Pages

Saturday, April 3, 2010

பணத்துக்கு பணம், புகழுக்கு புகழ். வேண்டாம் என்றா‌ர்...அசின்


பிராண்ட் அம்பாசிடர்... கொஞ்சம் பிரபலமடாக இருந்தால் போதும், உங்களையும் இந்தப் பதவி தேடி வரும்.

நடிகை அசின் குளிர்பானம் நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்துள்ளார். இன்னொரு பிராண்ட் அம்பாசிடர் பதவியும் அவரை தேடி வரவுள்ளது.

நவீன தோட்டமான ஐ.பி.எல்.லில் புதிதாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டில் ஒன்று கொச்சின். கொச்சின் அணியை பிரபலப்படுத்த அசினை பிராண்ட் அம்பாசிடராக நியமிக்க கொச்சின் அணியின் உ‌ரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அசினுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

பிராண்ட் அம்பாசிடர் என்பது கரும்பு தின்ன கூலி கொடுப்பதைப் போன்ற ஒரு பதவி. பணத்துக்கு பணம், புகழுக்கு புகழ். வேண்டாம் என்றா‌ர் சொல்லப் போகிறா‌ர் அசின்

Read More

'தேனிலவு போனாலும் தனியாதானே போவேன்'...பரத்.

திருத்தணி வந்தால் தீப்பொறி பறக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் பேரரசு. ஆனால் தீப்பொறி கிளப்ப வேண்டிய பரத், ஜில் ஜில் சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டார்.

சம்மர் சீசன் வந்தாலே ஊட்டி கொடைக்கானல் என்று ஷிப்ட் ஆகிவிடுவது ஹீரோக்களின் ஸ்டைல். சொந்த காசில் சொகுசு காண்பது அவ்வளவு நல்ல பழக்கம் இல்லையே? இப்படி படப்பிடிப்புக்காக போகும் சில ஹீரோக்கள் பத்து நாட்களில் முடிய வேண்டிய ஷ§ட்டிங்கை கூட இழுத்து பிடித்து இருபது நாட்கள் ஆக்குவதெல்லாம் இன்டஸ்ட்ரி அறிந்த எனிமா விஷயங்கள்.
ஆனால் இது போன்ற ஹீரோக்களில் சற்றே வித்தியாசமானவராக இருக்கிறார் பரத். ஒவ்வொரு சம்மருக்கும் தனது பணத்திலேயே இன்ப சுற்றுலா போவது அவருக்கு பிடித்த ஹாபி. (மற்றவங்களும் கொஞ்சம் பழகுங்கப்பா) கடந்த முறை அமெரிக்கா போயிருந்தவர் இந்த முறை ஹாங்காங் போயிருக்கிறாராம்.

'தேனிலவு போனாலும் தனியாதானே போவேன்' என்கிற சிக்கன சிகாமணியாகவும் அவர் இருப்பதால், இந்த பயணம் ஒன் அண் ஒன்லி பயணம்தானாம். ஒன்லியாக இருந்தால் கூட தப்பில்லை. ஓசியாக இருந்தால்தான் தப்போ தப்பு!

Read More

மூன்று மாத பிளான் ஒன்றரை மாதத்திலே...ஏன்?


மூன்று மாத பிளானில் ஃபார்முலா -2 ரேசுக்கு கிளம்பிய அஜீத், ஒன்றரை மாதத்திலேயே திரும்பும் மூடில் இருக்கிறாராம். ஏன்? அவரது மனசுக்குள் புகுந்து புறப்படுகிற ஆற்றல் யாருக்கு இருக்கிறது?

அவர் நினைத்தால் நினைத்ததுதான். நல்லவேளையாக இது சலிப்பினால் வந்த ரிட்டர்ன் இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அவரது எளிமைக்கு இன்னும் ஒரு சான்று என்று அஜீத் தரப்பில் வைக்கப்படுகிற சங்கதி, ரொம்பவே அழகு. பைவ் ஸ்டார் ஓட்டல்கள், பளபள தங்கும் விடுதிகள் என்று இவர் போயிருக்கிற ஏரியாவில் பிரபலமாக இருந்தாலும், 3 படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றில்தான் தங்கியிருக்கிறாராம் தல. இவருக்கென்று சமைத்துப்போட இந்திய சமையல்காரர் ஒருவரும் அவருடன் இருக்கிறாராம். (குழந்தைக்கு பனி ஒத்துக் கொள்ளாது என்பதால் கடைசி நேரத்தில் குடும்பத்தை இங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறார் தல)

முதல்வரை சந்தித்து தனது ரேசுக்காக ஸ்பான்சர் கேட்டிருந்த அஜீத், அதன்பின் இந்த விஷயத்தை திரும்ப திரும்ப கேட்டு நச்சரிக்காமல் போனதாலோ என்னவோ, அது பற்றி இவர் கிளம்புகிற வரைக்கும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கும்பிட போனவருக்கு குறுக்கேவே பிள்ளையார் என்பது மாதிரி ஒரு அதிர்ஷ்டம். ஈராசியா மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் அஜீத்திற்கு ஸ்பான்சர் செய்திருக்கிறதாம். இது ஒருபக்கம் இருந்தாலும், தனது கை பணத்தில் சுமார் இரண்டு கோடி வரை செலவு செய்திருக்கிறாராம் அஜீத்.

Read More

'மீனாவை நீ மறந்துவிட்டதாக சொல்வது பொய்..

காந்தர்வன்

-

மணியும்,​​ மீனாவும் காதலர்களாக இருந்துப் பிரிந்து விட்ட ​ நிலையில்,​​ தன் நண்பன் பாண்டியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறான்.​ ''மீனாவை நீ மறந்துவிட்டதாக சொல்வது பொய்.​ அவளை உன் உடம்பிலும்,​​ மனசிலும் இன்னும் நீ சுமந்து கொண்டிருக்கிறாய்'' என்று பாண்டி சொல்கிறான்.​ ''இல்லை'' என்று மறுக்கிறான் மணி.​ ​ ​​ ''உன் பிறந்த நாள் அன்று மீனா வாங்கிக் கொடுத்த டிரெஸ்ஸைத்தான் நீ இப்போது அணிந்து கொண்டிருக்கிறாய்'' என்று பாண்டி சொன்னதும் டூ வீலரை நிறுத்திய மணி,​​ தன் டிரெஸ்ஸைக் கழற்றி,​​ அதை தீ வைத்துக் கொளுத்துகிறான்.​ ''இந்த டிரெஸ் எரிவது போல் அவளையும் எரிக்கிறேன் பார்'' என்று சவால் விடுகிறான்.​ அப்போது அந்த வழியாக ஆட்டோவில் தன் தந்தையுடன் வரும் மீனா ஜட்டியுடன் நிற்கும் மணி,​​ தன்னை எரித்து விடுவேன் என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள்.​ இப்படியொரு காட்சி "காந்தர்வன்' படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்டது.​ இதில் மணியாக கதிரும்,​​ மீனாவாக செளந்தர்யாவும்,​​ அவரது தந்தையாக தயாரிப்பாளர் ஆண்டமுத்துவும்,​​ பாண்டியாக ரமேஷ் பாண்டியும் நடித்தனர்.​ ​ "தாமரை மூவீஸ்' வழங்க,​​ "செளத் இந்தியன் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பில் வி.ஏ.ஆண்டமுத்து,​​ பி.கே.தர்மராஜ் -​ ​ கோவிந்தராஜ் ஆகியோருடன் இணைந்து நிறைய பொருட்செலவில் ​ இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.​ கரண் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கை துரை இப்படத்தின் கதை,​​ திரைக்கதை,​​ வசனம் எழுதி இயக்கி வருகிறார்.​ ​​ "நிறம்' என்ற படத்தில் கதாநாயகனாகவும்,​​ "நெஞ்சத்தைக் கிள்ளாதே',​ "நாளை நமதே' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவருமான கதிர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.​ கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் சினிமாவுக்காக தன் பெயரை செளந்தர்யா என்று மாற்றிக்கொண்டு இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.​ இவர்களுடன் ராஜ்குமார்,​​ ஜே.எம்.எஸ்.துரை,​​ கதாநாயகயின் தந்தையாக தயாரிப்பளார் ஆண்ட முத்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.​ இயக்குனர் சலங்கை துரை படம் பற்றி கூறும்போது,​​​ ''இது ஒரு காதல் கதைதான்.​ ஆனால் வழக்கமான காதலாக இருக்காது.​ காதலை புதிய கோணத்தில் சொல்ல வருகிறேன்.​ இந்தப் படத்தை பார்க்கும் இளம் பெண்கள் பலர் இப்படத்தின் கதாநாயகனைப் போல நமக்கு காதலன் இருக்கக் கூடாது என்று நினைப்பார்கள்.​ அந்தளவுக்கு வெறுக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் கதாநாயகன் பாத்திரம் அமைந்திருக்கும்'' என்றார்.​ ஒளிப்பதிவு :​ அனில் கே.​ சேகர்,​​ இசை :​ அலெக்ஸ் பால்,​​ படத்தொகுப்பு :​ எஸ்.எம்.வி.சுப்பு,​​ கலை :​ எம்.ராஜதுரை,​​ நடனம் :​ சிவசங்கர்,​​ தினா,​​ பாடல்கள் :​ வாலி,​​ விவேகா,​​ முத்துவிஜயன்.
Read More

`படிக தொழில் நுட்பத்தின்’அடிப்படையில் மொபைல்.

மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்


மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.

படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Read More

ஷோயப் மாலிக்குடன் தனக்கு திருமணம் நடந்துள்ளதற்கு ஆதாரமாக.....


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் தனக்கு திருமணம் நடந்துள்ளதற்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்.
÷இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
÷இந்நிலையில் 2002-ம் ஆண்டில் தன்னை மாலிக் ஏற்கெனவே திருமணம் செய்துள்ளதாக கூறிய ஆயிஷா, தற்போது திருமணச் சான்றிதழை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். இந்த சான்றிதழ், பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இதில் அவர்கள் இருவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
÷இது குறித்து ஹைதராபாதில் இருந்து அந்த தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஆயிஷா, "என்னை மாலிக் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டார் என்பதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கவே திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளேன். நான் அதிக எடையுடன் இருந்ததால் மாலிக் என்மீது வெறுப்பாக இருந்தார்' என்றார். மாலிக்கை சானியா திருமணம் செய்து கொண்டால் அவரது இரண்டாவது மனைவியாகத்தான் இருப்பார் என்று ஆயிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Read More

ஆக்ஷன் ஹீரோயி​னாக....நமீதா


தமிழ் சினிமாவில் "கவர்ச்சிகன்னி'யாக தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் நமீதா. தற்போது வித்தியாசமான வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். நமீயிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அவர் கொஞ்சம் இளைத்து, இன்னும் கூடுதல் அழகாயிருப்பது! தட்டுத்தடுமாறி நமீ பேசும் தமிழை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.வெயில் தலைக்காட்டத் தொடங்காத ஒரு காலை வேளையில் நமீயை ஒரு காபி ஷாப்பில் சந்தித்து உரையாட காத்திருந்தோம். "வாங்க மச்சான்' என்று கூறியபடியே நமீ, கண்களில் காந்தப்பார்வையும், இதழில் புன்னகையுமாக நம் முன்னே வந்து அமர்ந்தார். இரண்டு கோல்டு காபிகளுக்கு ஆர்டர் செய்து விட்டு, நம்மிடம் உரையாடினார்.நீங்கள் நடித்து வெளியான ஒரு படம் சம்பந்தமாக உங்களைப் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளதே?இனிமேல் அந்தப் படத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு. என்னைப் பொருத்தவரைக்கு நாலு பேர் திட்டினாக்கூட அது ஒரு செய்திதான். ஆனால், எந்தத் திட்டுக்கும் நான் பொறுப்பானவள் இல்லை.அந்தப் படத்தை பொருத்தவரை நான் நேர்மையாகவும், சரியாகவும், மரியாதையாகவும் நடந்திருக்கிறேன். தவறுகள் யார் தரப்பில் என்பதை நான் உணர்த்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பேச்சில் உண்மையில்லை என்பது என்னை அறிந்த எல்லோருக்கும் தெரியும். ஏன்? சொன்னவருக்கும் கூட இது தெரியும்! அப்படியிருக்கும்போது நான் எதைச் சொல்லுவது? நடந்தது நடந்ததாக இருக்கட்டும். என்னை பழிப்பவர்களுக்கு கடவுள் பதில் அளிப்பார். தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?தெலுங்கில் "சிம்ஹா' என்னும் பெயர் கொண்ட படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக, போயபட்டி சீனு இயக்கத்தில் நடிக்கிறேன்.இதில் எனக்கு கிளாமர் கேர்ள் வேடம் (உங்களுக்கு வேறெந்த வேடமும் கொடுக்கமாட்டாங்களா? நமீ!) இதில் பாலகிருஷ்ணா ஸôர் பொதுவுடைமை பேசுகிற வேடத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த பேச்சினால் அவர் மேல் எனக்கு காதல் பிறக்கிறது. அதன்பின் எங்கள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அசோக் இயக்கத்தில் "தேசத்துரோகி' என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும் மலையாள இயக்குநரான பிரமோத் பப்பன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. இது தவிர வேறெந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.தொடர்ந்து தெலுங்கிலும் நடிப்பீர்களா?இயக்குநர் சரண் ஸôர்தான் தெலுங்கு "ஜெமினி' படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகுதானே தெலுங்கிலிருந்து நான் தமிழுக்கு நடிக்க வந்தேன். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஒன்றும் தவறில்லையே? தமிழ், தெலுங்கு, மலையாளரம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்தாகிவிட்டது. எல்லா மொழியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். "கோ' படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே?"கோ' படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க அழைத்தார்கள். ஆகவேதான் நடிக்க மறுத்தேன். இப்போதுமட்டு ​மில்லை,எப்போ​துமே ""ஒரு பாட​லுக்​காக நான் நடிக்க மாட்​டேன்'' என்று சொல்​லித்​தான் வந்​தி​ருக்கி​றேன்.அது மிகப்பெ​ரிய பட​மாக இருந்​தா​லும் கூட நான் நடிக்க மாட்​டேன்.ஏனென்​றால், நான் ஒரு பாட​லுக்கு மட்​டும் போய் அந்​தப் படங்க​ளில் ஆடி, நடித்​தால் பிறகு அதையே நமது பாணி​யாக்கி நம்மை ஒரு பாட​லுக்கு மட்​டும் ஆடும் நடி​கை​யாக்கி விடு​வார்கள். எனக்​கென்று ரசிகர்களிடத்​தில் ஒரு இமேஜ் இருக்கிறது. ஆகவே​தான் "கோ' படத்​தில் நடிக்க மறுத்​தேன்.மற்றபடி அதில் வேறெந்த உள்​நோக்க​மும் இல்லை!உங்க​ளுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் கிடைக்கிறதா?என்னை நம்பி எடுக்கப்படு​கிற படங்க​ளுக்கு ரசிகர்க​ளின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அத​னால் என்​னு​டைய ரசிகர்கள் எதை விரும்பு​வார்கள்?என்று யோசித்து,அதற்​கேற்ற​வாறு கதைக​ளைத் தேர்ந்தெ​டுக்கி​றேன்.தயா​ரிப்பாளர்க​ளும் இந்த விஷயத்​தைப் புரிந்து வைத்தி​ருப்ப​தால்​தான் எனக்​கேற்ற கதைக​ளைத் தேர்வு செய்து​கொண்டு வந்து என்னை அணுகுகி​றார்கள்.அப்ப​டித்​தான் "நில் கவனி என்​னைக் காதலி',"இந்திர​விழா' போன்ற படங்க​ளில் நடித்​தேன்.ரசிகர்க​ளும் இப்படங்க​ளுக்கு பெரிய ஆதரவு அளித்​தார்கள்.இது போன்ற கதைகள் எனக்கு அமைந்​தால் தொடர்ந்து நடிப்​பேன்.ஏனெ​னில்,என்னை வைத்து படமெ​டுக்​கும் தயா​ரிப்பாளர்கள் என்​னால் நஷ்டமடையக்கூ​டாது!"மானாட மயி​லாட' குறித்து?இன்று எனக்கு கிடைத்தி​ருக்​கும் ரசிகர் பட்டாளத்​தில் பெரும்பாலானவர்கள் சின்னத்​திரை மூலம் கிடைத்தவர்கள்​தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரு​கிற சாதன​மாக இன்று சின்னத்​திரை இருக்கிறது. ரசிகர்க​ளின் இடத்​திற்கே சென்று, அவர்க​ளைச் சந்​திப்பது என்பது சின்னத்​திரை மூலம்​தான் முடி​யும்."மானாட மயி​லாட' என்பது ஒரு வெற்றிகர​மான நிகழ்ச்சி.அதுக்கு மக்கள் மத்தி​யில் கிடைத்தி​ருக்​கும் வர​வேற்பு எத்​தகையது? என்பது உங்க​ளுக்​கேத் தெரி​யும்!இந்நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன்.இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்க​ளுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்​கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.அந்த உற்சாகப்ப​டுத்​தும் வேலையை நான் மானாக​வும்,மயிலாக​வும் இருந்து செய்து வருகி​றேன். அதுமட்டு​மில்லை, இந்த நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது. வட இந்​திய நடிகர்கள்​தான் இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் கலந்து​கொண்டு போட்டியாளர்களை​யும்,ரசிகர்களை​யும் உற்சாகப்ப​டுத்து​வார்கள்.தென் ​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக "மானாட மயி​லாட' மூலம் கிடைக்கிறது. தற்​போது என்​னைத் தொடர்ந்து இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் பூஜா,ரம்பா ஆகி​யோர்க​ளும் கலந்து​கொண்டு வருகி​றார்கள். சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைக​ளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன்.ஆக்ஷன் ஹீரோயி​னாக நடிப்​பீர்களா?இந்தக் கேள்​வியை நீங்கள் இயக்குநரிடம்​தான் கேட்டி​ருக்க வேண்​டும்.எந்த இயக்குநர் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிக்கக் கேட்டா​லும் என்னு​டைய கால்​ஷீட் ரெடி!தற்​போது நடிக்க இருக்​கும் "தேசது​ரோகி' படத்​தில் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிப்பதற்​கான வாய்ப்புகள் இருக்கு.படம் தயா​ரிக்​கும் எண்ண​முண்டா?ஒரு நல்ல கதை கேட்டு வைத்தி​ருக்கி​றேன்.இதை கொஞ்ச காலத்​திற்​குப் பிறகு தயா​ரிக்க​லாம் என்று திட்ட​மிட்டி​ருக்கி​றேன்.அவசரப்பட்டு தற்​போது படம் தயா​ரிக்​கும் திட்ட​மில்லை.ஆனால் தயா​ரிக்​கும்​போது கண்​டிப்​பாக தமி​ழில்​தான் அந்தப் படத்தை எடுப்​பேன்.சாமி​யார்க​ளைச் சந்​தித்து இருக்கி​றீர்களா?எனக்கு கட​வுள் நம்​பிக்கை உண்டு!​​ நெருக்க​மான தோழிகள் யார்? யார்?சினேகா​வும், பூஜா​வும்​தான்!
Read More