Pages

Sunday, April 4, 2010

பாவம் சாணியா என்ன பண்ணுவா? ஏன் அவருக்கு இந்த தண்டனை ..

Read More

மலிக்கிற்கு ஐதராபாத்தை விட்டு வெளியேற தடை...


ஐதராபாத் : ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷாவை ஏற்கெனவே திருமணம் செய்த புகார் தொடர்பாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை முடியும்வரை ஐதராபாத்தை விட்டு அவர் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே தனது மகள் ஆயிஷாவை மாலிக் திருமணம் செய்ததாக அவரது தந்தை சித்திக் புகார் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இதனிடையே, திடீரென ஐதராபாத் வந்த மாலிக், திருமண நடவடிக்கைகள் குறித்து சானியா மிர்சாவின் பெற்றோரிடம் விவாதித்தார். இந்நிலையில், ஏற்கெனவே திருமணம் ஆன புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி 5 கோடி ரூபாய் தர மாலிக் முன்வந்ததாக சித்திக் நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக போலீசில் அவர் புகார் தெரிவித்தார். ஐதராபாத்தில் சானியா மிர்சா வீட்டில் தங்கியுள்ள சோயிப் மாலிக்கிடம் சித்திக் புகார் குறித்து போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், விசாரணை முடியும் வரை ஐதராபாத்தை விட்டு அவர் வெளியேறக்கூடாது என்று அவருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

திருமணத்தை துபாயில் நடத்துவது குறித்து....

ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இன்று திடீரென ஐதராபாத் வருகை தந்துள்ளார். திருமணம் குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மாலிக்-சானியா திருமணம் நடைபெற இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், ஆயிஷா என்ற பெண், மாலிக்குடன் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களது திருமணம் நடைபெறுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென சோயிப் மாலிக் இன்று ஐதராபாத் வருகை தந்தார். தமது திருமண ஏற்பாடுகள் குறித்து சானியா மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தங்களது திருமணத்தை துபாயில் நடத்துவது குறித்தும் மாலிக் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. சோயிப் இன்று ஐதராபாத் வருகை தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

துபாயிற்கு போனா கவனமா இருங்கப்பா....


துபாயில் பொது இடத்தில் முத்தம் கொடுத்ததால் சிறை தண்டனை பெற்ற பிரிட்டன் இளஞ்ஜோடிகளின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காதல் ஜோடி அய்மன் நஜாபி (24), சார்லோட் (25). அய்மன் நஜாபி துபாயில் ஹே குரூப் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சார்லோட் லண்டனில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.

காதலரை பார்க்க சார்லோட் துபாய் வந்திருந்தார். இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது இருவரும் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு அருகில் 38 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் தனது 2 வயது மகளுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார்.

ஜோடிகள் முத்தமிடுவதை தனது சின்னஞ்சிறு மகள் பார்த்துவிட்டாள் என்றும், இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி அந்த பெண்மணி போலீசில் புகார் கொடுத்து விட்டார்.

இந்த புகாரின் பேரில் இங்கிலாந்து ஜோடியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துபாய் சட்டப்படி பொது இடத்தில் முத்தம் கொடுத்தது தவறு என தீர்ப்பானது.

இதனால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இளஞ்ஜோடிகளுக்கு எதிராக நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால், இந்த உத்தரவை ஏற்க முடியாது என பிடிவாதமாக கூறியது இங்கிலாந்து காதல் ஜோடி. இதையடுத்து இருவரின் பாஸ்போர்ட்டை போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
‘நாங்கள் உதட்டில் முத்தம் கொடுக்கவில்லை. கன்னத்தில் தான் முத்தம் கொடுத்துக் கொண்டோம். அன்பை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தோம்’ என எவ்வளவோ வாதாடியும், அவர்களின் மனுவை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

ஏற்கனவே விதித்த தீர்ப்பின் படி ஒரு மாத சிறை வாசமும், ஆயிரம் திர்காம் அபராதமும் செலுத்தி தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, செக்ஸியான எஸ்எம்எஸ் அனுப்பிய இந்திய தம்பதியர் மற்றும் கடற்கரையில் செக்ஸ் வைத்துக்கொண்ட பிரிட்டன் ஜோடி ஆகியோர் துபாயில் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More

ரூ.5 கோடி வரை தருவதாக சோயிப் பேரம்....


சானியாவை திருமணம் செய்ய இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மீது, அவருடைய முதல் மனைவி என்று கூறிக்கொள்ளும் ஆயிஷாவின் தந்தை முகமது சித்திக் மோசடி புகார் கொடுத்து இருக்கிறார்.

ஆயிஷாவுடன் திருமணம் நடந்ததை சோயிப் ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டது.

ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாராஹில்ஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சோயிப் மீது மோசடி, வரதட்சணை கொடுமை, கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் இக்பால் சித்திக் இந்த தகவலை உறுதி செய்தார். ஆனால், உண்மை நிலைமை என்ன என்று ஆராய்ந்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சோயிப் தவிர, அவருடைய மைத்துனர் இம்ரான் ஜாபர் பெயரும் சித்திக்கின் புகாரில் இடம் பெற்றுள்ளது. சோயிப்புக்கு எதிராக புகார் கொடுக்கக்கூடாது என்று தங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் வந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். சித்திக் மேலும் கூறியதாவது:

"பாகிஸ்தானில் உள்ள வக்கீல் மூலம் சோயிப்புக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில், விவாகரத்துக்காக பணம் எதுவும் வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. என் மகள் ஆயிஷாவுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் அல்லது அவளுடன் திருமணம் நடைபெற்றதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

கடந்த 2002 ம் ஆண்டு ஜுன் 2 ந்தேதி அன்று நடைபெற்ற திருமண ஒப்பந்தத்தின் மூலம், தற்போதைய சட்டப்படி ஆயிஷாதான் சோயிப்பின் முதல் மனைவி. அவர் திருமணம் செய்ய இருக்கும் சானியா 2 வது மனைவிதான்.

பாகிஸ்தான் சட்டப்படி முதல் மனைவியின் சம்மதம் இன்றியோ அல்லது அவருக்கு விவாகரத்து வழங்காமலோ 2 வது திருமணம் செய்தால் 1 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் இடம் உள்ளது. இவ்வாறு சித்திக் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் திருமணம் தொடர்பான குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதற்கு ரூ.5 கோடி வரை தருவதாக சோயிப் பேரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

சித்திக் கொடுத்த புகாரை தொடர்ந்து, சோயிப் மாலிக்கை கண்காணிப்பதற்காக அவர் தங்கி இருக்கும் சானியாவின் வீட்டிற்கு முன்பு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Read More

செக்ஸ் வைத்து கொள்வதை தடுக்க, 6000மரங்கள் வெட்டி சாய்ப்பு.

செக்ஸ் தொல்லைக்கு பயந்து 6 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு

அடர்ந்த காட்டு பகுதியில் இளம் ஜோடியினர் செக்ஸ் வைத்து கொள்வதை தடுக்க, பிரிட்டன் நாட்டு வனத்துறையினர் ஆறாயிரம் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். பிரிட்டனில் லங்காஷயர் மற்றும் டார்வென் பகுதிகளையொட்டிய காட்டு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. சுற்றுலாவுக்காக வரும் இளம் ஜோடிகள் இந்த காட்டு வழிபாதையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒதுங்கி தங்கள் சல்லாபங்களை அரங்கேற்றி வந்தனர்.
இதனால், குழந்தைகளை அழைத்து வரும் மற்ற சுற்றுலாப் பயணிகள் சங்கடத்துக்கு உள்ளாயினர்.’மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் உங்கள் அந்தரங்க நடவடிக்கை அமையக்கூடாது’ என்ற வகையில், இந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்தன.இருப்பினும், இளம் ஜோடிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் மரத்தின் பின்புறத்தில் படுத்து கொண்டு சில்மிஷங்களை செய்து வந்தனர்.

சல்லாபகாரர்களுக்கு வழி வகுக்கும் இந்த மரங்களை போலீசார் உதவியுடன் இப்பகுதி நிர்வாகம் வெட்டி தள்ளியது. ஆறாயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த பகுதி வெட்டவெளியாகி விட்டது. இதனால், உள்ளூர் நிர்வாகம் திருப்திப் பட்டாலும், பசுமை ஆர்வலர்களுக்கு வருத்தம் தான்.’நூற்றாண்டு பழமைமிக்க மரங்களை, ஒரே நாளில் எப்படி வெட்டி சாய்க்கலாம்? இதுகுறித்து, முன்னறிவிப்பு வெளியிட் டிருக்க வேண்டும்’ என பசுமை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.’இந்த பசுமையான பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக மாறிவிடக்கூடாது, என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் மரங்களை வெட்டுவதற்கு ஒப்பு கொண்டோம்’ என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More