Pages

Friday, May 7, 2010

என்னது நான் கருப்பா! எவன் சொன்னா?


தான் ஹீரோவாக நடித்து, தயாரிக்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் வியாபார விஷயமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டு பத்து நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தார் கருணாஸ். ஒரு ஹீரோ, டாப் காமெடியன் வீடு என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அண்ணா நகரில் நடுத்தர அப்பார்ட்மெண்ட்டில் அமைந்திருக்கிறது அந்த வீடு. (அதுவும் வாடகை வீடு என்பது வாட்ச்மேன் தகவல்) பத்து நாட்கள் கழித்து வந்திருக்கும் கணவனை அன்புடன் வரவேற்கிறார் கிரேஸ். டூயட் பேட்டியும் இங்கிருந்தே தொடங்குகிறது...
கிரேஸ்: என்னடா இப்படி இளைச்சு, கருத்தும் போயிட்ட?
கருணாஸ்: என்ன கிரேஸ் வந்ததும் வராததுமா ஓவரா பீலிங் காட்டுற? இளைச்சுப் போயிட்டேன்னு சொன்ன சரி, அதென்ன கருத்து போயிட்டேன். நான் என்னமோ முன்னாடி கமலஹாசன் ரேஞ்சுக்கு கலரா இருந்ததா பிலீம் காட்டற?
கிரேஸ்: என் கண்ணுக்கு நீ எப்பவும் சிவப்புதான் கருணா.
கருணாஸ்:  ஆ... முடியல... சரி அதவுடு. செலவுக்கு பணம் கொடுத்துட்டு போனேனே அதுக்கு கணக்கு சொல்லு முதல்ல...
கிரேஸ்: வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டியா..? எல்லாத்துக்கும் கணக்கு ரெடியா இருக்கு. அப்புறமா சொல்றேன். முதல்ல நேத்து முழுக்க நான் போன் பண்ணிக்கிட்டே இருந்தேனே... ஏன் அட்டன் பண்ணல? இதுக்கு பதில் சொல்லு.
kollywood special cover story, kollywood special story, kollywood special cinema, kollywood special news, kollywood movie cover story, kollywood movie, kollywood news, sepcial cover story, kollywood cover story, Kollywood special news, kollywood specialகருணாஸ்: சமயபுரம் கோயிலுக்கு போயிருந்தேன்டா... அதான் பேச முடியல. தெரியாமத்தான் கேக்குறேன்... வெளியூர் போனவனுக்கு பத்திரமா வரத் தெரியாதா? ஒரு நாளைக்கு எத்தனை போன்தான் பண்ணுவ? போன தடவ துபாய் போயிருந்தப்ப போன் பில் மட்டும் நாற்பதாயிரம் ரூபா வந்திச்சி.
கிரேஸ்: பணமா கருணா பெருசு, பாசந்தான பெருசு! அதென்னமோ தெரியல போன் பண்ணி உன் குரலை கேட்டா நீ பக்கத்துல இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங். ஆனாலும் நீ திரும்பி வந்த பிறகும் அங்க வேலை இருக்கு, அவர பாக்க போகணும்னு கிளம்பி போறப்பதான் கோபம் கோபமா வருது.
கருணாஸ்: நாங்கல்லாம் பிசியான பார்ட்டிங்க... அப்படி இப்படித்தான் இருப்போம். சரி வுடு, உன்ன குத்தம் சொல்ற நான் மட்டும் என்ன ஒழுங்கா? கச்சேரின்னு நீ வெளியூருக்கு கிளம்பினா நானும்தான உன்ன போன் பண்ணி தொல்லை பண்ணிட்டு இருக்கேன். சில சமயம் உன்னோட அசிஸ்டெண்டுங்க ‘மேடம் ரிகர்சல்ல இருக்காங்க’னு சொல்றப்போ பத்திக்கிட்டு வரும் தெரியுமா?
கிரேஸ்: இதுதான்டா காதல், அக்கறைங்கறது... சரி, சமயபுரம் கோயிலுக்கு போனியே... சாமிகிட்ட என்ன வேண்டிகிட்டே? அடுத்த படத்துக்காவது சீக்கிரமா ஹீரோயின் கிடைக்கணும்னுதானே?
கருணாஸ்: நோ... ‘அம்பாசமுத்திரம் 
அம்பானி’ ஹிட்டாகணும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். கிரேஸ்... ஆனாலும் ரொம்ப ஓவரா என்னோட ஹீரோயின் பத்தி கிண்டல் பண்ற. ஆக்ச்சுவலி... ஆரம்பத்துல நிறைய பேரு பிகு பண்ணிக்கிட்டாலும் அப்புறம் அம்சமா ஹீரோயினுங்க எனக்கு அமைஞ்சிருக்காங்கல்ல...
கிரேஸ்: ஆமா கருணா, எனக்கு அதுதான் ஆச்சர்யமா இருக்கு! உன் அழகுக்கு செக்க செவேல்னு ஹீரோயின்ங்க கிடைச்சிடுறாங்க. கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.
கருணாஸ்: ஓ... அதான் அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட் வந்திருந்தப்ப நவ்னீத் கவுர் கவர்ச்சி டிரஸ்ல எம்மேல விழுந்து புரண்டு நடிச்சதை முறைச்சு பாத்துக்கிட்டிருந்தியா?
கிரேஸ்: போதும்... நடிப்புக்கும், நிஜத்துக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியும் கண்ணு. ஆனா, கேமராவுக்கு பின்னாடி அப்படி எதுவும் நடந்தத பார்த்தேன் அப்படியே கழுத்தை பிடிச்சி நெரிச்சு....
கருணாஸ்: சேச்சே... அழகு தேவதையான நீ இருக்குறப்போ அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டேன்.
கிரேஸ்: இதோடா... அப்ப நான் இல்லாதப்போ பண்ணுவியா? கருணா வேண்டாம்... நான் பொல்லாதவ...
கருணாஸ்: சரி, சரி முறைக்காத... அதான் தெரியுமே? சில நேரம் நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனு வாதம் பண்ணறியே... பொதுவா எனக்கு யாரும் எதிர்த்து பேசினா பிடிக்காது. ஆனா, என்ன செய்ய... கடைசில நான்தான் விட்டுக் கொடுத்துப் போறேன்.
கிரேஸ்: ஹை... பேட்டினதும் இப்படி பேசறியா? உண்மைல நான்தான் விட்டுக் கொடுத்து போறேன். பையனுக்கு வித்தியாசமா இருக்கும்னு ‘கென்’ அப்படீன்னு பேர் வச்சியே... நான் விட்டுக் கொடுக்கலையா?
கருணாஸ்: நீ கூடத்தான் பொண்ணுக்கு ‘டயானா’னு பேரு வச்ச. நான் விட்டுக் 
கொடுக்கலையா?
கிரேஸ்: கருணா... வேண்டாம்...
கருணாஸ்: சரி... சரி...
கிரேஸ்: அது... ஓகே. இப்ப சினிமா பத்தி பேசுவோம். நீ நடிச்சதுலேயே எனக்கு பிடிச்சது லொடுக்கு பாண்டி கேரக்டர்தான். அதேமாதிரி ஒரு படத்துல நீ விக்ரமோட ‘பிதாமகன்’ கெட்அப் போட்டுட்டு பண்ணின காமெடி எனக்கு பிடிக்கல. நான் அவரோட ஃபேன் தெரியுமா?
கருணாஸ்: அதென்னவோ நான் மத்தவங்களை இமிடேட் பண்ணி நடிச்சா மட்டும் எல்லாரும் வருத்தப்படுறாங்க. உன்னை 
மாதிரிதான் விக்ரமுக்கும் என்மேல சின்ன கோபம் இருந்துச்சு. அதுக்குப் பிறகு அந்த மாதிரி இமிடேட் பண்ணி நடிக்கிறதில்லை. நீ பாடின அம்புட்டு பாட்டும் எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் நான் எதிர்பார்த்த சில பாட்டுங்க ஹிட்டாகாம போனப்ப  ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன்...
கிரேஸ்: ரொம்ப உருகாத... ஊருக்கு போட்டுக்கிட்டு போன நகையெல்லாத்தையும் பத்திரமா கொண்டு வந்திட்டியா?
கருணாஸ்: நகைன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. எல்லாரும் ‘என்ன சார் ஸ்டண்டு மாஸ்டருங்க மாதிரி நகை போட்டுருக்கீங்க’னு கேட்டாங்க. சும்மா அவசரத்துக்கு அடகு வைக்கத்தான்னு சொல்லி சமாளிச்சேன். எல்லாம் நீ போட்டு அழகு பாத்ததுன்னு சொல்ல 
வெட்கமா இருந்திச்சு.
கிரேஸ்: ஏன் கருணா வெட்கப்படணும்? உங்கள நான் காதலிச்சப்ப உங்ககிட்ட ஒரு கிராம் தங்கம் கூட கிடையாது. ஆனா, உள்ளூர உங்களுக்கு நகைங்க மேல ஆசை இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான் காதலிச்ச பிறகு வந்த முதல் பிறந்த நாள்ல உங்களுக்கு ரெண்டு கிராம்ல ஒரு மோதிரம் வாங்கி பிரசண்ட் பண்ணினேன். ஏதோ பெரிய தங்க சுரங்கத்தை எழுதிவச்ச மாதிரி சந்தோஷப்பட்டீங்க. கல்யாணத்துக்கு பிறகு ரெண்டு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கிக் கொடுத்தேன். ஒரு கிராம் தங்கத்துக்கு  கஷ்டப்பட்ட உங்கள தங்க நகையால அலங்கரிக்கணும்னு நினைச்சேன்... செஞ்சேன். ஆனா, நகைங்க மேல எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இந்த விஷயத்துல நான் புருஷன், நீங்க பொண்டாட்டி.
கருணாஸ்: ஆஹா லவ் பீலிங்க கொட்டிட்டியே கிரேஸ். ஐ லவ் யூ...
கிரேஸ்: ஐ டூ கருணா. உங்கிட்ட எல்லாமே புடிச்சிருக்கு. ஆனா, உன் வாய்தான் புடிக்கல. எங்க போனாலும் மனசுல இருக்குறத பட்டுன்னு போட்டு உடைச்சு வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்துடுவ. இந்த முறை டூர் போனப்ப அப்படி யார் கிட்டேயும் எதையும் சொல்லி வைக்கலியே...
கருணாஸ்: சாரி கிரேஸ் சொல்லிட்டேனே...
கிரேஸ்: (பதட்டமாக) என்ன சொன்ன கருணா?
கருணாஸ்: ...........
(கிரேஸ் நம் பக்கம் திரும்பி ‘அண்ணா இவர் இப்படித்தான்... நீங்க பாட்டுக்கு அதை எழுதி வம்புல மாட்டி விட்டுடாதீங்க’ 
Read More

பழம் பழுக்கலையேன்னா நான் என்ன பண்றது?


கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் கெடுக்கிற மாதிரியே முன்னாடி வந்து நிக்குது முசுடுத்தனம், என்ன பண்ணுறது... அது அவரோட சுபாவம் என்று மூக்கை துடைத்துக் கொள்கிறார் மேனேஜர். யாருடைய மேனேஜர்? எதுக்காக இந்த அழுகை? வேறொன்றுமில்லை, அலைந்து திரிந்து ஒரு வாய்ப்பை கொண்டு வந்தாராம் பாவனாவின் மேனேஜர். அதில் கேரக்டர் சின்னது என்று முகத்தை சுளித்துக் கொண்டாராம் பாவனா. இதுதான் பிரச்சனை.
பிரபுதேவா இயக்கும் க்ளின் இச் என்ற படத்தில் நடிக்கதான் பாவனாவை 'தள்ளிவிட்டார்' மேனேஜர். முதலில் சந்தோஷமாக தலையாட்டிய பாவ்ஸ், படத்தில் தன்னுடைய கேரக்டர் மூன்றாவது நாயகி என்றதும் அப்செட். இதுக்கா என்னை வரச்சொன்னீங்க என்று கோபித்துக் கொண்டு கேரளா போய்விட்டாராம்.
படம் கிடைக்கறதே பாலைவன சோலையா இருக்கு. இதில் பழம் பழுக்கலையேன்னா நான் என்ன பண்றது? இதுதான் மேனேஜரோட புலம்பலாம்!

Read More