அடிக்குது புயல். அணையப் போகுது மெழுகுவர்த்தி. இந்த நேரத்தில் இரண்டு கைகள் ஓடிவந்து காற்றை தடுத்து சுடரை காப்பாற்றினால் அந்த கைக்கு என்ன கொடுப்பீர்கள். ஒரு முத்தம்? முதலில் அதை சேரனுக்கு கொடுங்கள். சென்னையை சேர்ந்த மாணவி நிவேதிதா மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றிருந்தார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை தவறுதலாக முடிய, சுய நினைவிழந்த நிலையிலிருக்கிறார் நிவேதிதா. சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அந்த மாணவிக்கு தங்களால் இயன்ற மருத்துவத்தை அளித்திருக்கிறார்கள் பெற்றோர். ஆனால் அதை தொடர முடியாதபடி ஏழ்மை அவர்களுக்கு. இந்த சோக கதையை சொல்லியிருந்தது ஒரு முன்னணி நாளிதழ். இதை படித்த சேரன் அந்த மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு தன்னால் இயன்ற உதவியை செய்ய முன்வந்ததாக தகவல் கிடைத்தது. நாம் சேரனிடமே பேசினோம். இப்படி ஒரு செய்திய படிச்சதும் அதிர்ச்சியானேன். தொலைபேசி மூலமா அவங்க பெற்றோரிடம் பேசினேன். அப்போது அவங்க டெல்லியில் இருந்தாங்க. நிவேதிதாவை அங்குள்ள பெரிய டாக்டர் ஒருவரிடம் காட்டுவதற்காக போயிருந்தாங்க, நான் அந்த செய்தியை படிச்சதும் எனக்கு தெரிஞ்ச சில மருத்துவ நண்பர்களிடம் பேசியிருந்தேன். அலோபதியை விட இங்குள்ள ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவத்தில் இதை சரி செய்யலாம் என்று அவங்க சொன்னதை நான் நிவேதிதாவின் பெற்றோர்களுக்கு சொன்னதுடன், "தைரியமா இருங்க. என்னாலான உதவியை செய்யறேன்" என்று சொன்னேன். நமது பாரம்பரிய மருத்துவத்தில் இல்லாத வைத்தியங்களே கிடையாது. ஆனால் அதை புரிஞ்சுக்காம எல்லாரும் அலோபதியை நாடி போறாங்க" இந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருக்கிற என்னோட மருத்துவ நண்பர் ஒருத்தரை சென்னைக்கு வரச் சொல்லியிருக்கேன். அவரும், நிவேதிதாவும் சென்னைக்கு வந்ததும்தான் என்ன செய்வது என்பதை பற்றி முடிவெடுக்கப் போகிறோம். அந்த பெண் மீண்டும் பழைய நிலைக்கு வர என்னென்ன செய்யணுமோ, அதை செய்வோம். அதற்குள் நான் பண உதவி செய்ததாக வந்த செய்தி தவறானது. அதே நேரத்தில் அதற்கும் நான் தயாரா இருக்கேன் என்றார் சேரன். |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.