் தொடங்கியிருந்தோம். அரசாங்கத்தத்துடன் சேர்ந்திருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் ஆனாலும் நாங்கள் சரியாகத்தான் பயணிகிக்கிறோம் என நினைக்கிறோம்.

அப்பொழுது நாங்கள் சந்திரிகாவுடன் கதைச்சு செய்ய வேண்டியதைச் செய்தோம். இப்பொழுது ஒரு விடயமாக இருந்தால் மகிந்தவுடன் கதைச்சு அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் விரும்பியோ விரும்பாமலே மகிந்ததான் இந்த நாட்டின் ஜனாதிபதி.

தீபச்செல்வன் :
இந்தத் தேர்தலில் சுயாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி என்பவற்றை உங்கள் நோக்குகளாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். யுத்தம் முடிந்த சூழலில் ஜனநாயகம் உன்மையிலே ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட முடியுமா? நீங்கள் குறிப்பிடும் சுயாட்சி என்பது எத்தகையது?

சித்தார்த்தன்
அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்கு இதுவரை எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. எனவே அதை எங்கள் நோக்கில் ஒன்றாக கொள்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு ஓரளவு ஜனநாயக் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் வெளியில் செல்லும் இடங்ககளில் பார்ததிருக்கிறேன். முக்கள் முன்பை விட பேசுவதற்கு துணிகின்றார்கள். ஆனால் முழுமையான உன்மையான ஜனநாயகம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். சுயாட்சி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அதிகாரபரவலாக்கத்தை பெற்றுக்கொள்ளுவதைக் குறிக்கிறது. அதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தீபச்செல்வன் :
வடக்கு கிழக்கு இணைப்பை கை விடுவது அல்லது அது பற்றி பேசுவது என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான நிலைப்பாடுகளாக மாறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

சித்தார்த்தன்
வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீமின்ற ஆனை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.

தீபச்செல்வன் :
விடுதலைப் புலிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் எனக் கூறப்பட்டது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் ஆயுதங்களை நீங்கள் கையளிக்கலாம் அல்லவா? கிழக்கில் யுத்த்தின் பின்னர் உருவாகிய நிலமைகளைப்போல வடக்கில் ஏற்படால் தவிhக்க இது உதவலாம். ஆதன் மூலம் ஜனநாயகத்தை மேலும் நீங்கள் வலியுறுத்தலாம் அல்லவா?

சித்தார்த்தன்

நீங்கள் சொல்லுவதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இப்பொழுது எந்த ஆயுதங்களையும் பயன்படுத்துவதில்லை. எங்கள் அலுவலகத்தில் ஆயுதங்களுடன் யாரும் திரிவதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் இப்பொழுது வெளியில் எந்த ஆயுதங்களுடனும் செல்வதில்லை. காவல்துறையினர் இங்கு பாதுகாப்பில் பணி புரிகிறார்கள். அவர்களைத் தவிர எனக்கு எந்த ஆயுதப் பாதுகாப்பும் இல்லை. ஏனென்னறால் ஆயுதச் சூழலற்ற ஜனநாயகச் சூழலே எங்களுக்கு தேவைப்படுகின்றது. அதை நான் வலியுறுத்துகிறேன்.

தீபச்செல்வன் :
தேர்தல் பிரசாரங்களின் பொழுது உங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் சில தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என உங்கள் வேட்பாளர்கள் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. எதற்காக அப்படி சொல்லுகிறீர்கள்?

சித்தார்த்தன்
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் அரசால் இறக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் அவைகளுக்கும் அரசின் தூண்டுதலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் போட்டியிடும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். வவுனியால் வன்னி அகதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்களை தேர்தல் கால பண்டமாக ரிஷாத் பயன்படுத்துகிறார். அது அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டி நிவாரணம். வவுனியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளின் விகித்தின்படி அவர்களுக்கு ஒரு ஆசனம் இருக்கிறது. அதை விடுத்து தமிழ் மக்களின் ஆசனங்களை பறிக்கும் நோக்கத்துடன் இப்படியான செயற்பாடுகள் நடக்கின்றன. இதனால் நாம் மக்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறோம்.
Read More
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் காதல் மலர்ந்தது எப்படி? சானியாமிர்சா பேட்டி
இந்தியாவில் இளம் டென்னிஸ் புயல் சானியா மிர்சா (23). இவர் தனது கவர்ச்சியான தோற்றம், சுறுசுறுப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை சிறை பிடித்துள்ளார். இவருக்கும், குடும்ப நண்பர் சோரப் மிர்சாவுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 28-ந்தேதி இந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. இரு வீட்டாரும் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்குக்கும், சானியா மிர்சாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி சோயிப்மாலிக் 2 வாரத்திற்கு முன்பு தனது சகோதரி, அவரது கணவர் ஆகியோருடன் ஐதராபாத்தில் உள்ள சானியாவின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது சானியாவின் தந்தை இம்ரான் மிர்சாவிடம், சானியாவை மணக்க ஆசைப்படுவதாக கூறினார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண வரவேற்பை 16 அல்லது 17-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சோயிப் மாலிக்குடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது பற்றி சானியா மிர்சா கூறியதாவது:-

எனது அத்தையின் வீடு துபாயில் உள்ளது. இதனால் எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவரது வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். அப்போது துபாயில் நடைபெறும் எங்களது உறவினர்கள் இல்ல விழாக்களில் கலந்து கொள்வேன்.

இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும், துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வருவார். நானும், அவரும் பல்வேறு விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டோம். அப்போது இருவரும் நண்பர்களாக பழகினோம். இந்த நட்பு நாளாக நாளாக காதலாக மாறியது. அவரது எளிமை, அடக்கம், கிரிக்கெட் ஆட்டத்திறமை போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதையும் ஒளிவு- மறைவின்றி பேசுவார். எளிதில் கோபம் வராது.

டென்னிஸ் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளார். எனது ஆட்டத்தை பற்றி நிறைய விமர்சனம் செய்வார். இதெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு திறமையாளர் எனக்கு கணவராக கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். நான் பாகிஸ்தான் வீரரை மணந்தாலும் இந்தியா சார்பில்தான் டென்னிஸ் ஆடுவேன். நான் பிறந்த மண்ணை மறக்கமாட்டேன். திருமணத்திற்கு பிறகு இருவரும் துபாயில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சானியாமிர்சா கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமையை சீர்குலைத்ததற்காக ஒரு ஆண்டு வரை கிரிக்கெட் ஆட சோயிப் மாலிக்குக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் ரூ.20 லட்சம் அபராதம் செலுத்தும் படியும் கூறியது.

அவர் தற்போது துபாயில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி உள்ளார். எப்போதாவது ஒரு முறைதான் பாகிஸ்தான் செல்கிறார். கடந்த 2002-ம் ஆண்டில் ஐதராபாத் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனது. நிச்சய தார்த்தத்தை முறித்த சோயிப் மாலிக்- சானியா இருவரும் திருமண பந்தத்தில் இணைவது வித்தியாசமான ஒன்று.
Read More

Tuesday, March 30, 2010

ஏப்ரல் 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடியவர்கள்....


ஏப்ரல் 1-ம் தேதி எப்படி முட்டாள் தினம் ஆனது?

ஏப்ரல்-1 முட்டாள் தினம். இந்த தினம் நாளை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் எப்படி வந்தது இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.

பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய தேதிகளை புத்தாண்டாக கொண்டாடினார்கள்.


அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களை குறிப்பிட ஜுலியன் காலண்டர் என்ற பழங்கால காலண்டரை பயன்படுத்தி வந்தனர். அதிலும் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதியாக இருந்தது.

1582-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13-ம் கிரிகோரி ஜார்ஜியின் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1-ந்தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இனி மக்கள் இந்த காலண்டரை தான் பின்பற்ற வேண்டும் என்றும் போப் ஆண்டவர் உத்தரவிட்டார்.

இதை பிரான்ஸ் நாடு உடனே ஏற்றுக்கொண்டது. பிரான்சு மன்னர் அந்த நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினார்கள்.

வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன.


இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரை பின் பற்றவில்லை. சில பகுதி மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்டு இருக்கும் தகவலே சென்றடைய வில்லை. எனவே அவர்கள் முன்பு போல ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருந்தனர்.

விவரம் தெரியாமல் இவர்கள் இன்னும் ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் என்று புதிய காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள்.

எனவே எப்ரல் 1-ந்தேதி புத்தாண்டு கொண்டாடியவர்களை அவர்கள் முட்டாள்களாக கருதினார்கள். கேலி செய்து ஏராளமாக பேசினார்கள்.

கால போக்கில் ஏப்ரல் 1-ந்தேதி என்றாளே முட்டாள்கள் தினம் என்று ஆனது. அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும் மாற்றி கொண்டனர்.

ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் ஆனது.

Read More

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மற்...



மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மற்றுமொரு லீக் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 4 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 போட்டித் தொடரின் 27 ஆவது லீக் சுற்றுப் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தியாவின் மும்பை பார்பரோன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ஷோன் மார்ஷ் 57 ஓட்டங்களையும், பியுஷ் சவ்லா 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லசித் மாலிங்க 19 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுகளையும், சஹிர் கான் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில், ஷிக்கர் தவான் 50 ஓட்டங்களையும், சப்ரூ திவாரி 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில், ரவி புபாரா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மிகச் சிறந்த பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற லசித் மாலிங்க போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

சானியாவும், மலிக்கும் விரைவில்........


இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஷாவும், பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சொஹெப் மலிக்கும் விரைவில் திருமண பந்தத்தில் விரைவில்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது மகள் சானியா, பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் மலிக்கை கரம் பிடிக்க உள்ளதாக சானியாவின் பெற்றோர் இந்திய ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளனர்.

திருமணத்தின் பின்னர் சானியாவும், சொஹெப் மலிக்கும் டுபாயில் வாழத் தீர்மானித்துள்ளதாக, சானியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கையில் ஏற்பட்டுள்ள உபாதை பூரணமாக குணமாகும் வரையில் சானியா டென்னிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

ஹைதரபாத்தில் திருமணமும், பாகிஸ்தானின் லாகூரில் திருமண வரவேற்பு வைபவமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சானிய மிர்ஷாவிற்கு ஏற்கனவே குடும்ப நண்பர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More

34-வது மாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குதித்தாராம் விவேக் ஒபராய்,

பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் நடித்த `பிரின்ஸ்` என்ற இந்தி படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி சென்னை வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“பிரின்ஸ், அதிநவீன தொழில்நுட்பங்களுடன், `ஹாலிவுட்` படங்களுக்கு நிகராக தயாராகி இருக்கிறது. இது, ஞாபகசக்தியை இழந்த ஒரு இளைஞனின் கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும்படி இருக்கும். படத்தில் 3 கதாநாயகிகள் இருக்கிறார்கள். கதைப்படி, மூன்று பேருமே என்னை காதலிக்கிறார்கள்.

இந்த படத்தின் சண்டை காட்சிகளில், `டூப்` போடவில்லை. நானேதான் நடித்தேன். 34-வது மாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குதிக்கிற காட்சியில், நானே துணிச்சலுடன் நடித்தேன்`` என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “நிஜவாழ்க்கையில் நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயார் சென்னையில்தான் வசிக்கிறார். நான் சென்னையில்தான் பிறந்தேன். எனக்கு இதுவரை ஒரு `கேர்ள் ப்ரெண்ட்`கூட இல்லை. என் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு வரப் போகிற பெண்ணுக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு சமூக சேவையில் ஈடுபாடு இருக்கிறது. அந்த ஈடுபாடு, என்னை திருமணம் செய்துகொள்கிற பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.

நான் சமூக சேவைக்காக அமைப்பொன்றைத் துவக்கியுள்ளேன். அந்த அமைப்பின் பெயர், `தேவி.` பெண் சிசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிரான அமைப்பு இது. இந்த இயக்கம் சார்பில் 1200 பெண் குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறேன். அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது போல், இலவசமாக கல்வியும் கற்றுத்தரப்படுகிறது. இந்த அமைப்பை நடத்தி வருவதற்காக பெருமைப்படுகிறேன்..” என்றார்.

விவேக் ஓபராய் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா சுவாமிகளின் தீவிர பக்தர் என்பதால் சாமியார் பற்றிய கேள்விகள் நிருபர்களிடம் இருந்து சராமரியாக பறந்தது. அனைத்திற்கும் பொறுமையாகவே பதில் அளித்தார் விவேக்.

“நான் நித்யானந்தா சாமிகளின் ஆசிரமத்துக்கு சென்றது உண்மை. கோவிலுக்கோ, அல்லது கிறிஸ்தவ தேவாலயத்துக்கோ, அல்லது மசூதிக்கோ செல்வது மன அமைதிக்காகத்தான். அப்படித்தான் நான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றேன். சமீபத்தில் அங்கு எழுந்த பிரச்சினை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அப்படி சொன்னால், அதை அரசியல் ஆக்கிவிடுவார்கள்” என்றார்.

“போலி சாமியார்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று நிருபர்கள் கேட்க.. “ஒருவர் போலியா, இல்லையா? என்பது கடவுளுக்குத்தான் தெரியும். எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. நாம் ஒருவரை குற்றம்சாட்டுவதற்கு முன், அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன் நாம் தூய்மையானவர்தானா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்” என்றார் விவேக்.

“பொதுசேவையில் அதிகமாக ஈடுபடும் நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடாது?” என்று நிருபர்கள் கேட்க.. “அரசியல் எனக்கு தெரியாது. அதில் எனக்கு ஆர்வம் இல்லை. அரசியலில் சேர்ந்துதான் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதில் சேராமலும் சேவை செய்ய முடியும்” என்று தெளிவாகவே பதில் சொன்னார்.

“நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இங்கே உள்ள மணிரத்னம், பாலா, கவுதம் மேனன், செல்வராகவன் போன்ற டைரக்டர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர்களின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது” என்றார் விவேக்.

“உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகை யார்?” என்ற மிக முக்கியமான கேள்விக்கு, “திரிஷா” என்று பட்டென்று பதில் வந்தது. “ஆயுத எழுத்து` படத்தை பார்த்து அசந்துபோனேன். திரிஷா இப்போது இந்தி பட உலகுக்கு வந்து இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு இந்தி படத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

“பிரின்ஸ்` படத்தில் ஒரு முத்த காட்சியை படமாக்கியபோது, 18 `டேக்` எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?” என்று நிருபர்கள் கேட்க.. “சுற்றிலும் படப்பிடிப்பு குழுவினர் 300 பேர் இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணை காமிரா கோணத்துக்கு ஏற்ப முத்தமிடுவது என்றால், அது கஷ்டமான விஷயம்தானே... அந்த முத்தக் காட்சியில் நடித்தபோது கதாநாயகிதான் எனக்கு தைரியம் சொன்னார். அவர் சந்தோஷப்படுகிற மாதிரி அந்த காட்சியில் நான் நடித்து முடித்தேன்`` என்று முத்தாய்ப்பாக பதில் சொல்லி முடித்தார் விவேக் ஓபராய்.
Read More

என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்..”என்கிறார் நயன்தாரா

“சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள்...." என்கிறார் நயன்தாரா.

தன்னைச் சுற்றிய வதந்திகள், பிரபுதேவாவுடனான காதல் பற்றி சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”2003-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தோடு எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனால் காலம் என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்திடுச்சி. ஏகப்பட்ட பெயர், புகழ், பணம் கூடவே வதந்தியும்தான்!

என் படம் வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவேன். தோல்வியடைந்தால் ரொம்பவே வருத்தப்படுவேன். இடைப்பட்ட காலத்தில் அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.

தமிழில் நான் நடித்த ‘ஆதவன்’, மலையாளத்தில் ‘பாடிகார்ட்’, தெலுங்கில் ‘அடூர்’ ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வெற்றிப் படமாக அமைந்தன. இதைவிட ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு, அதுவும் ஹீரோயினுக்கு பெரிய சந்தோஷம் வேறென்ன வேணும்..? இந்த படங்களில் நடிக்கும்போதே அவை ஜெயிக்கும் என்று நம்பினேன். என் கணிப்பு பலித்துவிட்டது.

என் திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு என்னிடத்தில் இப்போது பதில் இல்லை. திருமணம் முக்கியமானது. அது நடக்கும்போது நடக்கும். ஒரு வேளை அது காதல் திருமணமாக இருந்தாலும் என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணனின் சம்மதத்துடன்தான் நடக்கும்.

சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்கூத்தி அணிந்ததை கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கிவிட்டார்கள். மூக்குத்தி போட்டால் என் முகத்திற்கு நன்றாக இருக்கும் என்று பலரும் சொன்னதால்தான் போட்டேன்.

குறிப்பிட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்றும் நான் சொல்வதில்லை. கதையும் கேரக்டரும் நல்லாயிருந்தால், எனக்கு ஸ்கோப் இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். எனக்கு எந்த பேதமும் இல்லை.

என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் இந்த வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்..” என்று அந்தப் பேட்டியில் மனம் திறந்து சொல்லியிருக்கிறார் நயன்ஸ்..!

நம்புவோமாக..!
Read More

சச்சின் "பேட்டை` பயன்படுத்தி ரன் வேட்டை நடத்தியுள்ளார் ஹர்பஜன்.....

டெக்கான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சச்சின் "பேட்டை` பயன்படுத்தி ரன் வேட்டை நடத்தியுள்ளார் ஹர்பஜன்.

மும்பை இந்தியன், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி, நேற்று முன் தினம் மும்பையில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, முதல் 17 ஓவர்களுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதற்குப் பின் களமிறங்கிய ஹர்பஜன், 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களும் அடங்கும். ஹர்பஜன் அதிரடியால் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இது குறித்து ஹர்பஜன் பேசும்போது, டெக்கான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன் குவித்தது மகிழ்ச்சி அளித்தது. இப்போட்டியில் சச்சினின் "பேட்டை` பயன்படுத்தி ஆடினேன். இதற்கு அனுமதி அளித்த சச்சினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.பி.எல்., அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அசத்தி வருகிறார். கிரிக்கெட்டின் எந்த பரிமாணமாக இருந்தாலும், சச்சின் சிறப்பாக விளையாடும் திறமை பெற்றவர். அவர் "டுவென்டி-20` உலககோப்பை தொடரிலிருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது. சர்வதேச அளவில் இவ்வகை போட்டிகளில் சச்சின் மீண்டும் பங்கேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜனுக்கு அபராதம்

மும்பையில் நடந்த போட்டியில், ஹர்பஜனுக்கு, ஐ.பி.எல்., நிர்வாகம் ரூ. 6.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இப்போட்டியில் சுமனை "கேட்ச்` செய்து அவுட்டாக்கிய ஹர்பஜன், அவர் மனம் புண்படும் வகையில் திட்டியுள்ளார். இது விதிமுறைப்படி குற்றமாகும். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

டேவிட் வோர்னரின் அபார சதம்.........



இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டித் தொடரின் மற்றுமொரு லீக் சுற்றில் கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணியை 40 ஓட்டங்களினால் வீழ்த்தி, டெல்லி டெயார்டெவில்ஸ் இலகு வெற்றியீட்டியுள்ளது.

டெல்லி அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரின் அபார சதம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் காம்பீர், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய டெல்லி டெயார்வில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 177 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் டேவிட் வோர்னர் அட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும், போல் கொலிங்வுட் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சார்ல் லெங்வெட் இரண்டு விக்கட்டுகளையும், கிறிஸ் கேயில் மற்றும் இசாத் சர்மா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதில், கிறிஸ் கேய்ல் 30 ஓட்டங்களையும், டேவிட் ஹாசீ 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அன்ட்றூ மெக்டொனால்ட் மற்றும் உமேஸ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வோர்னர் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

டேவிட் வோர்னரின் அபார சதம்.........




இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி‐20 கிரிக்கட் போட்டித் தொடரின் மற்றுமொரு லீக் சுற்றில் கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணியை 40 ஓட்டங்களினால் வீழ்த்தி, டெல்லி டெயார்டெவில்ஸ் இலகு வெற்றியீட்டியுள்ளது.

டெல்லி அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரின் அபார சதம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் தலைவர் கௌதம் காம்பீர், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய டெல்லி டெயார்வில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 177 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் டேவிட் வோர்னர் அட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும், போல் கொலிங்வுட் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சார்ல் லெங்வெட் இரண்டு விக்கட்டுகளையும், கிறிஸ் கேயில் மற்றும் இசாத் சர்மா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொல்கொட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதில், கிறிஸ் கேய்ல் 30 ஓட்டங்களையும், டேவிட் ஹாசீ 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அன்ட்றூ மெக்டொனால்ட் மற்றும் உமேஸ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வோர்னர் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வியாழக்கிழமையன்று யாழ்ப்பாணம் செல்ல உள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக தனது விஜயத்தை ஒத்திவைத்திருந்தார். எனவே யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்றும் ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, March 29, 2010

விஜய்க்கு அடுத்ததாக அக்ரிமெண்ட் போட்ட பூஜா

பூஜாவின் கல்யாண அக்ரிமெண்ட்..!
[ Monday, 29 March 2010, 05:49.02 PM GMT +05:30 ]
'நான் கடவுள்` படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறப் போகும் கனவில் இருக்கும் பூஜாவுக்கு, தற்போது கல்யாணக் கனவும் வந்திருக்கிறதாம்.

இது அவரது தந்தையின் அன்புக் கட்டளையால் உருவான கனவாம். “வயசாயிட்டே போகுது.. எந்தப் பக்கம் போனாலும் எல்லா ஹீரோவும் நைட் பார்ட்டிக்கு மட்டும்தான் உன்னை பிக்கப் பண்ணிட்டுப் போறாங்க.. இப்படியே போனா நல்லாயிருக்காது.. ஒழுங்கா கல்யாணத்தை முடிச்சிட்டு செட்டிலாகப் பாரு..” என்ற தனது தந்தையின் பேச்சைக் கேட்டு பூஜா மனமுருகினாலும், அப்பாவிடம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்..

“எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை வர்ற ஜூன் மாசத்துக்குள்ள என் கண்ணுல காட்டிரணும்.. அப்படிக் காட்டிட்டா பேச்சுமூச்சில்லாம அவருக்குக் கழுத்தை நீட்டுறேன்.. அப்படி ஜூன் மாசத்துக்குள்ள மாப்பிள்ளை கிடைக்கலைன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு கேமிரா முன்னாடி மாப்பிள்ளைகளோட டூயட் பாடிக்கிறேன். என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.” என்று அப்பாவிடம் கண்டிஷனாக தனது கண்டிஷனை சொல்லியிருக்கிறாராம் பூஜா.

“இது எனக்கும் எங்க அப்பாவுக்கும் இடைல இருக்குற ஜென்டில்மெண்ட் அக்ரீமென்ட்..” என்கிறார் பூஜா..!

Read More

Wednesday, March 24, 2010


Read More

சௌந்தர்யா திருமணம் எதிர்வரும் செப்ரம்பர் மாதம்



ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் நடக்கிறது. ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17ஆம் திகதி நிச்சயம் செய்யப்பட்டது.
Read More

ரஞ்சிதாவின் பாலியல் சர்ச்சையால் இவன் படத்தில் நடிக்க முடியாத நிலை.

ராவண் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கப்பட்டுள்ளார்: மணிரத்தினம்

தொடர்பு கொண்டு எனது காட்சிகளை நீக்க வேண்டாம். எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம் ரஞ்சிதா. பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், மணிரத்னம் தனது படத்திலிருந்து நீக்கிவிட்டதையடுத்தே ரஞ்சிதா மேற்படி கேட்டுள்ளாராம்.

. விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்க, மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ரஞ்சிதா தொடர்பான காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றாலும், அவர் டப்பிங் பேச வேண்டியுள்ளது. சில 'பேட்ச் காட்சிகளுக்கும்' ரஞ்சிதா வரவேண்டியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ராவண் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.

ஆனால் அதற்குள் நித்யானந்தனுடன் அவர் புரிந்த செக்ஸ் லீலைகள், அதன் பின்னணிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளார்.

சொன்னபடி வரவில்லையாம். இப்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால், ரஞ்சிதாவின் பாத்திரத்துக்கு புதிதாக வேறு ஒரு நடிகையை வைத்து காட்சிகளை எடுக்கத் தீர்மானித்துள்ளார் மணிரத்னம். ரஞ்சிதா படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதையும் பத்திரிகைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்



Read More
குதிரையிலிருந்து விழுந்த சரத்குமார்
[ 2010-03-24 18:12:29 ]
சாரதி படத்தின் ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக குதிரையிலிருந்து விழுந்தார் சரத்குமார். இதில் அவரது இடுப்புப் பகுதி எலும்பு உடைந்தது.
Read More

நித்தியனந்தரின் திருவிளையாடல் அமெரிக்கவிலுமா?


நித்தியானந்தாவின் அமெரிக்க விஜயங்களில் நடிகைகளின் நிர்வாண நடனம்?

சாமியார் நித்தியானந்தா அமெரிக்காவில் உள்ள தனது ஆசிரமத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவருடன் 2 நடிகைகள் தவறாமல் செல்வார்களாம். அப்போது அங்கு நிர்வாண நடனமும் தவறாமல் நடக்கும் என்று புதிய தகவல் கசிந்துள்ளது. நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் நீண்டு கொண்டே போகின்றன. அந்த வகையில் தற்போது புதிய செய்தி ஒன்று கசியத் தொடங்கியுள்ளது. அது நித்தியானந்தாவின் அமெரிக்க பயணங்கள் குறித்தது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நித்தியானந்தாவுக்கு ஒரு ஆசிரமம் உளளது. இந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் நித்தியானந்தா. அப்போதெல்லாம் இரு நடிகைகள் அவருடன் செல்வார்களாம். ஆசிரமத்தில் நடைபெறும் பார்ட்டிகளின்போது இந்த இரு நடிகைகளும் நிர்வாண நடனம் ஆடுவது வழக்கம் என்று அந்த செய்தி கூறுகிறது. இந்த இரு நடிகைகளும் பல்வேறு தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளனர். இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளனர். அமெரிக்காவுக்குப் போய் விட்டால் டிரஸ்ஸையும் மாற்றி விடுவாராம் நித்தியானந்தா. டெனிம் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் மட்டுமே அவர் அணிவாராம்.

Read More

கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு

கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமல்ல, இணைந்து வாழ்வதும் குற்றமல்ல என்று நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்த கருத்துக்களை கிட்டத்தட்ட 5 மணி நேரம் முன்வரிசையில் உட்கார்ந்து மகிழ்ச்சி பொங்க கேட்டாராம் நடிகை குஷ்பு. தன் மீது தமிழக கோர்ட்களில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி குஷ்பு தொடர்ந்த சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டது.

இந்த விசாரணையையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு கோர்ட்டுக்கு வந்து இருந்தார். சல்வார் கமீஸ், துப்பட்டா அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இங்கு மனுதாரர்கள் அமர வைக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு காரணமாக இங்கு யாரையும் அமர வைக்க மாட்டார்கள். ஆனால் குஷ்புவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டிருந்தது.

அங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் உட்கார்ந்து விவாதத்தை கேட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கருத்து தெரிவித்த போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பூத்ததாம்.

நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாராம் குஷ்பு.

Read More

புன்னகை





புன்னகை
நீ புன்னகைத்தாய்
உன் முகத்தில்
பல வர்ணப்
பட்டாம்பூச்சிகள்
சிறகடித்தன -அதில்
என் மனம் சிறைப்பட்டது
பதிலுக்கு புன்னகைத்தேன்
பச்சை கொடி காட்டினாய்
என் புன்னகைக்கு

பவளக் கொடியை
பதம் பார்க்க எத்தனித்தேன்
முடியவில்லை -ஏன்
மெளனித்து போனது
அவள் மெளன அலைகள்
மனமுடைந்து போனேன்
என் மனச் சிறையில்

ரோஜாவில் முள்ளிருப்பது
உண்மை -அதிலும்
பெண் ரோஜாவில்
புன்னகைத்தான் முள் என்று
இன்று நான் தெரிந்து கொண்டேன்
என் இதயத்தை காயப்படுத்திய
பின்புதான் நான் உன்னையே
புரிந்துகொண்டேன்

Read More

Monday, March 22, 2010

இப்படியும் சிலர்














Read More

Friday, March 19, 2010