Pages

Tuesday, April 27, 2010

வில்லனை தேடி 100 கிலோ மீட்டர் ஓடிய கதாநாயகன்

 
திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி ஆகிய படங்களை தயாரித்த பட நிறுவனம், ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,' `மதராசப்பட்டணம்' ஆகிய இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
 
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், `பலே பாண்டியா' என்ற படம் வெளிவர இருக்கிறது.
 
இதில், `வெண்ணிலா கபடி குழு' படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணுவும், `பொய் சொல்ல போறோம்,' `கோவா' படங்களில் நடித்த பியாவும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அமர், ஜிப்ரான் என்ற இரண்டு வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
புக்கட் தீவு மற்றும் ஹாலிவுட் படங்களில் வந்த ஜேம்ஸ்பாண்டு தீவு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. புக்கட் தீவில், உச்சக்கட்ட சண்டை காட்சி 10 நாட்கள் படமாக்கப்பட்டது. கதாநாயகன் விஷ்ணுவும், வில்லன் ஜிப்ரனும் `டூப்' போடாமல் மோதினார்கள்.
 
படத்தின் இரண்டாம் பகுதியில் கதைப்படி விஷ்ணு, வில்லனை தேடி ஓடிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் படத்துக்காக, குறைந்தது 100 கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறார்.
 
இந்த படத்துக்காக கவிஞர் வாலி மூன்று பாடல்களையும், தாமரை இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். பின்னணி பாடகர் தேவன் ஏகாம்பரம், இசையமைத்து இருக்கிறார். பல படங்களுக்கு விளம்பர டிசைனராக இருந்த சித்தார்த் டைரக்டு செய்துள்ளார்.
 
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
 

Read More

பிரீத்தி ஜிந்தாவின் `திக்... திக்...' அனுபவம்!

ஐ.பி.எல். போட்டிகளில் தனது பஞ்சாப் அணி சொதப்பினாலும் தொடர்ந்து புன்னகை முகமாகவே வலம் வருகிறார் பிரீத்தி ஜிந்தா. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். போட்டிகளின் போது இவரை `பிரெட்டி... பிரெட்டி' என்று அழைத்தார்களாம் அந்நாட்டு ரசிகர்கள்.
 
சினிமா, கிரிக்கெட் தவிர இந்த அழகு நட்சத்திரத்துக்குப் பிடித்த இன்னொரு விஷயம், சுற்றுலா. தனது மனதுக்குப் பிடித்த இடங்கள் குறித்து மனம் திறக்கிறார் பிரீத்தி...

செல்ல விரும்பும் இடம்
 
``பிடல் காஸ்ட்ரோ இறக்கும் முன் கிïபாவுக்குச் செல்ல விரும்புகிறேன். அதேபோல நான் இறப்பதற்கு முன் காண விரும்பும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. எனது கடைசிக் காலத்துக்கு முன் உலகின் அழகான அத்தனை இடங்களையும் பார்த்து விடத் துடிக்கிறேன். எங்கப்பா ராணுவத்தில் இருந்ததால் நாங்கள் ஒரே இடத்தில் வசித்ததே இல்லை. காஷ்மீர் முதல் கேரளா, மிசோரம் வரை நாங்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தோம். நமது மிக அழகான நாட்டை முழுமையாகத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது.''
 
தென் ஆப்பிரிக்க அனுபவம்
 
``கடந்த முறை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டி அதற்கே உரிய `த்ரில்'லை அளித்தது. உள்ளூர் மைதானம் என்ற வசதி இல்லாததால் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்க மக்கள் மிகவும் இதமாக நடந்து கொண்டார்கள். நான் மைதானத்தை நெருங்கும்போதே `பிரெட்டி... பிரெட்டி...' என்ற உற்சாகக் கோஷம் கேட்கும். ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு வருத்தம். அது, அங்கு காட்டுக்குள் சுற்றிப் பார்க்க (சபாரி) முடியவில்லை என்பதுதான். எனது மெய்க்காவலர், `சபாரி' போனார். அவரை ஒரு சிங்கக் குட்டி கடித்துவிட்டது. ஆனால் அவர் தன்னை ஒரு `சிங்கம்' கடித்துவிட்டது என்பதைப் போல கூறி என்னையும் கதிகலங்க வைத்துவிட்டார்!''
 
லண்டனில் `திக்... திக்...'
 
``தனியாகப் பயணம் செய்வது சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் சமயங்களில் அது வேறு மாதிரியாகவும் போய்விடும். பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒருமுறை லண்டனில் ஒரு குறுகலான சந்தில் மாட்டிக் கொண்டேன். அப்போது ஒரு திருடன் எனது நகைகள், பர்ஸ் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். நான் ஆசை ஆசையாய் வாங்கிய இனிப்புகளைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அதிலிருந்து நான் எங்கு சென்றாலும் கார், டிரைவர், மெய்க்காவலர் இல்லாமல் செல்வதில்லை!''
 
மனங்கவர்ந்த பாரீஸ்
 
``லண்டன், சுவிட்சர்லாநëதுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நகரம் பாரீஸ். கடந்த ஜுலையில் நானும் எனது பேஷன் டிசைனர் தோழி சுரிலி கோயலும் ஒரு திடீர்ப் பயணமாக லண்டனிலிருந்து பாரீஸுக்குப் புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஜாலியாகப் பொழுதைக் கழித்த நாங்கள், மிகவும் ஆடம்பரமான ஓட்டலான `ஐந்தாம் ஜார்ஜ்'-ல் தங்கினோம். நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். பகல் வேளையில் அவள் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, மாலை வேளையில் நான் விரும்பும் இடங்களுக்குச் செல்வது. அவள் என்னைக் கடை கடையாக இழுத்துச் சென்றாள். மாலையில் எனது விருப்பப்படி புதிய புதிய உணவு வகைகளை ருசி பார்த்தோம். காரணம், நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை!''
 
Read More

மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்




நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள்.அதில் உள்ள மீடியா பிளேயரில் உங்கள் சிடி மற்றும் டிவிடியில் டேட்டாவினை எழுதலாம். வீடியோ பைல்கள் மற்றும் படங்களையும் இதில் பதியலாம். எப்படி என்று பார்க்கலாமா!
ஆடியோ சிடியாக மாற்றுகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட் மாற்றப்படுவதில்லை. தரமும் குறைவதில்லை.
முதலில் Start>All Programs>Windows Media Player எனச் செல்லவும். அதன் பின் பிளேயர் லைப்ரேரியில் Burn என்னும் டேப்பை கிளிக் செய்து பின் Date DVD அல்லது CD என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி காலியாக உள்ள சிடியை உங்கள் கம்ப்யூட்டரின் சிடி ட்ரேயில் போடவும். Auto Play டயலாக் பாக்ஸ் வந்தால் அதனை குளோஸ் செய்திடவும். சிலரின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருக்கலாம். இதில் எந்த டிரைவ் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து எந்த பாடல் பைல்களைப் பதிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். எழுதப்பட வேண்டிய பாடல்களை Player Library ல் உள்ள Details pane லிருந்து வலது பக்கம் உள்ள List Pane ல் போடவும். இங்கே நீங்கள் விரும்பும் வகையில் பாடல்களின் வரிசையை மாற்றலாம்.
இந்த லிஸ்ட்டிலிருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றால், இதில் ரைட் கிளிக் செய்து Remove என்பதில் கிளிக் செய்திடவும். லிஸ்ட் அமைப்பது முடிந்த பின் Burn கிளிக் செய்து சிடியில் பதிவதைத் தொடங்கி முடிக்கவும்.
Read More

சென்னை அணி வெற்றியால் சந்தோஷப்பட்டேன் -திரிஷா

ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையுலக வட்டாரத்திலும் இந்த சந்தோஷம் பரவியுள்ளது. தமிழ் நடிகர்-நடிகைகள் பலர் சூட்டிங்கை முடித்து டி.வி. முன்னால் முடங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதும் துள்ளி குதித்தனர். இதுபற்றி நடிகை திரிஷா கூறியதாவது:-
 
ஐ.பி.எல். இறுதி போட்டி நடந்த போது நான் ஐதராபாத்தில் இருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்த செய்தி சாதாரணமானது அல்ல. குறிப்பிடத்தக்க பெரிய சாதனை.
 
சென்னை அணி ஜெயிக்கும் என்று எனக்கு தெரியும். டோனி, ரெய்னா ஆட்டம் சிறப்பாக இருந்தது. சென்னையில் வசிக்கும் நம் எல்லோருக்கும் இந்த வெற்றி பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது.
 
இவ்வாறு திரிஷா கூறினார்.
 
Read More

நடிகை சிந்து மேனன் ரகசிய திருமணம்

நடிகை சிந்து மேனன், பிரபு திருமணம் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடந்தது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாளகுடாவை சேர்ந்தவர் சிந்து மேனன். பெங்களூரில் படிப்பை முடித்து, அங்கேயே செட்டில் ஆனார். பின் மலையாளத்தில் 'உத்தமன்' படத்தில் ஜெயராமுடன் நடித்தார். தொடர்ந்து 'வாஸ்தவம்', 'ராஜமாணிக்கம்', 'ட்வென்ட்டி ட்வென்ட்டி' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் பாரதிராஜா இயக்கிய 'கடல் பூக்கள்' மூலம் அறிமுகம் ஆனார். 'சமுத்திரம்' படத்திலும் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு 'ஈரம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 'சந்தமாமா'வில் நடித்தார். இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வந்தார்.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபு என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர், கம்ப்யூட்டர் இன்ஜினீயராக உள்ளார். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பெங்களூர் எம்.ஜி. சாலையிலுள்ள பவுரிங் கிளப்பில் நேற்றிரவு நடந்தது. இதில் 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், நடிகர் நந்தா உள்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
Read More

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஐஸ்வர்யா!

புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட பட வரிசையில் 23 வது படம் தயாராகி வருகிறது. இதில் நாயகி தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. முதலில் ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் பரீதா பிண்டோவை அணுகினர். பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இப்போது ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளார்களாம் ஜேம்ஸ்பாண்ட் தயாரிப்பாளர்கள்.
Read More

‘ராவணன்’ படத்தின் முக்கிய கேரக்டரில் ஓநாய்கள்



4/27/2010 10:02:10 AM
தமிழ் படங்களில் பல்வேறு மிருகங்கள் நடித்துள்ளன. ஓநாய்களை முக்கிய கேரக்டராக யாரும் காட்டியதில்லை. மணிரத்னம் இயக்கும் ‘ராவணன்’ படத்தில், காட்டில் படமான சில காட்சிகளில், இரு ஓநாய்கள் நடித்திருக்கிறதாம். இவை அமெரிக்காவில் இருந்து விசேஷ அனுமதி பெற்று, வரவழைக்கப்பட்டதாக அப்பட வட்டாரம் தெரிவித்தது.
Read More

600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்!!


வரும் ஏப்ரல் 30-ம் தேதி ரிலீசாகிறது விஜய் யின் 50வது படமான, சன் பிக்ஸர்ஸின் சுறா.

விஜய் பட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 600 திரையரங்குகளில் உலகம் முழுக்க இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

சென்னை நகருக்குள் மட்டும் 16 திரைகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதுவரை எந்த விஜய் படமும் சென்னை யில் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்கிறார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.

பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்தவரை விஜய் மிகத் தெளிவாக உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதாலும், போட்டிக்கு வேறு படங்களே இல்லை என்பதாலும் குறைந்தது இரு வாரங்கள் ஓபனிங் நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.

இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாருடன் மீண்டும் பணிபுரிய விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை காவல்காரன் படம் முடிந்ததும் தொடங்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்தப் படத்துக்காக விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்பில் தோன்றவிருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More

`நான்' படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடி இல்லை

40 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்து, வெள்ளிவிழா கொண்டாடிய படம், `நான்.' இதே பெயரில், இப்போது ஒரு புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில், இவருக்கு ஜோடி இல்லை.
 
மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், `ஆனந்த தாண்டவம்' படத்தில் நடித்த சித்தார்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார்.
 
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை ஜீவா சங்கர் கவனிக்கிறார். விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன், ஏ.வி.ஆர். டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் விஜய் ஆன்டனியும், வெங்கட்ரமணியும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.
 
Read More

தப்புக்கணக்கு விக்ரம் சென்னைக்கு வந்த பெண்!



அடிக்கடி சென்னையில் தென்படும் ப்ரீத்தி வர்மா ஒரு ஆஃப் லைன் புரடியூசர். தமிழை பொறுத்தவரைதான் இந்த ஒளிவுமறைவு. பாலிவுட்டில் இவர் ஒரு முக்கியமான தயாரிப்பாளர். இவருக்கும் சீயான் விக்ரமுக்கும் வெகு கால நட்பு. சினிமாவை பொறுத்தவரை நட்பு கரிக்கும். உப்பு இனிக்கும். உவர்ப்பு புளிக்கும். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கும். அப்படிதான் இந்த நட்பில் ஒரே உப்பு கரிப்பு என்கிறது கோடம்பாக்க குளறுபடி செய்தி ஒன்று. ஏனாம்?
விக்ரம் தயாரிப்பில்(?) சசிக்குமார் இயக்கி வருகிறார் ஒரு புதுப்படத்தை. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிவிட்டார் விக்ரம் என்றே சினிமா வட்டாரம் கொட்டமடித்து கும்மாளம் கொட்டியது. ஏனென்றால் ஒரு நடிகர், தான் சம்பாதிக்கிற பணத்தை சம்பாதித்த இடத்திலேயே முதலீடு செய்வதென்பது குதிரைக் கொம்பு அல்லவா? அதனால்தான் இந்த கொண்டாட்டம். ஆனால் இந்த படத்தின் நிஜ தயாரிப்பாளர் நாம் சொன்ன ப்ரித்தி வர்மாதான் என்கிறார்கள் சிலர்.
யூனிட்டில் முப்பது பேரை மட்டும் வைத்துக் கொண்டு சிக்கன சிகாமணியாக படம் எடுத்து வருகிறாராம் சசிகுமார். ஆனால் படம் துவங்கி பத்தே நாட்களில் பட்ஜெட் விண்ணை முட்டிக் கொண்டு நிற்கிறதாம். எப்படி என்பது புரியாத வர்மா, கர்ம சிரத்தையோடு கணக்கு போட்டு பார்த்தால் ஒரே டவுன் பஸ் இடி அந்த கணக்கில்! கணக்கு காட்டிய விக்ரம்தான் தப்பு கணக்கு போட்டுவிட்டார் என்ற முடிவுக்கு வந்த ப்ரீத்தி வர்மா, இப்போது சென்னைக்கே வந்துவிட்டார். வேறென்ன? மிச்ச கணக்கையாவது முறையாக போடலாம் என்றுதான்.
படத்துக்கு வேணும்னா இன்னும் பேரு வைக்காம இருக்கலாம். இந்த தப்புக்கணக்குக்கு சின்ஹா வைச்ச பேரு என்ன தெரியுமா? துரோகம்!

Read More

ஹிட்லரை கேலி செய்’து படம் தயாரித்த சாப்ளின்


நகைச்சுவை மன்னன் சார்ளி சாப்ளினைத் தெரியாதவர்கள் மிகச் சிலரே இருக்க முடியும். வலியவனை எளியவனால் வெல்ல முடியும் என்ற ஒரே கருத்தே அவரின் கோமாளித்தனமான படங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ஏழ்மையும் வறுமையும் தான் இவரது சுவாரஸ்யமான படங்களுக்குப் பின்னணியாக இருந்தது.
சர்வாதிகாரி ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அதே காலப் பகுதியிலே (1940) சார்ளி சாப்ளினும் வாழ்ந்தார். ஹிட்லரைக் கண்டு முழு உலகமும் நடுங்கிய போதும் சார்ளி சாப்ளினோ (ஹிhலீ மிrலீat ளிiணீtator) அந்த சிறந்த சர்வாதிகாரி என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஹிட்லர் மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சாப்ளினின் மற்ற குறும் படங்களைப் போலல்லாமல் இது இரண்டு மணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது. கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்த படம்.
இந்தப் படத்தில் சாப்ளின் இரட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி, இன்னொருவர் சாதாரண சிகை திருத்தும் யூதர். சிகை அலங்கரிப்பவர் வாழும் சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை. சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும் ஹிட்லரை மன நோயாளி போல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.
ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலுமாரியைத் திறக்கிறார். அதில் பல விதங்களில் முகம் பார்க்கும் கண்ணாடிகள். அதில் முகத்தை சரி செய்கிறார். சில நேரம் குழந்தை போல சிரித்துக் கொண்டே அறையிலுள்ள திரைச் சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவது போல நடனமாடுகிறார்.
படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர், ஆள் மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப் பதிலாக ஜெர்மனி படை வீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார்.
ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துகளை அந்த உரையில் வைக்கிறார். பின்பு தன காதலியிடம் சேருகிறார். இதுதான் படம். ஹிட்லர் உலகையே மிரட்டிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து படம் எடுப்பதென்பது சாதாரண விடயமா என்ன?
Read More

தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருக்கிறது.ஐஸ்வர்யா ராய்


தமிழில் நிறையப் படங்களில் எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. தமிழ் மூலமாகத்தான் அவர் நடிகையானார். இருவர் படம்தான் அவரது சினிமா முகவரி. இதையடுத்து ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து இந்தியில் நுழைந்த அவர் இந்தியில் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். இடையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. தற்போது மீண்டும் தமிழ் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Read More