Pages

Monday, April 12, 2010

திருநங்கைகளின் தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும் ..சினேகா




சேலம் நேருகலைய ரங்கத்தில் கடந்த 3 நாட்களாக திருநங்கைகளின் சங்கமம் விழா நடந்து வந்தது. இதில் தமிழகம், ஆந்திரம், கேரளா, மும்பை உள்பட பல மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். அனைவரும் விதவிதமான உடை அணிந்து நடந்து வந்து வியக்க வைத்தனர். பின்னர் இவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் பதில் கூறினர்.

இவர்களில் மிஸ் இந்தியா 2010 ஆக கேரளாவை சேர்ந்த சபீதா (வயது 37) தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நடிகை சினேகா கிரிடம் வைத்து நினைவு பரிசு வழங்கினார். 2 வது இடத்தை சேலம் மணிமேகலையும், 3ஆம் இடத்தை ரமயாவும் பிடித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட நடிகை சினேகா கூறியதாவது,

எனக்கு திருநங்கைகளை பிடிக்கும். நான் சிறுமியாக இருந்த போது எனது தாயார் திருநங்கைகளை அழைத்து திருஷ்டி சுற்றி போடுவார்கள். நான் மும்பையில் பிறந்தவள். அங்கு திருநங்கைகளை அழைத்து வந்து உபசரிப்பார்கள்.


குழந்தைகள் பிறந்தால் திருநங்கைகளை அழைத்து வந்து ஆசி வாங்குவார்கள். திருநங்கைகள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அவர்களது தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். அவர்கள் சமுதாயத்தில் நல்ல பெயரை எடுக்க வேண்டும். அவர்கள் நாம் கேலி பேசாமல் ஊக்கப்படுத்திட வேண்டும். இன்றைய நாளை என்னால் மறக்க முடியாது என்றார்.

விழாவில் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட சபீதா கூறியதாவது:

கேரளாவை சேர்ந்த நான் தற்போது சென்னை நந்தனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். மிஸ் இந்தியா கிடைத்தது மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருநங்கைகளாலும் எதையும் சாதிக்க முடியும். இதை நாங்கள் நிரூபித்து வருகிறோம். மற்ற திருநங்கைகளும் தங்களின் தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வியிலும் சிறந்து விளங்க அவர்களை கேட்டு கொள்கிறேன் என்றார்.

Read More

பிரச்னைகள் வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி.


பிரச்னைகள் வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி. அதை நசுக்கி தூக்கி எறிவேன் என்று வடிவேலு கூறியுள்ளார்.

கென் மீடியா தயாரித்துள்ள படம் அம்பா சமுத்திரம் அம்பானி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. பாடல் சிடியை வடிவேல் வெளியிட விவேக் வெளியிட்டார்.

விழாவில் பேசிய வடிவேலு,

நானும், விவேக்கும், கருணாசும் நிறைய படங்களில் கூடி கும்பமியடித்திருக்கிறோம். இப்போது தனித்தனியாக சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. மக்கள் எப்போதும் டென்ஷனோடு அலைகிறார்கள். மாலையில் வீட்டுக்குச் சென்றால் குடு:மபத்தோடு பார்த்து சிரிப்பது எங்கள் நகைச்சுவை காட்சிகளைத்தான்.

நகைச்சுவை சேனல்கள் மக்களுக்கு ரிலாக்சை கொடுக்கிறது. எனக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி நசுக்கி தூக்கி எறிய வேண்டியதுதான் என்றார்.

Read More

சிலுக்கு -ஏன் நக்சலைட் ஆக விரும்பினார்?




ழுபதுகளின் இறுதியில் வண்டிச்சக்கரம் படம் மூலமாக தமிழ்சினிமாவுக்கு வந்தார் சிலுக்கு. (சில்க் ஸ்மிதா) விஜயவாடா விஜயலஷ்மி என்ற பெயரை சினிமாவுக்காக சில்க்ஸ்மிதா என்று மாற்றி வைத்தவர் நடிகரும் கதாசிரியருமான வினுசக்கரவர்த்தி.

இவர்தான் சிலுக்கை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

18 வயதிலேயே திருமணம் ஆன பிறகும் கூட வறுமையிலிருந்து மீள முடியாமல், தூரத்து உறவு அத்தையுடன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த சிலுக்கு பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டார்.



அப்போதெல்லாம் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஏலம் போனது என்பது எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள்.

சிலுக்கு இல்லாத காரணத்தால் ரஜினி படத்தையே ஒரு முறை விநியோகிஸ்தர்கள் வாங்க மறுத்தார்கள். பின் சிலுக்குடன் ரஜினி ஆடும் ஒரு பாடலை இணைத்து வெளியிட்டுயிருக்கிறார்கள். சிலுக்கு தான் ஆசைப்பட்டு நடிக்க விரும்பியது பாக்கியராஜ் உடன். நடித்த படம், ரகசிய போலீஸ்.

சிலுக்கு கடைசி வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்த சிலுக்கு தன் தூரத்து உறவினரான டாக்டர் ஒருவருடன் வாழ்ந்திருக்கிறார்.


சிலுக்கு தன் வாழ்நாளில் பலருக்கு உதவியாய் இருந்துள்ளார். சில நக்சலைட் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

நக்சலைட் ஆட்கள் அக்கா என்று அழைக்கும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது.


நடிக்கை வரவில்லையென்றால் நக்சலைட்

ஆகியிருப்பேன் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார். நக்சலைட்டுடன் அவர் ஏன் தொடர்பு வைத்திருந்தார். அவருக்கு ஏன் நக்சலைட் மீது இத்தனை ஆர்வம்? என்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.

திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது.

சிலுக்கினால் பயனடைந்தவர்கள் பலர் என்றாலும் கடைசிவரை அவருக்கு நண்பர்களாய் இருந்தவர்கள் மனோரம்மா, லட்சுமி, வடிவுக்கரசி, வினு சக்கரவர்த்தி, ஸ்ரீவித்யா, கங்கை அமரன் போன்ற சிலர் தான்.

சிலுக்கின் இறுதி ஊர்வலத்திற்கு
வந்தவர்களும் இவர்கள் மற்றும் ஒரு சிலர் தான்.

-இப்படிப்பட்ட பேரலையும்,பெரும் சோகமும் நிறைந்த சிலுக்கின் வாழ்க்கை சினிமாவாகிறது.

இந்தி, தமிழில் ஏக்தாகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்யா இயக்குகிறார். சிலுக்கு கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Read More

சச்சின் முதலிடம்



உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 59 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

இதன்மூலம் தெண்டுல்கர் அதிக ரன் எடுத்திருந்த ஜேக்காலிசை முந்தினார். அவர் 11 ஆட்டத்தில் விளையாடி 512 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். காலிஸ் 11 ஆட்டத்தில் 501 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் தெண்டுல்கர் ஐ.பி.எல். தொடரில் ஆயிரம் ரன்களை கடந்தார். கில்கிறிஸ்ட், ரெய்னா, ஹைடன், காலிஸ், ரோகித்சர்மா, காம்பீர் ஏற்கனவே ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர்.

Read More

அஜித்தும் கார் ரேசும்










Read More

'முன் தினம் பார்த்தேன். மறுதினம் காணோமே'





'முன் தினம் பார்த்தேன். மறுதினம் காணோமே' என்கிற அளவுக்கு ஆகிவிட்டது முன்தினம் பார்த்தேனே என்ற படத்தின் ரிசல்ட்! கவுதம் மேனனின் அசோசியேட் மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த படம் அவ்வளவு மோசமில்லை என்கிறார்கள் பார்த்தவர்கள். பத்திரிகைகளும் தன் பங்குக்கு சில சிட்டிகை சர்க்கரையை அள்ளிப் போட்டது விமர்சனத்தில். ஆனாலும் வந்த வேகத்தில் தியேட்டரிலிருந்து பறந்துவிட்டது படம்.

ஒரு பக்க தோசையாவது முறுகலா இருக்கட்டும்னு நினைச்சாரோ என்னவோ, படத்தை தெலுங்குக்கு கொண்டு போக முடிவெடுத்திருக்கிறாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன். தமிழ்லேயே ததிங்கிணத்தோம். போட்ட பணத்தில கால்வாசி கூட திரும்பல. இதில தெலுங்குக்கு வேற செலவு செய்யணுமா என்று மனசை கலைக்க முயல்கிறார்களாம் சிலர். ஆனாலும் நினைச்சா நினைச்சதுதான் என்கிறாராம் நாராயணன்.

தமிழில் மொக்கையான பல படங்களை ஓட வைத்த பெருமை ஆந்திர ரசிகர்களுக்கு உண்டு. அப்படியாவது இந்த படத்திற்காக போட்ட பணத்தை திருப்பி எடுத்தால் சந்தோஷம்தான்

Read More