Pages

Friday, April 23, 2010

பிறந்தநாள் கொண்டாடினார் சச்சின் டெண்டுல்கர்

 கிரிக்கெட் என்றால் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர்தான். கிரிக்கெட் விளையாட தொடங்கும் ஒவ்வொரு சிறுவனும் முதலில் நினைப்பது டெண்டுல்கரைத்தான்.

கிரிக்கெட்டை பொழுதுபோக்காக கொண்டவர் பலர். தொழிலாக கொண்டவர் பலர். வாழ்க்கையாக கொண்டவர் சிலர். கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கொண்டவர் ஒரே ஒருவர்தான். அவர் பெயர் சச்சின் டெண்டுல்கர்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் முறையாக தனது அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற சந்தோஷத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது 37வது பிறந்த நாளை இன்று மும்பையில் கொண்டாடினார். அப்போது சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மும்பை அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்தார்.
Read More

ஐ.பி.எல்.: மராட்டியத்துக்கு ரூ.5 கோடி இழப்பு

ஐ.பி.எல். போட்டிகளுக்கு வரி விதிக்காததின் காரணமாக மராட்டியத்துக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.

2009 ம் ஆண்டு மார்ச் 31 ந் தேதியுடன் முடிந்த ஓராண்டுக்கான கணக்கு தணிக்கையர் அறிக்கை, மராட்டிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளான நேற்று வைக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக கூறி இருப்பதாவது:
பொழுதுபோக்கை மையமாகக் கொண்டுதான் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படுகின்றன. டி.வி. பொழுதுபோக்குக்கு மாற்றாக இந்தப் போட்டிகள் அமைகின்றன. எனவே மக்களுக்கு பொழுது போக்காக திகழ்வது என்ற நோக்கத்தை கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படுவதால்,டிக்கெட் விற்பனைக்கு கேளிக்கை வரி விதிப்பது சரியானது. ஐ.பி.எல்.போட்டிகளுக்கு நல்ல வருவாய் வாய்ப்பு உரியது. முழுக்க முழுக்க வணிக மயமானது.

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற அணிகளை வாங்குவதற்கு தொழில் அதிபர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். பணம் கொழிக்கும் இந்தக் கிரிக்கெட் போட்டிகளில் உலகமெங்கும் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கிரிக்கெட் மைதானங்களின் இருக்கைகளின் எண்ணிக்கை அடிப்படையில், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.500 ஐ கணக்கில் கொண்டால், மராட்டிய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.4 கோடியே 99 லட்சம் ஆகும்.

2008 ம் ஆண்டு மும்பை வாங்கடே மைதானத்தில் 6 போட்டிகளும், நவிமும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் 4 போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. டிக்கெட்டு விற்பனை இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை.

டிக்கெட் விலை, பல்வேறு போட்டிகளுக்கும் விற்பனையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் அரசு அதை அளிக்க வில்லை.

டெல்லி மாநில அரசைப் பின்பற்றி ஐ.பி.எல். போட்டிகளுக்கு வரி விதிப்பது பற்றி மராட்டிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

கொல்கத்தா அணிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் மற்றும் அதில் முதலீடு செய்து உள்ள கேம்பிளான் விளையாட்டு கழகத்தின் வரவு செலவு பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ,இதைத்தொடர்ந்து, அந்த இரு நிறுவனங்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

கடந்த வாரம் அந்த இரு நிறுவனங்களிலும் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து இந்த நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த இரு அமைப்புகள் சார்பிலும் அதன் அதிகாரிகள் அல்லது வக்கீல்கள், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகலாம் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Read More

திருவள்ளுவர் வேடம் - ரஜினியின் கனவு




இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் இன்றும் நெருக்கமாக இருக்கிறார் ரஜினி. ரஜினிக்காக முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்களை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழா நாள்களில் எஸ்.பி.முத்துராமனுடன் பொழுதைக் கழிக்க விருப்பப்படுவார் ரஜினி.
வீட்டில் இருக்கும் நேரங்களில் "ஓம்' என்ற மந்திர பாடல் ஒலிக்குமாறு பார்த்துக் கொள்வார்.
கோடை காலத்தில் ராகவேந்திரா மண்டப வாசலில் மோர் மற்றும் ஐஸ் வாட்டர் கொடுக்க ஏற்பாடு செய்து விடுவார். ராகவேந்திரா மண்டபம் கட்டி இரண்டு வருடங்களுக்கு பின் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் வேடம்தான் ரஜினியின் சினிமா உலக கனவு. இப்போதும் அந்த வேடத்துக்கு ரெடியாக இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் தங்கி ஒய்வெடுப்பதை ரஜினி விரும்ப மாட்டார். தொழிலாளியின் துண்டை வாங்கிப் போட்டு செட்டிலேயே குட்டி தூக்கம் போடுவது அவருக்குப் பிடித்தமானது.
Read More

"11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்


நூறாண்டுகளுக்கும் மேலாக "கௌரவமான%27 விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் விளையாட்டு இன்று கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் பண முதலைகளினதும் சூதாட்டப் பெருச்சாளிகளினதும் சொத்தாக, சிறந்த தொழில் முதலீடாக மாறிவருகின்றமை கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளதுடன் கிரிக்கெட் விளையாட்டின் சிறப்பையும் சீரழித்துவருகின்றது. தற்போது நடைபெற்று இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியினால் இவ் விளையாட்டின் இன்னொரு கேவலமான பக்கத்தையும் அதன் பின்னணியிலுள்ள நிழல் உலக சூதாட்ட பேர் வழிகளையும் இனங்காணக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை வாங்கியிருக்கும் உரிமையாளர்களையும் வாங்கத் துடிக்கும் கோடீஸ்வரர்களையும் பார்க்கும் போது கிரிக்கெட் விளையாட்டு தற்போது வணிகமயமாகிவிட்டதைக் காண முடிகிறது. இதனால் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக ஆரோக்கியமான விமர்சனங்களை அண்மைக்காலமாகக் காணமுடியவில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகவிருந்த கிரிக்கெட் விளையாட்டு தற்போது ஆட்டம், பாட்டம், சூதாட்டமாக மாறிவிட்டது. மைதானத்தில் தீர்மானிக்கப்படவேண்டிய வெற்றிதோல்விகள், 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் கேளிக்கை விடுதிகளிலுமே தற்போது தீர்மானிக்கப்படுகின்றன.
சிறந்த அணிகள் படுதோல்விகளை அடைவதும் சாதாரண அணிகள் இமாலய வெற்றிகளைக் குவிப்பதும் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பதும் முகவரியற்ற வீரர்கள் சதம், அரைச்சதமென விளாசுவதையும் பார்த்து இதுவரை காலமும் குழம்பிப் போயிருந்த ரசிகர்கள் இப்போது மிகவும் சர்வசாதாரணமாக "பணத்தை வாங்கிவிட்டார்கள்%27 என்று சொல்லுமளவுக்குக் கிரிக்கெட் விளையாட்டின் புனிதத்தன்மை கெட்டுப்போய்விட்டது. விளையாட்டுக்குள் அரசியலைத் திணிக்கக் கூடாதெனக் கூறிவந்த நிலைமை மாறி இப்போது விளையாட்டே அரசியலாகிவிட்டது. சூதாட்டக்காரர்களுடன் அரசியல்வாதிகளும் இன்று கைகோர்த்துள்ளமையால் கிரிக்கெட் விளையாட்டின் ஆயுட்காலம் குறைவடைந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் அணிகளை வாங்கும்நடிகர், நடிகைகளிடம் குவிந்துகிடக்கும் ஆயிரமாயிரம் கோடி ரூபாக்களைப் பார்த்து ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. நடிப்புத்துறைக்கு வந்து சில வருடங்களேயான நடிகைகள் எல்லாம் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடியென பணத்தைக் கொட்டி கிரிக்கெட் அணிகளை வாங்குவது அதைவிட பல மடங்கு கோடிகளை சம்பாதிக்க முடியுமென்ற நம்பிக்கையிலேயே. நடிகைகள் மட்டுமன்றி கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புபட்ட "அனுசரணை%27 ஒளிபரப்புகள் என அத்தனையிலும் கோடிக்கணக்கான ரூபாக்கள் கைமாறி பெரும் வணிக சூதாட்டமே இடம்பெறுகின்றன.
சாதாரண மக்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் ரசித்து வரும் நிலையில் அதன் பின்னணியில் கறுப்புப்பணங்கள் நிரம்பிய ஒரு சூதாட்ட சாம்ராஜ்யமே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. சாதாரண மக்களுக்கு விளையாட்டாகத் தெரியும் கிரிக்கெட் பணக்கார முதலாளிகளுக்கும் சூதாட்டக் கும்பல்களுக்கும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகளுக்கும் அது விளையாட்டாகவின்றி கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் சிறந்த வியாபாரமாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் "11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்%27 என்று ஜோர்ஜ் பெர்னார்ட் ஷா கூறியது நினைவுக்கு வருகின்றது.ஆனால், உண்மையில் இன்று கிரிக்கெட் என்பது 11 அதிபுத்திசாலிகள் விளையாடுவதை இலட்சக்கணக்கான முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு கௌரவமான விளையாட்டு இன்று சூதாடிகளின் கைகளுக்குள் சென்றுவிட்டதைப் பார்த்துக்கொண்டு விளையாட்டை ரசிப்பதைத் தவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேறுவழியில்லை.
Read More

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்



பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ''நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,'' என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Read More

பயம் அறியான் விமர்சனம்


வீட்டு வேலை செய்து பிழைக்கும் சரண்யா மகன் மகேஷ் ராஜா. குடித்து ஊதாரியாக சுற்றுகிறார். ஆனாலும் மகன்மேல் பாசம். அவரை திருத்த எவ்வளவோ முயன்றும் தோல்வி அடைகிறார்.
 
ரவுடிகளுக்கு உதவி கோடியாய் சம்பாதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் எதிரிகளை தீர்த்துகட்ட மகேஷ் ராஜாவை பயன்படுத்துகிறார். தாதா பொன்னம்பலத்தை வீழ்த்தி அவரிடம் இருந்த பல லட்சங்களை கொள்ளையடித்து வரவைக்கிறார். கடையில் இருந்து காலி செய்ய மறுக்கும் ஒருவனை மிரட்டி வெளியேற்ற ஏவுகிறார். அப்போது கடைக்காரரின் அடியாட்களுக்கும் மகேஷ்ராஜா கோஷ்டிக்கும் அடிதடி நடக்கிறது. இந்த மோதலில் ரமேஷ்ராஜா வீசும் பாட்டில் உடைந்து கண்ணாடி பறந்து போய் அவ்வழியாக வரும் சரண்யா கழுத்தை சீவுகிறது. அதே இடத்தில் பலியாகிறார். தாய் இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மகேஷ்ராஜாவை என் கவுண்டரில் தீர்த்துகட்ட கிஷோர் போலீஸ் படையுடன் புறப்படுகிறார். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.
 
ஆக்ஷன், காதல், தாய்ப்பாசத்தின் மீது கதையை நகர்த்துகிறார் இயக்குனர் பிரதீஷ்... மூன்றிலும் தாய் மகனுக்கான பாசபோராட்டமே முதல் இடம் பிடிக்கிறது. மகன் கெட்டவனாக இருந்தும் அவன் மேல் காட்டும் தாயின் அன்பும் அவளது மகத்துவத்தை சாவுக்கு பின் உணரும் மகனின் பாசமும் போட்டி போட்டு மனதை பிழிகின்றன.
 
மகேஷ்ராஜா ஆக்ஷன் கேரக்டரில் பொருத்தமாக பதிகிறார். பார்வை, முறைப்பு, நடை, பேச்சு எல்லாவற்றிலும் அதிரடி. உதயதாரா காதலியாக வந்து போகிறார். அவருக்கும் மகேஷ்ராஜாவுக்கும் இடையிலான காதலில் ஜீவன் இல்லை. கிளைமாக்சில் துப்பாக்கியுடன் விரட்டும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி உதய தாராவிடம் என்னை மறந்து வேறு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள் என்று கண்ணீருடன் விடைபெறும் போது நெஞ்சு கனக்கிறது. அழுக்கு உலகம் கல்லறை, குடி என நாயகனை ஒரே களத்தில் நகர்த்துவது சலிப்பு..
 
ரவுடிகளை மோத விட்டு பணம் பறிக்கும் வித்தியாசமான போலீஸ் வில்லனாக கிஷோர் மிரட்டுகிறார். சரண்யா தாய் பாசத்தின் சின்னமாக நிற்கிறார். முடிவு பரிதாபம். மணிகண்டனும் ஆக்ஷன் வேஷம் கட்டியுள்ளார். கிஷோர் மனைவியை பலவந்தம் செய்வதும் அதனால் சித்ரவதை செய்து கொல்லப்படுவதும் பரபர... பொன்னம்பலம், தேவிகிருபா, அஸ்வதி, காதல் சுகுமார், கொட்டாச்சி ஆகியோரும் உள்ளனர்.
 
பி.சி. சிவன் இசையும் ஆர்.சரவணன் ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது.
Read More

அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்



வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. பிட் டிபன்டர் (BitDefender) பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
3. கிளாம் ஏவி (Clam AV): இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
4.அவாஸ்ட் (Avast): மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security): NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இணையாது. இது ஒரு விதிவிலக்காகும்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
10. ஸோன் அலார்ம் (Zone Alarm): மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது.

Read More

டி.ராஜேந்தரால் ரயில் பயணங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தற்கொலை



டி.ராஜேந்தர் இயக்கிய ரயில் பயணங்களில் அறிமுகமானவர்கள் ஸ்ரீநாத் -ஜோதி.    இந்த படத்தின் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்...,  அமைதிக்கு பெயர்தான் சாந்தி...,  நூலுமில்லை வாலுமில்லை....,  யாரோ பின் பாட்டு பாட...போன்ற பாடல்கள் இப்போதும் ஒலிக்காத இடமில்லை.
ரஜினியுடன் புதுக்கவிதை படத்திலும் நடித்த ஜோதி திருமணம் செய்து செட்டில் ஆனார். கல்யாண வாழ்க்கையில் கசப்பு ஏற்படவே கணவரை விவாகரத்து செய்தார். மகளுடன் சென்னை நீலாங்கரை ராஜா நகரில் வசித்து வந்தார். கடந்த 2004 ம் ஆண்டு 44 வயதில் மார்பக புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

நடிகர் ஸ்ரீநாத் (50)  ரயில் பயணங்கள் படத்தின் ஹிட்டிற்கு பிறகு மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

 மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் சிகார் என்ற பட ஷீட்டிங் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலத்தில் நடந்து வருகிறது. இதில் நடிகர் ஸ்ரீநாத்தும் நடிக்கிறார். இதற்காக அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் அவர் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு அவர் கைமணிக்கட்டின் நரம்பை கத்தியால் வெட்டி தற்கொலை செய்தபடி பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து அவ ரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோதமங்கலத்தில் உள்ள பேசெல்லியாஸ் மிஷன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீநாத் கடந்த 1980-ம் ஆண்டில் சினிமாவுக்குள் நுழைந்தார். டி.ராஜேந்தர் டைரக்ஷனில் தயாரிக்கப்பட்ட ரெயில் பயணங்களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

பின்னர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். ஷாலினி என்டே கூட்டுக்காரி, ஏது நிஜங்களுடே கதா, ஒரு சி.பி.ஐ. டைரிக்குறிப்பு”, கிரீடம் போன்ற படங்கள் இவர் நடித்த மலையாள படங்களில் ஹிட் ஆனவை.

மலையாளத்தில் கடைசியாக இவர் கேரள கேப் என்ற படத்தில் நடித்தார். சினிமா படங்களுடன் மலையாள டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். தமிழில் விஜய்டி.வி.யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராணி மகாராணி என்ற தொட ரிலும் நடித்து வந்தார்.

நடிகை சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்டிங்கள் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சிறந்த டி.வி. நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளார்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து கோதமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

பேராவூரணி கோவில் விழாவில் நடிகை சங்கவி நடனமாடாததால் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்


பேராவூரணி நிலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதழுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
விழாவில் பேராவூரணி பேரூராட்சி மண்டகப்படியை முன்னிட்டு நடன நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரூராட்சி நிர்வாகம் மூலம் காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கோரிமனு கொடுத்திருந்தும் மிகக்குறைவான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்நிலையில் பெண்கள் பகுதியில் ஆண்கள் அமர்ந்து கிண்டலும், கேலியும் பேசி கலாட்டா செய்தனர். ஒரு சில போலீசார் தடுக்க முயன்ற போது கூட்டமாக சேர்ந்து கொண்டு போலீசாரை தாக்க ரசிகர் கூட்டம் முற்பட்டது. பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து சென்று போலீசாரை காப்பாற்றும் நிலை ஏற்பட்டது.
 
மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில் திருவிழாவிற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கூடுவர். இந்த ஆண்டும் நடைபெற இருக்கிற காவடி தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழாக்களுக்கு பெருந்திரளாக கூட்டம் கூடும். இதற்கு போதிய போலீசார் இல்லாவிட்டால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். இதற்கு போதிய போலீசாரை நியமித்து திருவிழா சிறப்பாக நடக்க உதவிட வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து பேராவூரணி காவல்துறையினரிடம் கேட்டபோது பாதுகாப்புக்கு போதுமான அளவில் போலீசார் இல்லையென்பது உண்மையென்றாலும் விழாவன்று திரைப்பட நடிகை சங்கவி நடனமாடுவார் என கூறி விட்டு அவர் நடனமாடாமல் கையை காட்டி ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு சென்றதால் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர் என்று கூறினர்.
 
Read More

கிம் கர்தஷியானின் நிர்வாண போஸ்..!



முழுக்க நனைந்த பின் உள்ளாடை மட்டும் எதற்கு என்று நினைத்துவிட்டாரோ என்னவோ... பாஜார் என்ற பத்திரிக்கைக்காக முற்றிலும் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகையும் மாடலுமான கிம் கர்தஷியான்.
அர்மீனியாவைச் சேர்ந்த அழகியான கிம் ஏற்கெனவே முன்னழகையும் பின்னழகையும் அப்படியே காட்டி ஆண்டுகளை கிளீன் போல்டாக்கியவர். லண்டனில் நடு சாலையில் ஒரு தம்மாத்தூண்டு பெல்ட்டை மட்டும் மார்புக்கு குறுக்கே கட்டி இவர் கொடுத்த போஸில் அரண்டு போனார்கள்.
2007-ம் ஆண்டு பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
இப்போது ஹார்ப்பர்ஸ் பாஜார் இதழுக்கு மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் கிம்.
இவருடன் ஜாய் பிரயண்ட் என்ற இன்னொரு மாடல் அழகியும் நிர்வாணமாகவே காட்சி தந்துள்ளார். இவர்களைப் படமெடுத்தவர் பிரபல பெண் புகைப்படக்காரர். பெயர் அமெண்டா டி கேடனட். இவரும் நிர்வாணமாக இருந்தபடியே, அத்தனை போட்டோக்களையும் சுட்டுத் தள்ளினாராம்!
இந்த நிர்வாண போஸ் குறித்து கிம் இப்படிக் கூறியுள்ளார்,
"எல்லோரும் எனது பட்(பின்னழகு) பெரிதாக உள்ளது என்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. எனக்கு மிக ஒல்லியான கால்கள். மெல்லிய இடுப்பு. அதனால் ஒருவேளை அப்படித் தெரியலாம். நான் 11 வயதாக இருந்த போது சி கப் பிராதான் அணிந்தேன். அப்போதே, இதற்குமேல் பெரிதாகக் கூடாது என வேண்டிக் கொண்டேன். ஆனால் நான் விரும்பாதது நடந்துவிட்டது!
இப்போது நான் கொடுத்துள்ள நிர்வாண போஸ் எனக்கே மிகப் பிடித்தமானது. ஆனால் இதற்கு முன் பிளேபாய்க்கு கொடுத்தபோதுகூட நான் இப்படி உணரவில்லை" என்றார்.
Read More

'சுறா' படம் பற்றி பேட்டி


தளபதியின்

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஷூட்டிங் ஹை ஸ்பீடில் பறந்துக்கொண்டிருக்கிறது. இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

என்ன சொல்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்?
‘‘வழக்கமான விஜய் படத்தோட பத்து மடங்கு பரபரன்னு போகிற திரைக்கதைதான் படத்துக்கு பலம். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், காதல்னு கலக்கலான விஷயங்கள் படத்துல நிறைய இருக்கு. அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும். இதுதான் கிளைமாக்ஸ்னு யாரும் யூகிக்க முடியாதபடி விர்ர்ர்ர்ருனு போகும். இதை நான் அதிகப்படியா சொல்றேன்னு நினைக்காதீங்க. இதுதான் நிஜம்!’’
‘சுறா’ என்ன கதை?
விஜய் மீனவர். தன்னோட தனிப்பட்ட நலன்களை மட்டுமே நினைக்காம அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளையும் போராடி வாங்கி தர்றார்... இப்படி கதையை சொன்னா, உங்களுக்கு ஏதோ தத்துவமா, கருத்து சொல்ற மாதிரி தோμம். ஆனா, அப்படி இல்லாம, பக்கா கமர்ஷியல் லைன்ல சுர்ர்ர்ருனு படம் பண்ணிட்டிருக்கோம்.
தமன்னா?
தமன்னா, இப்ப இருக்கிற டாப் ஹீரோயின். எப்பவும் சரியான நேரத்தை கடைப்பிடிக்கிற ஆர்டிஸ்ட். நடிப்புல பின்னியிருக்காங்க. படத்துல அவங்க குறும்புக்கார கல்லூரி மாணவி. பெரும் பணக்காரரின் மகள். ரொம்ப ஸ்டைலான கேரக்டர். அவங்க வர்ற சீனெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருக்கும். வடிவேலு காமெடி படத்துல மிரட்டும்.

விஜய் படத்துல பாடல்கள் ரசனையா இருக்குமே?
இந்தப் படத்துலயும்தான். மணிசர்மா இசைல எல்லா பாடலுமே ஹிட்டாகும். வெரைட்டியா ட்யூன் போட்டிருக்கார். ‘வெற்றிக்கொடி ஏத்து / வீசும் நம்ம காத்து’னு ஆரம்பிக்கிற பாட்டு சும்மா கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும். ‘வங்க கடல் எல்லை / நான் சிங்கம் பெத்த பிள்ளை’பரபரப்பான பாடலா விசிலடிச்சு துள்ளிக் குதிக்கும்படியா
இருக்கும்.
ஆக்ஷன் காட்சிகள் எப்படி?
கனல் கண்ணன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கார். இதுவரை வராத அளவு வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளா இருக்கும். விஜய் அதிகப்படியா ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருக்கார். பொதுவாவே எல்லா விஷயத்துக்கும் அவர் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். உதாரணத்துக்கு, கடல்லயிருந்து அரை மைல் தூரத்துக்கு நீச்சலடிச்சு கரைக்கு வரμம். நாங்க நீச்சல் தெரிஞ்ச சிலரை கரையில உட்கார வச்சிருந்தோம். ஆனா, விஜய் நானே பண்றேன்னார். அதே போல நீந்தியும் வந்தார். இது பெரிய ரிஸ்க். ஆத்துல நீச்சலடிக்கற மாதிரி இல்ல, கடல்ல நீச்சலடிக்கிறது. இது எவ்வளவு கஷ்டம்னு அனுபவப்பட்டவங்களுக்கு தெரியும்.
புது வில்லனை அறிமுகபடுத்துறீங்களாமே?
தேவ் கில் புது வில்லன் இல்ல. தமிழுக்கு புதுசு. தெலுங்கு ‘மகதீரா’ படத்துல மிரட்டலா நடிச்சிருப்பாரு. அந்தப் படத்துக்கு பிறகு அங்க அவருக்கு நிறைய வாய்ப்புகள். ஆனா, அந்தப் படங்கள்ல நடிக்காம, ‘சுறா’வுக்காக வந்தார். அவரோட கேரக்டர் என்னன்னு இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் போயிடும். அதனால பட ரிலீஸ் வரை அவர் பற்றி வேண்டாம்.
பஞ்ச் டயலாக்?
அது இல்லாம எப்படி? படத்துல விஜய், சூடாகிற காட்சிகள்ல எல்லாம் பஞ்ச் டயலாக் இருக்கும். சாம்பிளுக்கு ஒண்μ: ‘உனக்கு கோவம் வந்தா அடி விழும். எனக்கு கோவம் வந்தா இடி விழும்!’  

Udhayatharaநடிகைகள் போட்டியில் விருப்பமில்லை 

மலையாளத்திலிருந்து வந்த உதயதாராவுக்கு ‘கண்ணும் கண்ணும்’ முதல்படம். ‘தீ நகர்’, ‘மலையனு’க்குப் பிறகு இப்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  
திருமணம் செய்யப்போவதாக பேச்சு இருக்கிறதே?
இப்போதைக்கு இல்லை. திருமண வயதை எட்டியிருந்தாலும், அதைத் தாண்டவில்லை. சினிமாவில் நான் நினைத்த இலக்கை இன்னும் அடையவில்லை. அடைந்த பிறகோ அல்லது பெற்றவர்கள் வற்புறுத்தும்போதோ திருமணம் செய்து கொள்வேன்.
நடிப்புக்கு இடையேயும் தொடர்ந்து படிக்கிறீர்களே?
தமிழ்நாட்டில் எப்படி என்று தெரியாது. கேரளாவில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகும்போது அவள் என்ன வேலை செய்கிறாள், என்ன சம்பாதிக்கிறாள், என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். என்ன படித்திருக்கிறாள் என்றுதான் பார்ப்பார்கள். அதற்காகவாவது படிக்க வேண்டுமே. வாழ்க்கைக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம்.
‘விலை’ படத்தில் பால¤யல் தொழிலாளி வேடம், ‘பயம் அறியான்’ படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பதாக தகவல்?
இரண்டுமே தவறானது. ‘விலை’ படத்தில் பெண்களை கடத்தும் கும்பலிடம் சிக்கும் இலங்கை பெண்ணாக நடிக்கிறேன். ‘பயம் அறியான்’ படத்தில் முத்தக் காட்சி சில நொடிகள் வந்து செல்லும். அந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி விட்டார்கள். மற்றபடி கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ நடிக்கவில்லை. ‘குலசேகரனும் கூலிப்படை’யும் படத்தில் டாக்டராக நடிக்கிறேன்.
தமிழில் இடைவெளி விட்டது ஏன்?
சில வருடங்கள் தொடர்ச்சியாக கன்னடப் படங்களில் நடித்ததால் தமிழில் இடைவெளி ஏற்பட்டது. மலையாளத்திலும் நடிக்கவில்லை. காரணம், அங்கு ஹீரோக்கள் குறைவு. ஹீரோயின்கள் அதிகம். அதில் போட்டி போட விரும்பவில்லை.


ஏன் காமெடி படம்? 
‘‘இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளம். கதை, வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறேன். கார்த்திக், ஷிகா, ஜெயராம் என நிறைய நட்சத்திரங்கள். பிரபல நடிகர் ஒருவரும் நடிக்கிறார். அவர் யார் என்பது இப்போது சஸ்பென்ஸ். ஐபிஎல் கிரிக்கெட் முடிந்தபிறகு ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம்’’
என்ன தீடீர்னு காமெடி படம்?
சிங்கப்பூரில் ஃபேஷன் டிசைன் படித்தேன். பின்னர் அமெரிக்கா சென்றேன். அங்கு குறும்படங்கள் இயக்கினேன். விருது கிடைத்தது. இதையடுத்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இங்கு வந்தேன். முதல்படமாக ‘வல்லமை தாராயோ’ இயக்கினேன். கணவன், மனைவிக்குள்ளான பிரச்னையை பேசியது அப்படம். தமிழக அரசு விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. பெண் பிரச்னையை மையமாக வைத்துத்தான் படங்களை இயக்குவார் என்ற முத்திரை குத்திவிடக்கூடாது என்பதால் அடுத்ததாக காமெடி படம் இயக்குகிறேன். 
அடுத்து?
கிராமத்து பின்னணியில் இயக்கும்படி ஒரு தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறேன். ஆக்ஷன் கதை ஒன்றும் தயாராக உள்ளது. இதுதவிர தெலுங்கு படம் இயக்க கேட்டிருக்கிறார்கள். எந்த படமும் குடும்பத்தோடு பார்க்கும் படமாகவே இயக்குவேன். 
சினிமாவில் எதை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்?
இந்தோனேசியாவில்தான் நான் வளர்ந்தேன். அம் மொழியில் (பகாஷா இந்தோனேசியா) படம் எடுக்க ஆசை இருக்கிறது. அதன் ஞாபகமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை இந்தோனேசியாவில் நடத்தினேன். தமிழ் திரையுலகுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்த முதல் பெண் இயக்குனர் என்ற பெயர் எடுப்பதே எனது லட்சியம்.  அதை நோக்கி என் பயணம் இருக்கும்.
Read More

என் சாய்ஸ் லிங்குசாமிதான் கார்த்தி!




ஒரு பிரஸ் மீட்டில் அமீர், செல்வராகவன், லிங்கு சாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு தருவீர்கள் என்று கேட்டார்கள். நான் வளர்ந்து வரும் நடிகன். இனி என்னால் ஆண்டுகணக்கில் காத்திருந்து நடிக்க முடியாது. அதனால் என் சாய்ஸ் லிங்குசாமிதான் என்று சொன்னேன். அது தவறா? என்கிறார் கார்த்தி.
Read More

"அண்ணா பர்சனல் கேள்வி வேண்டாம். ப்ளீஸ்"

கேள்விய பதிலால அடிக்கறதுன்னு ஒரு வழக்கம் இருக்கு. ஆனா கேள்விய 'வேறொரு விஷயத்தால' அடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? கொஞ்சம் பெங்களுரு வரைக்கும் வந்தா தெரிஞ்சுரப்போவுது!
கன்னடத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. உபேந்திரா ஜோடியாக இவர் நடித்து வரும் படத்தின் பெயர் கிச்சகா. நயன்தாரா ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்றதுமே நிருபர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆஜராகிவிட்டார்கள். கேட்கிற கேள்வியில மனசுக்குள்ளே இருக்கிற பிரபுதேவாவை அந்தம்மா கக்கிரணும் என்கிற மாதிரி முறைப்பு ஒவ்வொரு நிருபரிடமும். (யாரு பெத்த புள்ளய யாரோ பிக்கப் பண்ணுறதுக்கு இவங்களுக்கு ஏன்யா இத்தனை ஆக்ரோஷம்) ஆனால் இவங்க வந்திருக்கறது தெரிஞ்சே கேரவேனை விட்டு இறங்கல நயன்தாரா. தனது உதவியாளரை அனுப்பி ஒவ்வொருத்தரோட பேரு, அவங்க வேலை செய்யுற பத்திரிகை நிறுவனம் எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு வரச்சொன்னார்.
லிஸ்ட் கைக்கு வந்ததும், பட்டு பட்டுன்னு வேலைகள் ஆரம்பமாச்சு. கவருக்குள்ளே 'கவுரவத்தை' நிரப்பி, பிரிச்சு பார்க்கிற நிமிடத்திலேயே ஒவ்வொருவரும் பீஸ் பீஸாகிற மாதிரி போட்டு அனுப்புனாராம். விஷயம் அவங்க கைக்கு போயி அரை மணி நேரம் கழிச்சு கீழே இறங்கிய நயன் நிருபர்களிடம், "அண்ணா பர்சனல் கேள்வி வேண்டாம். ப்ளீஸ்" என்ற கூற, அதுக்கு மேல அது பற்றி கேட்க அவங்க என்ன மனசாட்சி இல்லாதவங்களா என்ன
Read More

ஐரோப்பாவிலிருந்து அஜீத் போன்

அல்டிமேட் ஸ்டாரின் மல்டி லெவல் உற்சாகத்திற்கு மற்றுமொரு உதாரணம் இது. ஃபார்முலா 2 கார் ரேசுக்காக ஐரோப்பாவில் இருக்கும் அஜீத் அங்கிருந்தபடியே ஒரு இயக்குனரிடம் பேசி, எனக்காக ஒரு கதை பண்ணி வைங்க. வந்து கேட்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
வெற்றி வந்தா போதும். சுற்றி வர்றது சூரியனா கூட இருக்கலாம் என்பதற்கு இதுவே சிறந்த எக்ஸாம்ப்பிள் அல்லவா? அஜீத் பேசிய அந்த வெற்றி இயக்குனர் வெற்றி மாறனேதான்! தனுஷ் படத்தை முடித்துவிட்டு சிம்பு படத்திற்கு அரிவாள் தீட்டிக் கொண்டிருக்கும் மாறனுக்கு இந்த போன் கால், புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்... 

வருகிற மே முதல் தேதி அஜீத்தின் பிறந்த நாளாச்சே! அதை கொண்டாட ஐரோப்பாவிலிருந்து சென்னைக்கு வர முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால் எரிமலை வெடித்து விமானங்கள் எல்லாம் முடங்கிப் போயிருப்பதால் இந்த பயணம் இறக்கை விரிக்குமா என்பதுதான் இந்த நிமிடம் வரைக்குமான சந்தேகம்.
ஹீரோவுக்கு பில்டப் கொடுப்பதாக நினைக்கும் தமிழ்ப்பட இயக்குனர்கள் அவர் நடந்து வரும்போது பின்னணியில் எரிமலை வெடிப்பதாகவெல்லாம் கிராபிக்ஸ் பண்ணுவார்கள். அஜீத் போயிருக்கிற இடத்தில் இப்போது நிஜமாகவே எரிமலை! அந்த இயற்கைக்கே பொறுக்கல போலிருக்கு.

Read More

விஜய்யுடன் ஆடுவது கஷ்டம் தமன்னா


சன் பிக்சர்ஸ் வழங்கும் சுறா ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தமன்னா. சன் பிக்சர்சில் நான் நடித்த படங்கள் எல்லாமே எனக்கு பெயர் வாங்கி தந்திருக்கு. அதே போல சுறாவும்  என் கேரியரில் முக்கிய படமா இருக்கும் - சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷம் தமன்னாவின் முகத்தில். இதேனிடையே ‘சுறா’ படத்தில் விஜய்யுடன் ஆடுவதற்கு திணறினார் தமன்னா. அது உண்மைதான். நான் முறைப்படி நடனம் கற்றிருந்தாலும் அவருக்கு ஈடுகொடுத்து ஆடுவதற்கு சிரமப்பட்டேன். அவர், மாஸ்டர் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்து விடுகிறார். என்னால் ரிகல்சல் பண்ணித்தான் செய்ய முடிந்தது என்கிறார் தமன்னா.

Read More

-தமன்னாவின் சென்ட்டிமென்ட்

ஏமாத்துறத தவிர எதை வேணும்னாலும் மாத்தட்டும். அது ஒரு விஷயமா என்று அலுத்துக் கொள்கிற ஆட்களுக்கு கூட இந்த செய்தி கொஞ்சம் இனிப்பாக இருக்கலாம். ஏனென்றால் இது தமன்னா நியூஸ்!
ஆரம்பகால தமன்னா அவ்வளவு அழகில்லை என்றவர்கள் கூட பையாவில் அவரை நனைய நனைய பார்த்த பின்பு, நனைந்து ஈரமாகிக் கிடக்கிறார்கள். அங்கங்கே முளைக்கும் தமன்னா ரசிகர் மன்றங்கள் சற்றே உணர்ச்சிவசப்பட்டு கோவிலாக மாறினாலும் (நம்ம ஊரில்) ஆச்சர்யமில்லை.
இந்த வெற்றியெல்லாம் எப்படி வந்திச்சாம்? தமன்னாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தால், குறுக்கு சந்தில் புகுந்து வாய்ப்பு பெற்ற ஸ்டோரியை சொல்வார்கள் என்றுதானே தோன்றும்? அதுதான் இல்லை. இது நியூமராலஜி வித்தை என்கிறார்கள் ஏறுக்கு மாறாக! எப்படியாம்?
முன்பெல்லாம் thamana என்றுதான் கையெழுத்திடுவாராம். இப்போது அதை மாற்றி thamannaa என்று எழுத ஆரம்பித்திருக்கிறார். ஒரு பெயரியல் மாமேதை கொடுத்த அட்வைஸ்தான் இது என்கிறார்கள். பெயரில் அடிஷனலாக சேர்ந்திருக்கும் சில 
'a' க்கள் கவர்ச்சிக்கான குறியீடு என்பதாகவும் கொள்ளலாம்!

Read More

செருப்பு வீச்சு: நித்யானந்தா அதிர்ச்சி

இமாசலபிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்யானந்தா 50 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டு நேற்று இரவு பெங்களூர் கொண்டு வரப்பட்டார். போலீசார் அவரை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தினர். பின்னர் போலீசார் அவரை ஜெயிலில் அடைப்பதற்காக மாஜிஸ்திரேட்டு வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

மாஜிஸ்திரேட்டு வீட்டின் வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் நித்யானந்தாவுக்கு எதிராக ஆவேச குரல் எழுப்பினார்கள்.

திடீரென்று கூட்டத்தில் இருந்து நித்யானந்தாவை நோக்கி ஒரு செருப்பு வந்தது. போலீசார் அதை தடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் என்பவர் நித்யானந்தா மீது செருப்பு வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி நித்யானந்தாவை வேகமாக அழைத்துச் சென்று விட்டனர். செருப்பு வீச்சு காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புன்னகையுடன் இருந்த நித்யானந்தா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அதே இடத்தில் மற்றொருவர் நித்யானந்தாவை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார்.


Read More

சினிமா பற்றி உங்கள் கருத்து...

சினிமா தேவையான ஒன்றா? தமிழரின் கலாச்சராம் சினிமாவினால் தான் சீரழிகின்றதா? இது ஒரு கலையா?
சினிமாவினால் இளம் சமுதாயத்தினரின் வாழ்க்கை பாதிக்க படுகின்றதா?  நானும் சினிமாப்பிரியன்தான். நானும் சினிமாப்பிரியன்தான்.
சினிமாவுக்கு நல்ல நடிப்பா? நல்ல கதை தேவையா? நல்ல கவர்ச்சி தேவையா? எப்படியான படம் வெற்றிபெறும் நேயர் களே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!.
Read More