Pages

Tuesday, April 20, 2010

பிட் நோட்டீஸ் போல மலிவானதல்ல விஜய் கால்ஷீட்.


பிட் நோட்டீஸ் போல மலிவானதல்ல விஜய் கால்ஷீட். ஆனால் அதை பாதி பேர் தன் கையில் வைத்திருப்பது மாதிரி பாவ்லா காட்டுவதுதான் பரிதாபமாக இருக்கிறது. 
காஸ்ட்யூமையும், கதாநாயகியையும் மாற்றினாலே போதும் என்று புதுப்படத்திற்கு ஒரு லாஜிக் வைத்திருக்கும் விஜய். "கதை கேட்டிருக்கேன். பிடிச்சிருந்தாதான் கால்ஷீட்" என்று அடிக்கடி ஜோக் அடிக்கிற சம்பவங்களும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது இதே கோடம்பாக்கத்தில். இந்த நிலையில் "நானும் ஒரு கதை சொல்லி விஜய் சாரை இம்ப்ரஸ் பண்ணியிருக்கேன்" என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பேரரசு.
ஏற்கனவே ஜெயம் ராஜா, சீமான், என்று இருவரையும் வரிசையில் நிற்க வைத்திருக்கும் விஜய், பேரரசுவை எப்போது இந்த க்யூவின் நடுவே நுழைத்தார் என்பதுதான் பெரும் குழப்பமாக இருக்கிறது. விசாரித்தால், இவர்கள் இருவருக்கும் முன்பே பேரரசு ஒரு கதை சொல்லியிருந்தாராம் விஜய்யிடம். ஆனால், அப்பா 'எஸ்' சொல்லணும். அப்புறம்தான் நான் என்று ஒதுங்கிக் கொண்டார் விஜய்.
எஸ் சொல்ல வேண்டிய அப்பா '....ஸ்' என்று மூச்சுகூட விடுவதில்லை பேரரசுவை பார்த்தால். இந்த பெரும் போராட்டத்திற்கு இப்போதுதான் ஒரு முடிவு கட்டியிருக்கிறாராம் விஜய், தன் அப்பா சம்மதம் இல்லாமலே!
"காவல்காரன் ஷ§ட்டிங் முடிந்ததும், கோதாவில் இறங்க தயாரா இருங்க" என்று பேரரசுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். இதை சொல்லிதான் பதை பதைக்க வைக்கிறார் பேரரசுவும்.

Read More

யாவரும் கேளிர் படப் பெயர் மாற்றம்!





கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கும் படம் ‘யாவரும் கேளிர்’. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இருவரும் சேர்ந்து ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்திருந்தனர். முழு நீள காமெடி கதை படமாக இது உருவாகிறது. கமலுடன் இதில் உதயநிதி ஸ்டாலினும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து யாவரும் கேளிர் படத்தின் பெயர் காருண்யம் என மாற்றப்பட்டுள்ளது. முக்கோணக் காதல் கதையான இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கமல்ஹாசனுடன் பிரசாத் இணைவது இது 2வது முறை. இப்படத்தின் புதிய தலைப்பான காருண்யமும், அன்பும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


Read More

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு



வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இது குறித்து அவர் கூறுகையில், '‘முதலில் விக்னேஷ் சிவா
டைரக்ஷனில் ‘போடா போடி’யில் நடிக்கிறேன். லண்டனில் மே, ஜூனில் ஷூட்டிங் நடக்கிறது. தரண் இசை. சரத்குமார் மகள் வரலட்சுமி ஜோடி. 'வட சென்னை' படத்துக்காக முன்பே வெற்றிமாறன் கேட்டிருந்தார். அடுத்த ஆண்டு அப்படம் தொடங்கும். 'வாலிபன்' படம் தள்ளிப்போயுள்ளது. இதில் எனக்கு ஜோடி யார் என்பது முடிவாகவில்லை'’ என்றார் சிம்பு.

Read More

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.,,,







மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருங்கவும், அல்ள்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.


6. தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.


Read More

கற்பழிப்பைக் குறைக்க உதவுகிறது இன்டர்நெட்??!


கற்பழிப்பைக் குறைக்க உதவுகிறது இன்டர்நெட்??!கற்பழிப்பைக் குறைக்க உதவுகிறது இன்டர்நெட் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?. ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறது கிளம்சன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. இன்டர்நெட் வந்ததற்குப் பிறகு கற்பழிப்பு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளதாம். காரணம், மனதுக்குள் கிளர்ந்தெழும் ஆசாபாசங்களை இன்டர்நெட்டில் படம் பார்த்தும், வீடியோ கிளிப்புகளைக் கண்டு களித்தும் பலர் தணித்துக் கொள்கிறார்களாம். இதனால் ஒரு பெண் வேண்டும் என்ற உணர்வே அவர்களிடமிருந்து விலகிப் போய் விடுகிறதாம்.
கிளம்சன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரவியல் பேராசிரியர் டாட் கென்டல் தலைமையிலான ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கென்டல் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளில் கற்பழிப்பு சதவீதம் 30 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்டர்நெட்தான்.

மனதுக்குள் எழும் பெண் ஆசைகளை இன்டர்நெட்டில் இறைந்து கிடக்கும் புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் பார்த்து பலர் அடக்கிக் கொள்கின்றனர். இதனால் கற்பழிப்பு போன்றவை குறைந்துள்ளது.

அதேசமயம், இதை மறுக்கிறார் அக்ரான் குடும்ப கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணரான கரன் சிமினி.

அவர் கூறுகையில், ஆன்லைனில் இறைந்து கிடக்கும் போர்னோகிராபி படங்களால் கற்பழிப்பு குறைந்து விட்டதாக கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது. உண்மையில், ஆன்லைன் போர்னோகிராபியால் பாலியல் வன்முறைகள் அதிகரித்துதான் வந்துள்ளன

Read More

பலே பாண்டியாவுக்காக 20 பேர் பாடிய பாடல்


சித்தார்த் சந்திரசேகர் இயக்கும் படம் ‘பலே பாண்டியா’. விஷ்ணு, பியா ஜோடியாக நடிக்கின்றனர். தேவன் இசை அமைக்கிறார். படம் பற்றி நிருபர்களிடம் சித்தார்த் கூறியதாவது: வாலிபன் ஒருவன் தனது வாழ்க்கையை எதிர்மறையாக சிந்திக்கும்போது எல்லாமே எதிர்மறையாக நடக்கிறது. நேர்மையாக சிந்திக்கும்போது அவன் உயர்ந்த இடத்துக்கு செல்கிறான் என்ற கருவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இப்படத்துக்காக வாலி எழுதிய ‘ஹேப்பி...’ என்ற பாடலை 20 பாடகர்கள் பாடியுள்ளனர். தாமரை எழுதியுள்ள ‘கண்களே கமாலயம்’ என்ற பாடல் அந்தாதி வகை பாடலாக உருவாகி உள்ளது. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது. இவ்வாறு சித்தார்த் கூறினார். முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், கவிஞர் வாலி, வி.சி.குகநாதன், ஜி.சேகரன், ஜெயம் ராஜா, ஜனநாதன், சிம்புதேவன், ஏ.ஆர்.முருகதாஸ், தாமரை, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More