Pages

Wednesday, April 14, 2010



கடந்த சில தினங்களாகவே சினிமா விழாக்களில் ஒரே அரசியல் வாசனை! நெல்லைப்பட்டினம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திமுக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டார். மறுநாளே தமிழ் புத்தாண்டு தினத்தன்று (அரசு மாற்றினாலும், மனசு ஏத்துக்கணுமே) பிலிம் சேம்பரில் நடைபெற்ற காதலாகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. கலந்து கொண்டவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.'டாண்' என்று குறித்த நேரத்தில் 'என்ட்ரி' கொடுத்தார் அழகிரி. வளவளவென்ற பேச்சுக்கும் இடமில்லை அங்கே. மேடை கொள்ளாமல் விஐபிகள் நிறைந்திருந்தாலும், பேச அனுமதித்தது மூவரை மட்டுமே. கவிப்பேரரசு வைரமுத்து, ஆடியோவை பெற்றுக் கொண்ட பல்கலை. துணைவேந்தர் பச்சைமுத்து, மற்றும் அழகிரி மட்டுமே!

"அண்ணன் அழகிரி பழைய பாடல்களை ரசிக்கக்கூடியவர். இசையின் காதலர். என் வீட்டில் இருக்கிற 500 பழைய பாடல்களும் அவர் கொடுத்ததுதான் என்றவர், படத்தின் பாடல்கள் குறித்து பேசும்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹைனாவுக்கும் ஒரு அட்வைஸ் கொடுத்தார். இசையில் மொழி அமுங்கிவிடக் கூடாது. பழைய பாடல்களின் வெற்றி அதில்தான் அடங்கியிருந்தது. நீங்கள் கொஞ்சம் வாத்திய கருவிகளின் ஒலியை குறைத்துக் கொண்டால் நல்லது" என்றார்.

நான் பழைய பாடல்களை ரசிப்பேன் என்று கவிப்பேரரசு சொன்னது உண்மைதான். இப்போது திரையிடப்பட்ட பாடலை கேட்டபின் இனி புதுப்பாடல்களையும் ரசிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறேன் என்ற அமைச்சர் அழகிரி, ரத்ன சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டது கொஞ்சம் ஏமாற்றம்தான்!
Read More

2வது முறையாக விஸ்டன் விருது வென்றார் சேவக்..


கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் 'விஸ்டன்' இதழ் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இவ்விருதை, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஷேன் வார்ன், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிளின்டாப் ஆகியோர் பெற்றுள்ளனர்.

கடந்தமுறை இது, இந்திய வீரர் சேவக்கிற்கு கிடைத்தது. இதனிடையே இந்த ஆண்டு சிறந்த பேட்ஸ்மேன் விருதுக்கான இறுதிப்பட்டியலில் சேவக்குடன், இங்கிலாந்தின் ஸ்டிராஸ் மற்றும் இலங்கையின் தில்ஷன் ஆகியோர் இருந்தனர்.

இதில் டெஸ்டில் சராசரி 70, ஸ்ட்ரைக் ரேட் 108.9 மற்றும் ஒருநாள் போட்டியில் சராசரி 45, ஸ்ட்ரைக் ரேட் 136.5 என வைத்துள்ள சேவக், சிறந்த வீரருக்கான விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தட்டிச் சென்றார்.

சேவக் தவிர, இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாட் பிரையர், சுழற் பந்து வீச்சாளர் சுவான், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆகியோரையும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு, விஸ்டன் இதழ் தேர்வு செய்துள்ளது.
Read More

விபூதி பூசாத விஜய் ....



மத விஷயத்தில் விஜய்யா இருந்தா என்ன? அஜய்யா இருந்தா என்ன? கொடி து£க்கணும்னு முடிவு பண்ணிட்டா தயங்காத குரூப் ஒன்று தமிழ்நாட்ல இருக்கு. அதுவும் சினிமா ஆளுங்க என்றால் கண்ணிலே லென்ஸ் மாட்டிக் கொண்டு பார்க்கிற விஷயத்தில இந்து மக்கள் கட்சிக்கு இணை அதுவேதான். இந்த கட்சியின் பிரமுகர் கண்ணன் என்பவர் புது பிரச்சனை ஒன்றை கிளப்பியிருக்கிறார். விஜய் புதிதாக நடிக்கவிருக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. முதல் நாள் பூஜை புனஸ்காரங்களோடு படப்பிடிப்பை துவங்கினார்கள். திருவிடை மருது£ரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அர்ச்சனை செய்ய முடிவெடுத்த படக்குழு ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் சகிதம் அங்கு வந்திருந்தது. கூடவே விஜய்யின் தஞ்சை மாவட்ட ரசிகர்களும்! தாங்காத கூட்டத்திலும், ஓங்கார மந்திரத்தை உச்சரித்த அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம். இதுதான் கண்ணனின் குற்றச்சாட்டு.

விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம் என்பது அவரது வாதம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது என்கிறார் ஆவேசமாக.

கத்திகிட்டே இருக்குமாம் ராக்கோழி. கண்டுக்காம கெடக்குமாம் இருட்டு!
Read More