Pages

Friday, April 9, 2010

ரஜினி - கமல் படங்களை பார்த்து வளர்ந்தேன் : விவேக் ஒபராய்


[

பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த “பிரின்ஸ்” என்ற இந்தி படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி விவேக் ஒபராய் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

திருச்சி எனக்கு புதுசு. பிடித்து சென்னை. காரணம் என் தாயின் ஊர். சென்னை அதனால் தமிழ்நாடு மீது பெரும் மதிப்பு எப்போதும் உண்டு. சுனாமியின் போது கிராமங்களை தத்தடுத்து மீட்பு பணி செய்தேன். அப்போது “நடிகர் அண்ணா”ன்னு பாசத்துடன் அழைத்ததை மறக்க முடியாது.

தமிழ் சினிமா மார்க்கெட் பெரியது. இதனால் தான் எனது “பிரின்ஸ்” படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறேன்.இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டது.

இந்திய சினிமாவில் ஞாபகமறதி கதாபாத்திரம் கொண்ட படங்கள் 84 வெளி வந்து உள்ளது. இதுவும் கதாநாயகனின் மறதி பற்றிய கதைதான் மெகா திருடனாக நடிக்கிறேன். என் நினைவுகளை திருட வில்லன், போலீஸ் என்னை துரத்தும் 6 நாள்களுக்குள் அவர்கள் என்னை பிடிக்கனும் இதை சுவராசியமாக எடுத்து உள்ளோம்.

தமிழ் படத்தில் ரஜினி, கமல் படங்களை பார்த்து வளர்ந்தேன். ரஜினி பில்லா, கமலின் சகலகலா வல்லவன் எனக்கு பிடிக்கும். தமிழ் நடிகர்கள் எனது “பிரின்ஸ்” படத்தை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Read More

அரசியலுக்கு வருவது எப்போது?விஜய்..

அரசியலுக்கு வருவது எப்போது? மீண்டும் விஜய் பரபரப்பு!!

Actor Vijay interview
அரசியலுக்கு வர என்னை நானே தயார் படுத்தி வருகிறேன். மக்கள் விரும்பும்போது அரசியல் களத்தில் குதிப்பேன் என்று நடிகர் விஜய் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். காவல்காரன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் அதிரடி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. என் ரசிகர்கள் கம்ப்யூட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

'உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன். பொதுவாக நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் என கருதுபவன் நான். அரசியல் என்பது ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார் படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான். மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர்-தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக அளவு சிக்கியிருக்கும் விஜய், அவ்வப்போது அரசியல் குறித்து பேசுவதும், அதன் பின்னர் பின்வாங்குவதும் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியதன் மூலம் தமிழக அரசியலிலும் பரபரப்பு கிளம்பியது. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார், இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் போகிறார் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த சமயத்தில் தமிழகத்திற்கு வந்திருந்த ராகுலும், விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி என்று செய்திகள் வெளியாயின. அதேநேரம் விஜய் காங்கிரசில் சேர்ந்தால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் தீர்மானம் போட்டன. இதையடுத்து விஜய் அளித்த பேட்டியில், நான் ராகுலை சந்தித்து பேசியது உண்மைதான். அவர் எனது நண்பர். எனது மக்கள் இயக்கம் பற்றியும், அரசியல் குறித்தும் பேசினோம் என்றும், பிற்காலத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் கூறினார். இந்நிலையில் இப்போது மீண்டும் தனது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More

வடிவேலு - சிங்கமுத்து மீண்டும் மோதல்..


வடிவேலு - சிங்கமுத்து மீண்டும் மோதல்: டைரக்டர் மாமனார் படுகாயம்

வடிவேலு - சிங்கமுத்து ஆதரவாளர்கள் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டடுள்ளது. இந்த மோதலில் டைரக்டரின் மாமனார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. வடிவேலுவுக்கு நிலம் வாங்கி கொடுத்ததில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து மீது வழக்கு வ்டிவேலு புகார் கூறினார். இதுதொடர்பாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவில் வடிவேலு அளித்த புகாரின்பேரில், சிங்கமுத்து விசாரிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சைதாபேட்டை நீதிமன்றத்தில் வடிவேலு வழக்கும் தொடர்ந்து உள்ளார். இந்தப் பிரச்சனைகளில் கடந்த சில வாரங்களாக அமைதி நிலவி வந்தது. இந்நிலையில் வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் வேதவள்ளி தெருவில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு எதிரே சினிமா டைரக்டர் கண்ணன் வீடு உள்ளது. கண்ணனுடைய மகளுக்கு கடந்த 7ஆம் தேதி பிறந்த நாள் விழா நடந்துள்ளது. இதில் நடிகர் சிங்கமுத்து கலந்து கொண்டுள்ளார்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த சிங்கமுத்துவுக்கு பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் இரவில் பார்ட்டியும் நடந்துள்ளது. சிங்கமுத்து பங்கேற்ற இந்த விழாவில் வடிவேலு பற்றியும் பேசியதாகவும், இதுபற்றிய தகவல் வடிவேலுவுக்கும் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டைரக்டர் கண்ணன் வீட்டில் நேற்று இரவு ஒரு கும்பல் புகுந்துள்ளது. அப்போது வடிவேலு பற்றி தரக்குறைவாக விமர்சித்தது ஏன் என்று கேட்டு அவர்கள் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது டைரக்டர் கண்ணன் மாமனார் செல்வம் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். செல்வத்தை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் டைரக்டரின் மாமனாரை தாக்கிய புகாரில் போலீசார் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read More

இலங்கை அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எம்.ஐ.ஏ குற்றச்சாட்டு


இலங்கை அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரபல பொப்பிசை பாடகி எம்.ஐ.ஏ எனப்படும் மாயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். இலங்கை தம்மை ஓர் தீவிரவாதியாக முத்திரைக் குத்த முயற்சிப்பதாக அவர் கறிப்பிட்டுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருந்த எம்.ஐ.ஏ, லண்டனுக்கு செல்ல முற்பட்ட போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த கால யுத்த நிலைமை குறித்து தாம் விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தரமாட்டோம்:ஆஸி

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தரமாட்டோம்:ஆஸி

இலங்கையிலும் ஆப்கானிலும் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. எனவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இனி அடைக்கலம் தரமாட்டோம் என்று ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் இதுகுறித்து, ’’இலங்கையில் போர் முடிவுற்றுவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைந்துள்ளது. ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் தருவதை மற்ற நாடுகள் நிறுத்திவிட்டன.

தற்போது ஆஸ்திரேலியா அந்த நிலையை கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. எனினும், ஆப்கான் அகதிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா தான் முதன்முறையாக அடைக்கலம் தருவதை நிறுத்த முடிவு செய்துள்ளது’’ என்கிறார்.

Read More

சானியா திருமணம் நடைபெறவில்லை..


சட்ட சிக்கல்:சானியா திருமணம் நடைபெறவில்லை

சானியா-சோயிப்மாலிக் திருமணம் ஐதராபாத்தில் வரும் 15-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமையான இன்று உகந்தநாள் என்பதால் இன்றே திருமணத்தை நடத்தி விடுவது என்று திடீரென தீர்மானிக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் நடந்தன.

இந்த நிலையில் திடீரென சட்ட சிக்கல்கள் எழுந்தன.

சோயிப் மாலிக் வெளிநாட்டுக்காரர் என்பதால், அவர் தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும், தன் மீதான வழக்கு முடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், முதல் மனைவி ஆயிஷாவின் புகாரின்பேரில், போலீசார் சோயிப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, உள்ளூர் கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தனர்.

கோர்ட்டில் விண்ணப்பித்துத்தான், அந்த பாஸ்போர்ட்டை திரும்பப்பெற வேண்டும். அதற்கு கால அவகாசம் இல்லாததால், சோயிப் மாலிக் தனது பாஸ்போர்ட்டை திரும்பப்பெறவில்லை.

இதனால் இன்று திருமணத்தை நடத்த முடியவில்லை. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, 15-ந் தேதிக்கு சானியா திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

Read More

கோடை நாட்களில்...


கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்ணீர் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லகள், எலுமிச்சை ரசம்... என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.
* உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை... என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும்.
* வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் பண்டானா அல்லது ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும் - ஃபேஷனும் லேட்டஸ்ட் அதுதான் டூ இன் ஒன்.
* வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.
* காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும்.
Read More

பாடக சாலை விமர்சனம்...


காதலால் இரண்டாக பிரிந்த ஊரை இன்னொரு காதலால் சேர்த்து வைக்க போராடும் இளைஞர்கள் கதை...
ஜாதி மாறி காதலித்த ஜோடி கத்தப்பட்டு கிராமத்தை விட்டு ஓடுகிறது. இதனால் அங்கு மோதல் உருவாகி கீழ் கத்தப்பட்டு, மேல் கத்தப்பட்டு என இரண்டாக ஊர் பிரிகிறது. இரு ஊர்க்காரர்களும் பகை காட்டுகின்றனர்.
இரு ஊர் இளைஞர்களும் ஊரை ஒன்று சேர்க்க முயற்சிக்கின்றனர். அப்போது ஓடிப்போன காதல் ஜோடி மகள் அதே ஊருக்கு வருகிறார். அவளை வைத்தும் காதல் பிரச்சினையால் நின்று போன கபடி போட்டியை மீண்டும் ஆரம்பித்தும் இரு ஊரையும் ஒன்று சேர்க்க முயற்சிக்கின்றனர். நாயகிக்கு இரு ஊரிலும் முறை மாப்பிள்ளை இருப்பதும் அவர்கள் இருவருமே காதல் தூது விடுவதும் மீண்டும் பகை வளரச்செய்கிறது. ஊரார் எப்படி இணைகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
அரவிந்த், சத்யா என இரு புது நாயகர்கள். இதில் அரவிந்துக்கு அழுத்தமான பாத்திரம். நாயகியாக வரும் ஸ்ருதி அழகு காட்டுகிறார். காதலை கருவாக வைத்து ஊர் பகையையும் உறவையும் காட்சி களாக்கியுள்ளார் இயக்குனர் தமிழ்ஜெ. காதல், தகராறு கபடி போட்டிகள் விறுவிறுப்பில்லாமல் நகர்கின்றன. சஞ்சய் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஹித்தேஷ் இசையில் பாடல் இனிமை.
கல்லூரி கேண்டின் ஓனர் போன்டா மணி, சைக்கிளுக்கு டிரைவர் வைத்து ஊரை சுற்றும் அரசியல்வாதி. சிசர் மனோகர் சிரிக்க வைக்கின்றனர். ப்ரீத்தி புஸ்பன், ஷிவானந்தம், சுசிரத்னம் போன்றோரும் உள்ளனர்.
Read More

ரகசிய பங்குதாரர் யார்? கொச்சி ஐ.பி.எல். அணியில் குழப்பம்


ஐ.பி.எல். புதிய அணியான கொச்சியை ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரூ.1,300 கோடிக்கு கடந்த மாதம் ஏலத்தில் எடுத்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதில் 25 சதவீத பங்குகளை வைத்திருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. கிரிக்கெட் வாரியம் இதை ரகசியமாக வைத்திருக்கிறது.
Read More

தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை மனிதக்கழிவுகள் அகற்றச் செய்யும் கொடுமை : திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பு : இலங்கை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை, மனிதக்கழிவுகளை அகற்றச் செய்து இலங்கை ராணுவம் கொடுமைப்படுத்துவதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிர்வு இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. கீரிமலை என்னும் இடத்திற்கு ஏராளமான சிங்கள இனத்தவர் சுற்றுலா வந்து செல்வதாகவும், அவர்களது அறைகளில் மனித கழிவுகளை அகற்றுமாறு விடுதலைப்புலிகளை ராணுவம் நிர்ப்பந்தம் செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள மக்களிடம் காண்பித்து ராணுவத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதாகவும், புலிகளைப் பார்த்து கேலி செய்து எள்ளிநகையாடுவதாகவும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியே இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடச் செய்யும் இலங்கை ராணுவத்தினர், முகாம்களுக்குள் என்னவிதமான சித்ரவதைகளில் ஈடுபடக்கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

சனத் ஜெயசூர்யா எம்.பி.யாகிறார்...

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜெயசூர்யா, அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் எம்.பி.யாகிறார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 தொகுதிகளில் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், 50 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று இரவே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், 36 கட்சிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி, அதிபர் ராஜபக்ஷேவின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதில், இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் எம்.பி.யாகிறார்.
Read More

சோயப் மாலிக் - சானியா மிர்சா தேனிலவு..


இஸ்லாமாபாத் : சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி, திருமணத்திற்குப் பிறகு தேனிலவை தங்களது பகுதியில் கொண்டாடவேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோயப்-சானியா திருமணம் பெரும் சர்ச்சைக்குப் பின்னர் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு தேனிலவை தங்கள் பகுதியில் கொண்டாட வருமாறு பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த கில்ஜிட்-பல்திஸ்தான் மாநில முதலமைச்சர் சையத் மெகதி ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சோயப்-சானியா திருமணத்தை மையமாக வைத்து காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற முயற்சிப்பதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More