Pages

Thursday, May 6, 2010

ஆறு படங்கள் கலகலக்கும் பூர்ணா

‘முனியாண்டி விலங்கியல்’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் பூர்ணா. அந்தப் படத்தின் அட்டர் பிளாப் ரிசல்ட்டின் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
ஆனால் அதில் நடித்த ஹீரோவும் ஹீரோயினும்... ஹீரோவை விடுங்க... இந்தப் படத்தில் நாயகியாக நடித்த பூர்ணா இப்போது உச்சத்திற்குப் போய்விட்டார்.
இவர் கையில் இப்போது ‘கும்பமேளா’, ‘துரோகி’, ‘அர்ஜூனன் காதலி’, ‘வித்தகன’, ‘வேலூர் மாவட்டம்’ என சுமார் ஆறுக்கு மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்களில் வித்தகன் தவிர மற்றவை படப்பிடிப்பில் உள்ளன. வித்தகன் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஸன் வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூர்ணா.
Read More

எனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது,

நான் நடித்து வெளியாகும் படங்களை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்ப்பதில்லை. அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். இதுதான் என் ஸ்டைல் என்கிறார் தமன்னா.

தில்லாலங்கிடி படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னா அளித்த பேட்டி:

சுறா படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். ஆனால் அந்தப் படம் எப்படிப் போகிறது என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. அதில் நான் என்ன செய்திருக்கிறேன் என்று கூட ஆராய விரும்பவில்லை. இதுபோன்ற போஸ்ட் மார்ட்டத்தை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. அந்தப் படம் முடிந்ததும் அடுத்த படம்... இதுதான் என் பாணி.

என்னைப் பற்றிய விமர்சனங்கள் நல்லதோ கெட்டதோ.. எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன்.

சுறாவில் காணாமல் போன நாய்க்காக தற்கொலை செய்து கொள்ளத் துணியும் பெண் வேடத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் நிஜத்தில் நான் அந்த அளவுக்கு முட்டாள்தனமான பெண் அல்ல. நான் மிகத் துணிச்சலானவள்.

இப்போது நான் பிஸியாக இருக்கிறேன். முன்னணியில் உள்ளேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இப்போது நான் செலக்டிவாக படங்களை ஒப்புக் கொள்ள முடியாது. வருகிற நல்ல வாய்ப்புகளை ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம். அது எப்படிப்பட்ட வேடம், எனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்றெல்லாம் பார்க்க முடியாது," என்றார்.
Read More

அமிதாப், ஷாரூக் கானுக்கு தபால்தலை!- இலங்கை ஏற்பாடு


பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் தபால் தலைகள் இலங்கையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்திய நடிகர் நடிகைகளுக்காக இலங்கையில் தபால் தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

ஜூன் மாதம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

இந்த விழாவில் அமிதாப் கலந்து கொள்வது சந்தேகத்துக்கிடமாக உள்ள நிலையில், இந்த தபால் தலை வெளியீடு பற்றி தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌சே உத்தரவிட்டுள்ளார். அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளும் விழா, தமிழக சின்னத்திரை கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அடக்கம்.

இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று திருமாவளவன், வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து அமிதாப் மற்றும் தமிழக சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப் மற்றும் ஷாருக்கானுக்கு இலங்கையில் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

ரத்ததானம் செய்யும் போது...


 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும்.

* நம்முடைய உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது 300 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.

* ரத்ததானம் செய்பவர்களின் உடல் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும் இயல்பாக இருக்க வேண்டும்.

* ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

* ரத்த தானம் செய்ய இருபது நிமிடங்கள் போதும்.

* ரத்ததானம் செய்த பின்னரும், நாம் வழக்கமான பணிகளை செய்யலாம்.
Read More

அப்பாவுடன் இரண்டு மகன்மார் நடனம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம். இவர், ராஜூசுந்தரம்-பிரபுதேவாவின் அப்பா. இதுவரை திரைக்கு பின்னால் மட்டும் இயங்கி வந்த இவர், முதல்முறையாக ஒரு படத்தில், கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அந்த படத்தின் பெயர், `பா ர பழனிச்சாமி.' ஓய்வுபெற்ற ஒரு ராணுவ அதிகாரி, ரவுடிகளை களை எடுப்பதுதான் இந்த படத்தின் கதை. இதில், காதல் ஜோடிகளாக ஸ்ரீனிவாஸ்-மீனாட்சி கைலாஷ் நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்காக சமீபத்தில், ``நேற்று அது உனக்கு...இன்று அது எனக்கு...நாளை அது யாருக்கு தெரியுமா?'' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்துடன் அவரது மகன்கள் ராஜூசுந்தரமும், பிரபுதேவாவும் இணைந்து நடனம் ஆடினார்கள்.
படப்பிடிப்பு தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. தங்கம் ரியல் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து, டைரக்டு செய்கிறார் பி.தங்கவேல்.
Read More

ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆகும் நமீதா!

மடியிலே கனமில்லாத 'மச்சான்ஸ்' அது. நமீதா நேரடியாக கைகுலுக்கினால் கூட சிலிர்க்காது. ஆனால் இவர் மச்சான்ஸ் என்று சொல்லும் மனசு குலுங்கி போகிறது ஒவ்வொரு முறையும். ஆனால் இந்த மச்சான்ஸ்-ல் ஒரு லு வை சேர்த்து 'மச்சான்ஸ்லு' என்று ஆந்திராவுக்கும் ஏற்றுமதி செய்வார் போலிருக்கிறது நமீதா. ஏனென்றால் சமீபத்தில் அவருக்கு கிடைத்திருக்கிற ஹிட்டும், அதை தொடர்ந்த அழைப்பும்தான் காரணம்!
தமிழில் அநேகமாக தலைமுழுகப்பட்ட நமீதாவுக்கு ஆந்திர தேசம் கைகொடுத்திருக்கிறது. இவர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்த சிம்ஹா என்ற படம் செமத்தியான ஹிட். அதுவும் ஆந்திராவில் தனி தெலுங்கானா கலவரத்திற்கு பிறகு ஹிட் ஆகிற முதல் படம் என்பதால் இந்த ஹிட்டுக்கு பெரிய மரியாதை கிடைத்திருக்கிறதாம். போதும் தமிழ்நாட்டுக்கு உழைச்சது. நம்ம பக்கம் வாங்க என்று இருகை நீட்டி அழைக்கிறதாம் ஆந்திரா.
இதையடுத்து ஏராளமான படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருக்கிறாராம் நமீதா. தமிழில் சொந்தப்படம் எடுக்க நினைத்து கதை கேட்டு வைத்திருந்தார் சில உதவி இயக்குனர்களிடம். சிம்ஹாவின் இந்த திடீர் வெற்றி, இதுபோன்ற உ.இ க்களின் நம்பிக்கையில் பாம் போட்டிருப்பதுதான் பரிதாபம்! அவருக்கென்ன? 'மன்னிச்சுகோங்க மச்சான்ஸ்' என்று கூறிவிட்டால் போச்சு!
Read More

2 குழந்தைகளை திரிஷா தத்தெடுத்தார்;





நடிகை திரிஷாவுக்கு சமூக சேவைபணிகளில் ஈடுபாடு அதிகம். ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழைகளுக்கு ஓசையில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். புற்று நோய் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெறும் அடையாறு ஆஸ்பத்திரிக்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நேரில் சென்று துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் வழங்கி உணவும் பரிமாறுகிறார்.
நேற்று தனது பிறந்த நாளையொட்டி திருவேற் காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாய் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றனர். காலையில் இருந்து பல மணி நேரம் அந்த குழந்தைகளுடன் பேசி செலவிட்டார். 400 குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கினார்.
பின்னர் உதவும் கரங்கள் இல்லத்தில் இருந்து 2 ஆதரவற்ற குழந்தைகளைதத்து எடுத்தார். அதில் ஒன்று பெண் குழந்தை, மற்றொன்று ஆண் குழந்தை. பெண் குழந்தைக்கு லேசாக மனவளர்ச்சி குன்றி இருந்தது. பிறர் தத்து எடுக்க விரும்பாத குழந்தைகளை தத்து எடுக்க விரும்புகிறேன். அவர்களை காட்டுங்கள் என்று உதவும் கரங்கள் நிர் வாகிகளிடம் கூறி இவ்விரண்டு குழந்தைகளை தத்தெடுத்தார்.
திரிஷாவை பார்த்து அவருடன் சென்ற தோழியும் ஒரு குழந்தையை தத்தெடுத்தார்.
திரிஷா கடைசியாக நடித்து ரிலீசான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வெளியான நமோ வெங்கடேசா படமும் சூப்பர் ஹிட் தற்போது அக்ஷய் குமார் ஜோடியாக “காட்டா மீட்டா” இந்தி படத்தில் நடித்து வருகிறார். கமல் ஜோடியாக “யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
Read More

தமிழ் படத்துக்கு மும்பை நடிகைகள் ஏன்? : குஷ்பு!



ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் படம் ‘வெளுத்து கட்டு’. சேனாபதிமகன் இயக்குகிறார். பரணி இசை அமைக்கிறார். புதுமுகங்கள் கதிர், அருந்ததி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. முதல் சிடியை விஜய் வெளியிட குஷ்பு பெற்றார்.

பின் குஷ்பு பேசும்போது, ‘ஒருவர் படம் தயாரிக்க விரும்பினால் உடனே தெரிந்த வடநாட்டு நடிகை யாராவது இருக்கிறாரா, வேற்று மொழி நடிகை இருக்கிறாரா என்றுதான் தேடுகிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ் பேசும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தலாம். அப்படிப்பட்ட அருந்ததி என்ற பெண்ணைத்தான் இதில் நாயகியாக்கி இருக்கிறார் சந்திரசேகரன். ராதா, சரிதா என இருவரையும் ஒன்றாக பார்த்ததுபோல் இருக்கிறார் அருந்ததி’ என்றார்.

விஜய் பேசும்போது, ‘எப்போதுமே ஓடுகிற குதிரையில் ஏறி என்னுடைய அப்பா சவாரி செய்யமாட்டார். அவரே ஒரு குதிரையை தயார் செய்து அதில்தான் சவாரி செய்வார். விஜயகாந்த், ரகுமான், சிம்ரன் நான் என பல ஸ்டார்களை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போதுகூட புதுமுகத்தை வைத்துதான் படம் தயாரிக்கிறார். எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது அவர்தான். எனக்கு ஏதாவது பிரச்னை என்றால் அவர்தான் தீர்த்து வைப்பார்’ என்றார். விழாவில் ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன், அபிராமி ராமநாதன், கே.முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, காஜாமைதீன், வி.சி.குகநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More

இந்த வயதில் எதுக்கு ரிஸ்க்..விஜய்.


இந்த வயதில் எதுக்கு ரிஸ்க்... ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று என் தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்துகிறேன். ஆனால் சொன்னால் கேக்க மாட்டேங்குறார், என்றார் விஜய்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தயாரிப்பில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம், 'வெளுத்து கட்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில், கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். சேனாபதி மகன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக்கொண்டார்.

விழாவில், விஜய் பேசியதாவது:

"எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார்.

விஜயகாந்த், ரகுமான், நான் (விஜய்) போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட ஒன்ஸ்மோர் படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்துள்ளார்.

எங்க அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. எனக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், முதலில் எங்க அப்பாவிடம்தான் விவாதிப்பேன். என் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, ரசிகர்களுக்கு நல்வழி காட்டியதெல்லாம் அப்பாதான்.

அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி, நான் நீண்ட நாட்களாகக் கூறி வருகிறேன். 'சூரியன் ஓய்வா எடுக்கிறது? காற்று ஓய்வா எடுக்கிறது?' என்று என்னிடம் திருப்பிக் கேட்டு அமைதியாக்கி விடுகிறார். யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்குறார். இன்னும் தொடர்ந்து அவர் படம் எடுத்து வருகிறார்...'', என்றார்.

நடிகர்-டைரக்டர் பார்த்திபன் பேசுகையில், "குஷ்பு மேல்-சபை உறுப்பினர் ஆகப் போகிறார் என்று கூறுகிறார்கள். அவருக்கு என் வாழ்த்துக்கள். வரப்போகிற மேல்-சபையில் பெண்கள் 50 சதவீதம் இருந்தால் நல்லது.

சமீபத்தில், ஒரு வக்கீல் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

இதேபோல் ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தபின், அவனுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் வாதாடக்கூடாது. இப்படி ஒரு முடிவை இனிமேலாவது வக்கீல்கள் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...'', என்றார்.

மும்பை போக வேண்டாம்...

குஷ்பு பேசும்போது, "தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை தேடி கேரளாவுக்கும், மும்பை க்கும் போவதை நிறுத்த வேண்டும். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் பேசினர். படத்தின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
Read More