Pages

Saturday, April 10, 2010

தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்

செட்டிகுளம் முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர்.


அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் இலங்கைப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்குதலினைத் தாங்கமுடியாத மக்கள் தப்பி ஓடியுள்ளனர். மக்கள் ஓடும்போது அவர்களைப் பார்த்து நடைபெற்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்திருக்கின்றீர்கள். எனவே அவர்களிடமே தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கத்தியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலும் தண்ணீர், உணவு, மருந்து உட்பட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த படை அதிகாரி காட்டுமிராண்டித்தனமாகக் கத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலப்பகுதி கடும் வெப்பமான காலப்பகுதி என்பதாலும் அங்கு இலட்சக்கணக்கான மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதாலும் குடிநீருக்கு கடந்த பல மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் உழைத்தே வாழ்ந்து வந்தோம். எங்களுக்கான நிலத்தில் நாங்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டால் நாங்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் கையேந்தி யாரிடமும் அடி உதை வேண்டிய தேவை எமக்கில்லை. எங்களை இப்போதே எங்களது ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால் நாங்கள் உடனடியாகவே வெளியேறுவோம் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

Read More

மர்மதேசம் விமர்சனம்...



“கிளாஷ் ஆப் டைட்டான்ஸ்” என்ற ஆங்கில படம் தமிழில் “மர்மதேசம்” என்ற பெயரில் வந்துள்ளது. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே கதை.
பாதாள உலகின் கடவுளான ஹேட்ஸ் படைகள் பூமியை கைப்பற்ற வருகிறது. அதை எதிர்க்க முடியாமல் மன்னர்களும் மக்களும் புற முதுகிட்டு ஓடுகிறார்கள். அப்போது கடவுளாக பிறந்து மனிதனாக வளர்க்கப்பட்ட பெர்சுயஸ் உலகை காப்பாற்ற புறப்படுகிறான். சிறு படையின் உதவியுடன் ஹேட்ஸ் வீரர்களை சின்ன பின்னமாக்குவது கிளை மாக்ஸ்...
பயமுறுத்தும் மிருகங்கள், பாதாள உலக பேய்கள் பறக்கும் குதிரைகள் என படம் முழுக்க விழிகளை விரிய வைக்கும் வியப்பூட்டும் காட்சிகள். ராட்சத தேள்கள் மேல் பயணித்து வவ்வால் மனிதர்களிடம் இருந்து பெயர்சுயஸ் ஆக வரும் சாம்வொர்த்திங்டன் தப்பும் சீன் பரபர... மாறுவேடத்தில் கள்ள உறவு, பேழையில் வைத்து மனைவி, குழந்தையை கடலில் வீசுதல் போன்றவை நம்மூர் புராண கதைகளை நினைவூட்டுகின்றன. லூயிஸ் லெட்டிரியர் இயக்கி உள்ளார்.
Read More

தற்கொலை செய்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது; வித்யாபாலன் நடிக்கிறார்



தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை, வண்டிச்சக்கரம் போன்ற ஒருசில படங்கள் தவிர அனைத்து படங்களிலுமே அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி விருந்து படைத்தார்.
சில்க் ஸ்மிதா டான்ஸ் இருந்தால்தான் படம் ஓடும் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது. கமலுடன் ஆடிய நேத்து ராத்திரியம்மா பாடல் இன்றும் கிளு கிளுப்பூட்டக் கூடியது.
பிறகு காதல், மது என வாழ்வு திசை மாறியது. அன்புக்காக ஏங்கிய அவரை பலர் போலியாக காதலித்து ஏமாத்தினர். சொத்துக்களையும் பிடுங்கினார்கள். இறுதியில் வாழ்வில் வெறுப்படைந்து தூக்கில் தொங்கி இறந்தார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது. இந்தி, தமிழில் ஏக்தாகபூர் படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்ரியா இயக்குகிறார். சில்க்ஸ்மிதா கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர்.
Read More

ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9-வது திருமணம்: 78 வயதில் 49 வயது நண்பரை



பிரபல ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லருக்கு தற்போது 78 வயதாகிறது. திருமணம் செய்வதிலும், விவாகரத்து செய்திலும் இவர் உலகப்புகழ் பெற்றவர். இதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். கடைசியாக லேரி என்ற கட்டிட தொழிலாளியை திருமணம் செய்தார். அவருடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலிசபெத் டெய்லர் 1996ல் அவரை விரட்டிவிட்டு விட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் இருந்தார். 2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.
இந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயதுகாரரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார். இவர் எலிசபெத்தின் நீண்ட நாள் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது
Read More

சானியா திருமணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள்

5 ந்தேதி சானியா மிர்சா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் வரும் 15 ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

சானியா மிர்சா தங்கள் நாட்டு மருமகளாக வருவதை பாகிஸ்தான் அரசியல்வாதிகள் போட்டிபோட்டு வரவேற்கிறார்கள். 15 ந்தேதி சானியா மிர்சா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


பாகிஸ்தான் மக்கள் நலத்துறை மந்திரி பிர்தோஸ் ஆசிக் அவன் சிறப்பு அழைப்பாளராக வருகிறார். அவரிடம் சானியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பரிசு ஒன்று கொடுத்து அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி மிர் உசேன் ஜக்ரானியும் சானியா சோயிப் திருமண வரவேற்பில் கலந்து கொள்கிறார். ஆனால் அவர் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சானியா திருமண வரவேற்புக்கு வரும் பாகிஸ்தான் எம்.பி.க்கள் தங்குவதற்கு ஐதராபாத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானிலும் சானியா சோயிப் திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சானியா பாகிஸ்தான் வரும்போது அவருக்கு விருந்து கொடுக்கவும் பாகிஸ்தான் மந்திரிகள், எம்.பி.க்கள் இடையே போட்டி நிலவுகிறது.

Read More

கல்கி பகவானிடம் விசாரணை நடத்த ஆந்திரா கோர்ட் உத்தரவு

கல்கி பகவானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திரா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் தன்னை கடவுளாக கூறி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

அவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தன்னை அம்மா பகவான் என்றும் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார். இருவரும் தரிசனம் மற்றும் பாத பூஜைக்காக ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் கூறப்பட்டது.

மேலும் கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து ஆட வைப்பதாக மனித உரிமை ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டியிடம் பக்தர்கள் புகார் அளித்தனர்.

ஏழை எளிய மக்களுக்கு அரசு அளித்த நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலம் போன்றவற்றை கல்கி பகவான் ஆக்கிரமித்து மோசடி செய்ததாக ஐதராபாத் கோர்ட்டில் 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஏழைகள் வனத்துறை நிலங்களை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுவரை போலீஸ் அதிகாரிகள் கல்கி பகவானிடம் விசாரணை நடத்தாதது ஏன்? வருகிற 23 ந் தேதிக்குள் போலீசார் கல்கி பகவானிடம் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கல்கி பகவான் ஆசிரம ஊழியர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்
Read More

விளம்பர படத்தில் நடிக்கும் மாதவன் மகன்



madahavan''s son debut in acting
சாக்லேட் ஹீரோ என்ற அந்தஸ்துடன் நுழைந்து தற்போது தேர்ந்த நடிகராக தமிழ், இந்தி என கலக்கி வரும் நடிகர் மாதவனின் மகன் வேததாந்த் விளம்பர படத்தில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் தன் நடிப்புப் பயணத்தை விளம்பர படங்கள் மூலம் தான் தொடங்கினார். தந்தை வழியில் மகனும் தற்போது விளம்பர படத்தில் நடிக்கிறார். மாதவன் வாரிசின் பெயர் வேதாந்த். வயது 5. படு சுட்டியான வேதாந்த் கற்பூரம் மாதிரி கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டு நடிப்பில் அசத்துகிறாராம். வேதாந்த் கலக்கியுள்து சமூகநல விழிப்புணர்வுக்கான விளம்பரம் என்பது கொசுறு தகவல். ஆனால் எந்த மாதிரியான விழிப்புணர்வு விளம்பரம் என்பது மட்டும் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. வேதாந்த் நடித்ததை பார்த்து ஸ்பாட்டில் இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்களாம். சிலர் நேரடியாக மாதவினடமே வந்து சார், சின்னவர் பெரிய ரவுண்ட் வருவார் என பலே சொல்லிவிட்டும் சென்றுள்ளனர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. மகனைக் கண்டு பெருமிதத்தில் இருக்கிறாராம் மாதவன்.
Read More

இன்றைய போட்டியில் கங்குலி பங்கேற்பாரா?





கங்குலிக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் இன்று ஆடுவாரா? என்ற சந்தேகம் அருவடைய ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது.


கடந்த 7 ந் தேதி டெல்லி கொல்கத்தா அணிகள் இடையே நடந்த போட்டியின்போது கொல்கத்தா கேப்டன் கங்குலி 56 ரன்கள் எடுத்து அந்த அணியை வெற்றி பெற செய்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

ஆனால் இன்று பெங்களூர் அணியுடன் நடக்கும் ஆட்டத்தில் அவர் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி அணியுடன் நடந்த போட்டியின்போது அவரது வலது கனுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிக வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனாலும் இன்னும் வலி அப்படியே உள்ளது.

இருந்தாலும் இன்றைய போட்டியில் ஆட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். டாக்டர்கள் அவரது காலை பரிசோதிக்க உள்ளனர். அதன்பிறகே அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.

கங்குலி ஆடாவிட்டால் கொல்கத்தா அணிக்கு அது பெரும் பின்னடைவாக அமைந்து விடும்.

Read More