Pages

Monday, April 26, 2010

இலங்கையில் விழா நடக்குமா?



ஜுன் மாதம் கொழும்பில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவுக்கு குள்ளமணி, வையாபுரி கூட போக மாட்டார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள் இங்குள்ள தமிழ் இன உணர்வாளர்கள். வைகோ, திருமா, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த திரைப்பட விழாவுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
ரஜினி, கமல் மட்டுமல்ல, விஜய், அஜீத், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த அழைப்பிதழை கையால் கூட வாங்க முன்வரவில்லையாம். கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று கொழும்புக்கு எந்த கலைஞர்களும் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்த அரசியல் தலைவர்களுக்கு பெரும் வெற்றி. அதே நேரத்தில் மும்பையில் இருக்கும் அமிதாப் என்ன செய்வார்?
ராஜபக்சேவிடம் இந்த விழா குறித்து நேரில் விவாதித்துவிட்டு வந்திருக்கும் அவர், கடைசி நேரத்தில் கழன்று கொள்ள இயலுமா? ஆனால் அதற்கெல்லாம் யோசனை வைக்காமல் தனது தொண்டர்களை மும்பைக்கே அனுப்பி முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் சீமான். இவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள் அமிதாப் வீட்டின் முன் கூடி கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். போகாதே... போகாதே இலங்கைக்கு போகாதே என்பதுதான் அங்கே எழுப்பப்பட்ட முக்கிய கோஷம். அவர்களை உள்ளே அழைத்த அமிதாப் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தாகவும் தகவல்.
போகிற போக்கை பார்த்தால் இலங்கையில் விழா நடக்குமா என்பதே கேள்விக்குறியாக கிடக்கிறது.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.