Pages

Sunday, April 25, 2010

சுறா ஒரு பார்வை


சுறா என்ன கதை?விஜய், இதுவரை நடிச்ச படங்கள்ல காதலுக்காக போராடியிருக்கிறார், நண்பர்களுக்காக போராடியிருக்கார். ஆனா, இதுல ஒரு குப்பத்துக்காக போராடுறாரு. அந்த மக்களோட வாழ்க்கை உயரணுங்கறதுக்காக போராடுற கதை. கடலும், தோணியும், மீன்களுமான அவங்களோட வாழ்க்கையை, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லியிருக்கோம். ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’, ‘கடல்மீன்கள்’, ‘கடலோர கவிதைகள்’ மாதிரி, கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் பற்றிய படமாக இது இருக்கும்.

தமன்னா என்ன கேரக்டர்?

தமன்னா கல்லூரி மாணவி. அவரும் விஜய்யும் சந்திக்கிறதும், அவங்களுக்கான நட்பும், காதலும் எல்லாமே காமெடியா இருக்கும். விஜய்யோட போட்டிப்போட்டு டான்ஸ் ஆடியிருக்காங்க தமன்னா. வழக்கமா, சில படங்கள்ல ஹீரோயின்கள் வந்து போகிற மாதிரி இருக்கும். இதுல தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம்.

வடிவேலு?

வடிவேலு வந்து நின்னாலே குபுக்குன்னு சிரிப்பு வரும். இதுல மிரட்டியிருக்காரு. பொதுவா, அவரோட பாடிலேங்குவேஜ் பிரம்மாதமா இருக்கும். இதுல விஜய்யோட நண்பரா, அம்பர்லாங்கற கேரக்டர்ல படம் முழுக்க வர்றார். அவரும் விஜய்யும் சேர்ந்து பண்ற கூத்து, எல்லாருடைய வயித்தையும் பதம் பார்க்கும்.

விஜய் படம்னா ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்குமே?

கண்டிப்பா. கடல்ல இருந்து 12 கி.மீட்டர் தூரத்துல நடுக்கடல்ல பைட் சீன் எடுத்தோம். ரொம்ப ரிஸ்கான காட்சி. தோணியில இருந்துகிட்டு சண்டை நடக்கும். டூப் போடலாம்னு சொன்னோம். விஜய் ஒத்துக்கலை. நானே நடிக்கிறேன்னார். பரபரக்கிற அந்த காட்சியும் படத்துல ஹைலைட்டான விஷயமா இருக்கும். ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கும் ரொம்ப மெனக்கெட்டிருக்கார் விஜய். ‘பொன்மனம்’, ‘என் உயிர் நீதானே’, ‘கார்மேகம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ராஜகுமார். இப்போது விஜய்யின் 50&வது படமான ‘சுறா’வை இயக்கியிருக்கிறார்.
‘விஜய் படத்துல இருக்கிற எல்லா அம்சங்களும் இதுல இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி. ஒவ்வொரு காட்சிக்கும் விஜய் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். ஏன்னா, இது அவரோட 50&வது படம்’ கண்டிப்பா. கடல்ல இருந்து 12 கி.மீட்டர் தூரத்துல நடுக்கடல்ல பைட் சீன் எடுத்தோம். ரொம்ப ரிஸ்கான காட்சி. தோணியில இருந்துகிட்டு சண்டை நடக்கும். டூப் போடலாம்னு சொன்னோம். விஜய் ஒத்துக்கலை. நானே நடிக்கிறேன்னார். பரபரக்கிற அந்த காட்சியும் படத்துல ஹைலைட்டான விஷயமா இருக்கும். ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கும் ரொம்ப மெனக்கெட்டிருக்கார் விஜய்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருக்கே?

ஆமா. மணிசர்மா இசையில எல்லா பாடலுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கு. படம் பார்க்கிற ரசிகர்கள் கண்டிப்பா, இரண்டு பாடலையாவது ஒன்ஸ்மோர் கேட்பாங்க. விஜய்யோட நடனமும், பாடலும் அவ்வளவு பிரமாதமா வந்திருக்கு. ‘நான் நடந்தா அதிரடி’, ‘தஞ்சாவூர் ஜில்லாக்காரி’ங்கற ரெண்டு பாடலும் பட்டையை கிளப்பும்.
Read More

அம்மா முன்னாடி ஹீரோயினை கட்டிப் பிடிக்க கூச்சப்பட்டேன் - நடிகர் அம்ரேஷ் கணேஷ்


 
WD
அம்ரேஷ் கணேஷை உங்களுக்கு‌த் தெ‌ரியாது. ஆனால் அவரது அம்மாவை அனைவருக்கும் தெ‌ரியும், நடிகை ஜெயசித்ரா. நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென இயக்குனர் தொப்பி மாட்டி ஆக்சன், கட் சொல்லத் தொடங்கியிருக்கிறார். காரணம் புத்திர பாசம். இவர் இயக்கும் நானே எனக்குள் இல்லை படத்தில் ஹீரோவாக நடிப்பவர் அம்ரேஷ் கணேஷ். படத்தைப் பற்றியும், அம்மாவின் இயக்கத்தில் நடிப்பது பற்றியும் அம்ரேஷுக்கு சொல்ல நிறைய இருக்கிறது.

முதல் படம், அதுவும் அம்மா இயக்கத்தில். எப்படி இருக்கிறது?

‘ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அம்மாங்கிறதையே மறந்திடு. நான் டைரக்டர், நீ ஹீரோ. பெர்ஃபாமன்ஸ்தான் முக்கியம். எத்தனை டேக் ஆனாலும் பரவாயில்லை’ன்னு ஒவ்வொரு நாளும் தை‌ரியம் சொல்லிதான் ஷாட்டுக்கே போவாங்க. அம்மாவால கேமரா பயமில்லாமல் நடிச்சேன்.

காதல் காட்சிகளிலுமா?

ஓ.. இல்லை. அம்மா எவ்வளவுதான் தை‌ரியம் தந்தாலும் பாத்ரூமில் ஹீரோயினை கட்டிப் பிடிக்கிற சீனில் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டேன். மத்தபடி எந்தப் பிரச்சனையும் இல்லை.

உங்களுக்கு ரோல் மாடல் யாராவது இருக்கிறார்களா?

ஹீரோயிஸம் இல்லாத கேரக்டர்னா சிவா‌ஜி சார் மாதி‌ரியும், ஆக்ரோஷமா நடிக்கிறதில் விஜய் சாரும் என்னோட சாய்ஸ். ஆனால் நம்ம மெச்சூ‌ரிட்டிக்கு மீறி பன்ச் டயலாக் பேசினால் எடுபடாது.

ஆனா, முதல் படத்திலேயே நீங்க பன்ச் டயலாக் பேசியிருக்கிறீங்களே?

படத்தில் கல்லூரியில் படிக்கிற சாதாரண இளைஞனா இருக்கிறப்போ நான் பன்ச் டயலாக் பேச மாட்டேன். அப்புறம் சினிமாவில் பெ‌ரிய ஹீரோவான பிறகுதான் பன்ச் டயலாக் எல்லாம் வரும்.

சாம்பிளுக்கு ஒன்றிரண்டு...?

சுண்டிவிட்டா சுனாமி டோய்.. இதுவொரு பன்ச். நேர்ல வந்தா நிலம் நடுங்கும், போன்ல பேசினா புயலடிக்கும் இது இன்னொன்னு.

படத்தின் கதை என்ன?

கல்லூரியில் படிக்கும் நானும் ஹீரோயினும் காதலிக்கிறோம். பிறகு இரண்டு பேருமே சினிமாவில் பெ‌ரியாளாகிடுறோம். அப்புறம் எங்க காதல் என்னாச்சுங்கிறதுதான் கதை. ஹீரோயினா ஆர்யா மேனன் நடிச்சிருக்காங்க. புதுமுகம்.

இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக்கிறீங்க...?

அப்பா பாடகர்ங்கறதால சின்ன வயசிலேயே இசை கத்து‌க்கிட்டேன். கடந்த எட்டு வருஷம் மணிசர்மா சார்கிட்ட கீ போர்ட் ப்ளேயரா வேலை பா‌‌ர்‌த்தேன். அந்த காலகட்டத்தில் இசையின் எல்லா நுணுக்கங்களையும் கத்து‌க்கிட்டேன். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கேன்.

இசையமைப்பதோடு பாடலும் எழுதியிருப்பதால் இந்த கேள்வி. இசை பாடல் வ‌ரிகளை அமுக்கிவிடுகிறது என்று ஒரு குற்றச்சாற்று இருக்கே?

வார்த்தைகளை இசை அமுக்கிவிடாமல் வார்த்தைகள் தெ‌ளிவாக பு‌ரியற மாதி‌ி இசையமைப்பதுதான் என்னோட பாணி.

படம் எப்படி வந்திருக்கிறது?

ஏறக்குறைய படம் முடிஞ்சிடுச்சி. கே.எஸ்.ரவிக்குமார் சார், விசு சார், பி.வாசு சார்னு பெ‌ரிய பெ‌ரிய டைரக்டர்களெல்லாம் என்னை இயக்குற மாதி‌ி படத்தில் காட்சி வருது. இதுவரை எடுத்ததைப் பார்த்துட்டு கே.பி.சாரும், கமல் சாரும் பாராட்டினாங்க. சந்தோஷமாக இருக்கு.
Read More

ராவணன் புதிய தகவல்கள்

 
 
இந்தியில் ராவண். தமிழில்...? ராவண், ராவணா, ராவணன், அசோக வனம்... இப்படி அரை டஜன் பெயர்கள் சொன்னார்கள். இறுதியில் ராவணன் என்ற பெயரை டிக் செய்திருக்கிறார் மணிரத்னம்.

இந்தியில் ட்ரெய்லர் வெளியிட்டுவிட்டார்கள். இன்று டி சீ‌‌ரிஸ் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறது. தமிழில் இதெல்லாம் எப்போது என்று ரசிகர்கள் முணுமுணுக்க‌த் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தி ஆடியோ ரைட்ஸை டி சீ‌‌ரிஸ் வாங்கியிருப்பதைப் போல தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் ஆடியோ வெளியிடப்படும் என்கிறார்களே தவிர உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தெலுங்கில் ராவணன் படத்துக்கு மணிரத்னம் வைத்திருக்கும் பெயர் வில்லன்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஈகோ மணிரத்னத்துக்கு ச‌ரிவராததால் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு சந்தோஷ்சிவனே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. நான்கு படங்களுக்கு‌‌ரிய ஃபுட்டே‌ஜ் இருப்பதால் பணிகள் மெதுவாகவே நடக்கின்றன. ஜூன் 18 ராவணன், ராவண், வில்லன் மூன்றும் திரைக்கு வருகிறது.
Read More

நடிகர் கார்த்தியும் பேசினார்

வாழ்ந்த வரை பலருக்கும் உதவிகள் செய்து நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் மறைந்த நடிகர் ஜெய்சங்கர். அவரது மகன் விஜய்சங்கர் பிரபலமான கண் மருத்துவ நிபுணர். சென்னை யில் பல இலவச கண் மருத்துவ முகாம்களை நடத்தியவர். இப்போது தந்தை ஜெய்சங்கர் பெயரில் ஒரு இணையதளத்தைத் துவங்கியுள்ளார்.

'ஜெய்சங்கர்.இன்' (www.jaishankar.in) என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், நடிகர் கார்த்தி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஜய்சங்கரின் மருத்துவமனையில் இந்த விழா நடந்தது.

இந்த விழாவில் பேசிய ஆணையர் ராஜேந்திரன், "தனது வாரிசையும் நடிகனாக்க முயற்சிக்காத அரிய கலைஞர் ஜெய்சங்கர். எத்தனையோ பேருக்கு வெளியில் தெரியாமல் உதவியவர். டாக்டர் விஜய்சங்கரும் நடிப்புத் துறைக்குப் போகாமல் அப்பாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இணையதளம் அவரது சமூகப் பணிகளுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.

நடிகர் கார்த்தியும் பேசினார். டாக்டர் விஜய்சங்கர் நன்றி கூறினார்.
Read More

கிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம்

முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், கிறிஸ்டி ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன.

சிந்தனைகள் என்ற பெயரில் ஸ்ரீதேவி ஒரு ஓவியம் வரைந்துள்ளார். இது கிறிஸ்டி நிறுவனம் மூலம் ஏலத்திற்கு விடப்படுகிறது. மே 6ம் தேதி இந்த ஏலம் நடைபெறவுள்ளது. தொடக்க விலையாக 25,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போனி கூறுகையில், சிறு வயது முதலே ஓவியம் வரையும் பழக்கம் உடையவர் ஸ்ரீதேவி. நேரம் கிடைக்கும்போது வரைவார். கடந்த சில வருடங்களாக தான் வரைந்து வந்த ஓவியங்களை தனது சகோதரிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். எங்களது குடும்ப நண்பர் சல்மான் கானுக்கும் கூட சில ஓவியங்களைக் கொடுத்துள்ளோம் என்றார்.

சில மாதஙகளில் மும்பையில் ஒரு கண்காட்சியை நடத்தவுள்ளாராம் ஸ்ரீதேவி. இதில் 30 ஓவியங்கள் இடம் பெறுமாம்.

1997ம் ஆண்டு போனியை மணந்த பின்னர் சினிமாவுக்கு விடை கொடுத்தார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

நீங்கள் தூக்கத்தில் நடப்பவரா?

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?).
ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்யஸ..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க?!)
மேலே சொன்ன தூங்கும்போது செய்யும் சேட்டைகள்ல, “தூக்கத்துல ஏன் சிலர் நடக்கிறாங்க”ன்னுதான் நாம இன்றைய பதிவுல  பார்க்கப்போறோம். ஆனா, மேலே நான் சொல்லாத, ஒரு சுவாரசியமான சேட்டைய, நான் சின்னவயசுல தூங்கும்போது பண்ணியிருக்கேன். அது என்னன்னு பதிவுச்செய்தியோட முடிவுல சொல்றேன். இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போகலாமாஸ..
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப்படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நடப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.
தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக்கிறது.
1. விழிப்பு நிலை (wakefulness)
2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}
3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!
தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?
தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண்டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல்றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனைவர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல்பூர்வமா சொல்லனும்னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப்படீன்னு அர்த்தம்!
சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?
உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான/தெளிவான பதில் தெரியலைங்கிறதுதான் நிதர்சன உண்மை!  இருந்தாலும், மாங்கு மாங்கு ஆராய்ச்சி செஞ்சிட்டு, இப்படித் தெரியலைன்னு, கூச்சப்படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறதுனால, (மக்களேஸ.இதெல்லாம் மேலிருப்பானோட தற்குறிப்பேற்ற அணிதான் சரிஙகளா?!) செஞ்ச ஆய்வைப் பத்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக்காருன்னாஸஸ.
பொதுவா தூக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாமாம்?!  ஆனா,  பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொடங்குகிறது என்கிறது ஆய்வு?!
இது தவிர்த்த வேறு சில காரணங்களாக ஆய்வுகளில் சொல்லப்படுவதுஸஸ
1. சரியான தூக்கமின்மை
2. ஜூரம்
3. மன உளைச்சல்
4. சில மருந்துகள் (ஊக்க மருந்துகள், sedatives, hypnotics, antipsychotics)
தூக்கத்தில் நடப்பதால் வரும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!
தூக்கத்தில நடப்பதால், விபத்துகள் ஏற்பட்டு நடப்பவருக்கும் பிறருக்கும் உடல் காயங்கள் எற்படலாம். இது தவிர, விவரிக்க முடியாத வித்தியாசமான செயல்களுடன் கூடிய தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பெரிய பாதிப்புகள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகையவர்களை குணப்படுத்த வேண்டும் என்கிறார் கபூர்!
தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டிற்க்கான சில சிகிச்சை முறைகள:
1. ஆரோக்கியமான தூங்கும் பழக்கம். அதாவது, சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது இப்படி பல
2. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது (தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை இழக்காமல் இருக்க)
3. இரவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள், அதை அறவே அருந்தாமல் இருப்பது அல்லது குறைத்துக்கொள்வது
4. இது தவிர்த்த, மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது!
என்ன நண்பர்களே, ஏன் சிலர் தூக்கத்தில் நடக்கிறாங்கன்னு, இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா?
சரி, இப்போ நான் பதிவு தொடக்கத்துல சொன்ன என்னோட சுவாரசியமான சேட்டைக்கு வருவோம்ஸ..
சின்ன வயசுல, பொதுவா தூங்கும்போது (மத்த (சில?) எல்லார்மாதிரியும், எப்பவாவது) எதையாவது பினாத்துற பழக்கம் எனக்கு இருந்ததுன்னு அம்மா சொல்லுவாங்க. இப்படித்தான் ஒரு முறை பினாத்தும்போது திடீர்னு, ஒரு முழு திருக்குறளையும், அக்ஷ்ரப் பிழையில்லாம அப்படியே சொன்னேனாம்.  என்ன குறள்னு இப்போ சரியா நியாபகம் இல்ல எனக்கு! (எத்தன பேரு இத நம்புவீங்கன்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான் சொன்னேன்னு எங்கம்மா சொன்னப்போ நானே நம்பலைங்கிறதுதான் உண்மை!)
தூக்கத்தில் நடப்பது பற்றிய மற்றுமோர் ஆய்வறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்
இந்தப் பதிவு பத்தின உங்க கருத்துகள பதிவு செஞ்சுட்டு போங்க நண்பர்களேஸ..
இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்கஸஸ., நன்றி!
ஓட்டுப் போடலையோ ஓட்டு
Rate This
குறியிடப்பட்டது:அறிவியல், ஆராய்ச்சி, கனவு, தூக்கம், மருத்துவம், வாழ்க்கை, brain, hypnotics, neurology, sleepwalking, stimulants
Posted in: அறிவியல், ஆராய்ச்சி, இது எப்படி இருக்கு, இனியாவது விழித்துகொள்வோம், இன்று ஒரு கேள்வி, இன்று ஒரு தகவல், எப்புடீ, தெரியுமா உங்களுக்கு, மருத்துவம், மர்மங்கள், விந்தை உலகம்
Read More

ஐஸ்வர்யா ராய் இலங்கை போககூடாது சீமான் கொந்தளிப்பு

ஐஸ்வர்யா ராய் படத்தை புறக்கணிப்போம்: அமிதாப் வீட்டு முன்பு நாளை போராட்டம்: இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி: சீமான்
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராயும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மனவருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் பங்கேற்பது தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
விழாவில் பங்கேற்பதை அவர் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மற்றும் தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இவ்விழாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தமிழர்களின், தமிழக்கலைஞர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் அமிதாப், ஐஸ்வர்யா ராய் இருவரும் இவ்விழாவில் பங்கேற்பார்களேயானால் ஐஸ்வர்யா நடித்துள்ள படத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவரது படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள்.
தமிழர்களின் மரணச் செய்தி தினமும் வந்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழர்கள் கண்ணீர்க்டலில் மிதக்கும் நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை மகிழ்விக்க இத்தகைய ஒரு விழா நடத்தப்படுவது தேவைதானா என்று அமிதாப் பச்சன் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
தமிழர்களின் ஆதரவில் வசதி வாய்ப்புகளை தேடிக்கொண்ட ஐஸ்வர்யா ராய் தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது.
எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இதற்கு முன் உதாரணமாக மும்பையில் உள்ள அமிதாப் வீட்டு முன்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை காலை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மும்பையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.
இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி
தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதக்க இலங்கையில் ராஜபக்சேவை மகிழ்விக்க சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துவதா என்று அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அழைப்பை புறக்கணித்த ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.
இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது,
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த இரு கலைஞர்களுக்குக்கும் அனைத்து தமிழ்க்கலைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்க்கலைஞர்கள் யாரும் இவ்விழாவுக்கு போகக்கூடாது என்று அனைத்து தமிழ்க் கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
சென்ற ஆண்டு இதே நாளில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை மறக்கடிக்க திட்டமிட்டு இந்த விழா நடத்தப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைக்கும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் முள்வேலிக்கு மத்தியில் கடும் சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
Read More