Pages

Monday, April 26, 2010

சீனியர்களை ஓரங்கட்டும் இளைய நட்சத்திரங்கள்


விளம்பர உலகில் ஷாரூக், ஆமீர்கான், பிரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் போன்ற சீனியர் நட்சத்திரங்களை இளம் நட்சத்திரங்கள் ஓரங்கட்டி வருகின்றனர். சீனியர்கள் நடித்த விளம்பர படங்களில் இப்போது தீபிகா படுகோனே, கேத்ரினா கைப், ஜெனிலியா ஆகியோர்தான் வருகிறார்கள். இளைஞர்களைக் கவர இளமை தேவைப்படுவதாக விளம்பர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பிஎஸ்என்எல் நிறுவன விளம்பரங்களில் முதலில் பிரீத்தி ஜிந்தா வலம் வந்தார். இப்போது தீபிகா படுகோனேதான் அசத்துகிறார். சோனி கேமரா, பியாமா 1397904493 விலிஸ் ஷாம்பூ விளம்பரங்களிலும் தீபிகா நடிக்கிறார். அதேபோல், நடிகை ராணி முகர்ஜி நடித்த பேன்டா குளிர்பான விளம்பரம் மற்றும் வாட்டிகா ஹேர் ஆயில் விளம்பரத்தில் இப்போது ஜெனிலியா நடிக்கிறார். அதோடு காட்பரி பெர்க் விளம்பரத்தில் பிரீத்தியை நகர்த்திவிட்டு இவர்தான் நடிக்கிறார். சினிமா துறையில் இளம் கலைஞர்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த ரசிகர்கள் கூட்டத்தைக் கவர இளமையான நடிகைகளைத்தான் நடிக்க வைக்க வேண்டியிருக்கிறது என விளம்பர படங்கள் எடுத்து வரும் கிரியேட்டிவ் டைரக்டர் ஷிவானந்த் மகான்டி தெரிவித்துள்ளார். கோக கோலா விளம்பரத்தில் முதலில் நடித்தது ஆமிர் கான். இப்போது நடிப்பது இம்ரான்கான். உறவினரான ஆமிர் கானை நகர்த்திவிட்டார் இம்ரான். கோக கோலா குளிர்பானம் இளமையோடு தொடர்புடையது என்ற உணர்வை ஏற்படுத்த இதுபோல் சீனியர்களை மாற்றிவிட்டு ஜூனியர்களை போடுகிறார்கள். பெப்சி நிறுவனமும் முதலில் ஷாரூக் கானை தனது விளம்பர மாடலாக வைத்திருந்தது. அவருக்கு 40 பிளஸ் வயது ஆகிவிட்டதால், இப்போது இளம் ஹீரோவான ரன்பீர் கபூரை தனது புதிய விளம்பரங்களில் நடிக்க வைத்து வருகிறது.

லோரியல் அழகு சாதன விளம்பர படத்தில் முதலில் தோன்றியது ஐஸ்வர்யா ராய். இப்போது அந்த இடத்தில் சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேத்ரினா கைபும் ஐஸ்வர்யாவிடமிருந்து நட்சத்ரா ஜூவல்லரி ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளார். சுஷ்மிதா சென் தோன்றிய பான்டீன் விளம்பரத்திலும் இப்போது காத்ரீனாதான் நடிக்கிறார். இளம் நடிகர்களிடம் திறமை இருக்கிறது. விளம்பர துறையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதோடு, சீனியர்களுக்கு தர வேண்டிய பணத்தில் பாதி கொடுத்தால் போதும். இதெல்லாம்தான் ஜூனியர் நடிகைகளுக்கு விளம்பர வாய்ப்பு குவிய முக்கியக் காரணம் என்கிறார் டென்ஸு மீடியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாய் நாகேஷ். GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.