Pages

Thursday, April 8, 2010

இளையராஜா-ரஹ்மான்...


இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கைகளால் பெற்றுக் கொண்டார் இசைஞானி இளையராஜா. 7 ந் தேதி டில்லியில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில் இந்த விருதை பெற்றுக்கொண்ட ராஜா, தன்னுடன் விருது பெற்றவர்கள் சார்பாக தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இதே போன்றதொரு நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் நடந்தது. அப்போது பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்டவர்களுள் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசைஞானி இளையராஜா பத்மபூஷன் விருது பெற்ற அதே 7 ந் தேதி லண்டனில் இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். லண்டன் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவின் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள் அங்குள்ள மக்கள். ரஹ்மானின் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களின் கேள்வி பதிலுக்காகவும் நேரம் ஒதுக்கியிருந்தார் இசைப்புயல்.

தமிழகத்திலிருந்து சென்ற இந்த இருபெரும் இமயங்களுக்கு ஒரே நாளில் கிடைத்த இந்த கவுரவம், ஒட்டுமொத்த தமிழர்களுக்கே கிடைத்த கவுரம்தான்!

Read More

தடுக்கி விழுந்தார் வடிவேலு!..


பில்டிங் ஸ்டிராக், பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக் என்று எந்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்தாரோ, வடிவேலுவின் பேஸ்மென்ட் ரொம்பதான் ஆட்டம் கண்டிருக்கிறது.

பல கோடிகளை .சுருட்டி விட்டதாக தன் நிழல் மாதிரி இருந்தவர்கள் மீதே குற்றம் சுமத்த வேண்டிய அளவுக்கு ஏமாந்த சோனகிரியாகிவிட்டார் வைகைப்புயல். நல்லவேளையாக இதில் தலையை நுழைத்த ஒரு சில பெரிய மனிதர்கள் இரண்டு பேரையும் நெருங்க வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

போகிற போக்கை பார்த்தால் இந்த காம்பினேஷனை மீண்டும் ஒரு படத்தில் நாம் கண்ணார காணக் கூடும் என்கிறார்கள். நல்ல விஷயம்தான்.

நாம் சொல்லப் போவது நிஜமாகவே அவரது பேஸ்மென்ட் வீக்கை பற்றி! சுறா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா லேடி ஆண்டாள் பள்ளியில் சில தினங்களுக்கு முன் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட வடிவேலு திடீரென்று ஒயர் தடுக்கி கீழே விழ, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.

நாலைந்து கேமிராவை வைத்து நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் இவரது பெயரை சொன்னதும் ஆர்வத்தோடு எழுந்து ஓடிய வடிவேலு, கீழே தரையில் கிடந்த கேமிரா ஒயர்களை கவனிக்கவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்தார். நல்லவேளையாக முகத்தில் காயம் ஏதுமில்லை.

விழுந்த வேகத்தில் எழுந்த வடிவேலு, ஒன்னும் சதியில்லையே... என்று கேட்டு சிரித்துவிட்டு அதே வேகத்திலேயே மீண்டும் மேடைக்கு ஓடினார்.

Read More

6 ஆசனங்கள் பெற்று தமிழரசுக் கட்சி முன்னணி !

» யாழ். மாவட்டத்தில் அதிகாலை நிலைவரம் 6 ஆசனங்கள் பெற்று தமிழரசுக் கட்சி முன்னணி ! ஆளும் கட்சிக்கு 02; ஐ.தே.கட்சி ஓர் ஆசனம்

2010-04-09 06:05:02

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முன்னணியில் உள்ளதாக இன்று அதி காலை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. நேற்று மாலை ஆரம்பமான வாக்கு எண்ணும் பணிகள் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது.


யாழ்ப்பாணம், ஏப். 09
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முன்னணியில் உள்ளதாக இன்று அதி காலை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
நேற்று மாலை ஆரம்பமான வாக்கு எண்ணும் பணிகள் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது.
பிந்திய தகவலின்படி தமிழரசுக் கட்சி போனஸ் உட்பட ஆறு ஆசனங்களையும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டுஆசனங்க ளையும் ஐ.தே. கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன என தேர்தல் அலுவலக வட்டாரங்களில் இருந்து அறியமுடிந்தது.
உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலையே வெளியாகும் எனத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா உட்பட இரண்டு ஈ.பி.டி.பி. யினரே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் காணப்பட்டன என் றும் அதிகாலைத் தகவல்கள் தெரிவித்தன.
Read More

வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டல்....

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மணிக்கு வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்று உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த தேர்தலில், அதிபர் ராஜபக்ஷே கூட்டணி, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூட்டணி, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியக் கூட்டணியாக உள்ளது. தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலே நகரில் நடந்த வன்முறையை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திரிகோணமலை மாவட்டத்தில் இரு இடங்களில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், மிரட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்
Read More

விஷால் முகத்தில் 'பல்ப்' வெளிச்சம்!....


பாலா-விஷால் விரிசல் தீர்ந்தது -உற்சாகத்தில் அவன் இவன் ஆக்ஷன் ஹீரோ என்றாலும், அவரையும் ஆட்டிப்பார்க்கும் சில சம்பவங்கள்! அப்படிதான் படப்பிடிப்பு பாதியி அனுப்பப்பட்டார் விஷால். அவன் இவன் படத்தின் முதல் ஷெட்யூல் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. பேக்கப் சொல்லி வீட்டுக்கு கிளம்பி வந்தார் பாலா. ஏன்? எதற்கு? என்று புரியாமலே, தவித்த விஷால் அதன்பின் பாலாவை சந்திக்க முயன்றதாகவும், அவர் தவிர்த்ததாகவும் டமாரம் கொட்டியது கோடம்பாக்கம். இப்படியெல்லாம் யாரு கிளப்பிவிடுறாங்க என்றே தெரியல. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருக்கு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து விளக்கங்கள் வந்தாலும், முதல் ஷெட்யூலை ஏன் அதுக்குள்ளே முடிச்சாராம் பாலா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள் பத்திரிகையாளர்கள். அதெல்லாம் அப்போ. இப்போ நிலைமையே தலைகீழ்... பாலாவும், விஷாலும் சந்தித்துக் கொண்டார்களாம். தன் மீது இருந்த தவறுகளை உணர்ந்த விஷால் பாலாவை கன்வின்ஸ் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து இம்மாதம் மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்புகிற மூடுக்கு வந்திருக்கிறாராம் பாலா. பத்தாம் தேதிக்கு பிறகு கிளம்புகிறது அவன் இவன் டீம். முன்பு படப்பிடிப்பு நடந்த அதே தென்காசிக்கு யூனிட்டை கிளப்ப முடிவு செய்திருக்கிறாராம் பாலா. மொத்தத்தில் விஷால் முகத்தில் 'பல்ப்' வெளிச்சம்!
Read More