Pages

Wednesday, March 17, 2010

தனிமை நட்பாகிறது



தனிமை நட்பாகிறது என்ற
இந்த கவிதையை
நீங்கள் வாசிக்கும்போது
நட்பாகி விடுகிறீர்கள்
கவிதைக்கும் எனக்கும்
Read More

காசிஆனந்தன் கவிதைகள் 2

» காசிஆனந்தன் கவிதைகள் 2

ஊரில் உங்கள் சுடுகாடு. சுடுகாட்டில் எங்கள் ஊர்.

சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்..
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;

போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.

அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது

மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…நீ என்றேன்
கைதட்டினான்

பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.

Read More

காசிஆனந்தன் கவிதைகள் 1

» காசிஆனந்தன் கவிதைகள் 1

கோயில்..செருப்புகளை வெளியே விட்டு உள்ளே போகிறது அழுக்கு.

முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்

பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்
வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு .
Read More

அகதி வாழ்க்கை


என் கண்களில் அழுது அழுது கண்ணீரும் வற்றிப் போயிற்று.....

ஆண்டாண்டு காலமதாய்
இப்பூமியிலே அவதரிக்கும்
மானிடவர்க்கம்தான்
நான்!

பிறந்தது முதல்
இன்று வரை
கிடைத்த பட்டம்
"அகதி''

என்றோ ஒரு நாள்
விடிவு வரும் என்ற நம்பிக்கையில்
என் உடம்பில்
உயிர் மட்டும்
ஊசலாடுகிறது

"அகதி'' வாழ்கையிலே
குடிக்க நீரில்லை என்று
கண்ணீர் கூட விட முடியவில்லை
ஏனெனில்! என் கண்களில்
அழுது அழுது
கண்ணீரும் வற்றிப் போயிற்று.....

நன்றி-மு.ஆ. சுமன் வல்வை சிதம்பரக் கல்லூரி
Read More