Pages

Saturday, May 8, 2010

ஆளில்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவது?




சுறா 50 நாளை கடப்பானா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது விஜய் வட்டாரம். கரையோரத்தில் துடிக்கிற மீனை கட்டி இழுத்து வந்தாவது காப்பாற்றுவோம் என்று இமேஜுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிலையில் படம் ஓடும் திரையரங்கங்களை அப்படியே கைவசம் வைத்திருக்க இன்னொரு ஐடியா செய்திருக்கிறதாம் சன் நிறுவனம்.



50 வது நாள் போஸ்டருக்காக மட்டும் சில தியேட்டர்களை விட்டுவிட்டு சுறா ஓடும் மற்ற தியேட்டர்களில் சிங்கம் படத்தை திரையிட முடிவெடுத்திருக்கிறார்களாம். எல்லா தியேட்டர்களிலும் சுறாவை ஓட்ட ஆசைதான் தியேட்டர்காரர்களுக்கு. ஆனால் ஆளில்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவது? அதனால் படத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று சன்னிடம் சொல்லப் போக, அதற்கு பதிலாக சிங்கத்தை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்களாம்.



இம்மாதம் 28 ந் தேதி சிங்கம் திரைக்கு வருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் அவ்வளவு டிலே பண்றீங்க. 21 ந் தேதியே வாங்க என்று வற்புறுத்துகிறார்களாம் விநியோகஸ்தர்கள்.
Read More

சல்மான்கான், ஷாருக்கான்...

நின்னு காட்டணும் என்ற வெறியோடு படம் எடுக்க வருகிறவர்கள் கூட, முதல்ல நின்னாதானே காட்றதுக்கு என்கிற அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகி, வேறு தொழிலுக்கு இடம் மாறுகிற சூழ்நிலைதான் இப்போது. ஆனால் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களை எடுத்து இன்டஸ்ட்ரிக்கே இனிப்பை கொடுக்கிறார் கல்பாத்தி அகோரம். முதல் படமே வெற்றிப்படமான திருட்டுப்பயலே. அதன்பின் மாசிலாமணி, கந்தக்கோட்டை என்று ஆவரேஜ் தூரல்தான் அவரது காட்டில்!.



இப்போது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, மதராச பட்டினம், அவன் இவன் என்று வளர்ச்சி கிராப்ஃபில் கொஞ்சம் ஏற்றம். இந்த நம்பிக்கை நட்சத்திரம் இப்போது இந்திக்கும் நகரப் போகிறதாம்.



ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் துக்கமாகவும் தகவலை பரிமாறிக் கொள்கிறது கோடம்பாக்கம். சல்மான்கான், ஷாருக்கான் என்று பாலிவுட்டுக்கு போய் பணத்தை கொட்டினால், இங்கே இவரை நம்பியிருக்கிற இயக்குனர்களின் கதி என்னாவது என்ற கவலைதான் இந்த துக்கத்திற்கு காரணம். ஆனால், இந்திக்கு போனாலும் தமிழ் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்கிறது கல்பாத்தி வட்டாரம்.

Read More

ரெட்டச்சுழி இயக்குனருக்கு

தமிழ் ஊடகப்பேரவையும், சாப்ஃப்ட்வியூ நிறுவனமும் இணைந்து சென்னையில் நடத்திய புகைப்பட கண்காட்சியில் நக்கீரன் ஆசிரியர் கோபால், வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன், மற்றும் ரெட்டச்சுழி இயக்குனர் தாமிரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புகைப்பட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



விழாவில் பேசிய நக்கீரன் கோபால், "பாரதிராஜா, பாலசந்தர் என்ற இரண்டு சிங்கங்களை வைத்து படம் எடுத்தவர் தாமிரா" என்று கூறியதுடன், குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படம் எடுத்ததற்காக தாமிராவுக்கு தன்னுடைய பாராட்டுதல்களை சால்வை அணிவித்து தெரிவித்துக் கொண்டார். புகைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய கோபால், நாற்பது ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சந்தன வீரப்பனை முதன் முதலாக போட்டோ எடுத்து நக்கீரனில் வெளியிட்டது பற்றியும், தற்போது சிறையிலிருக்கும் நித்யானந்தா விவகாரத்தில் தாம் வெளியிட்ட புகைப்படங்களின் முக்கியத்துவம் பற்றி சுவையாகவும் மாணவர்கள் ஆர்வத்தோடு கவனிக்கும்படியும் பேசினார்.



வந்திருந்த அனைவருக்கும் சாப்ட்வியூ நிறுவனர் மா.ஆன்ட்டோ பீட்டர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Read More