Pages

Sunday, April 18, 2010

குளிக்கும் போது புடவை அணிந்து கொண்டு யாரும் குளிப்பதில்லை..

kollywood news, latest kollywood news, tamil kollywood news,  kollywood latest news, kollywood masala, cinema news
கிளாமர் நடிகையா? நீது சந்திரா கோபம்

4/19/2010 9:42:50 AM

கிளாமர் நடிகை என்று என்னை அழைப்பதை வெறுக்கிறேன் என்றார் நீது சந்திரா. தமிழில் ‘யாவரும் நலம்‘, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. அவர் கூறியதாவது: இந்தியில் ‘அபார்ட்மென்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதில் ஹாஸ்டலில் இருந்து படிக்கும் மாணவி கேரக்டர். இதில் குளிக்கும் காட்சியில் அதிக கிளாமராக நடித்திருப்பதாக கூறுகிறார்கள். அப்படியில்லை. அது ஆபாசமாக இருக்காது. குளிக்கும் போது புடவை அணிந்து கொண்டு யாரும் குளிப்பதில்லை. அதற்கான உடை இருக்கிறது. அதை அணிந்துதான் நான் குளிப்பது போலான காட்சியை எடுத்தார்கள். இதை வைத்துக்கொண்டு கிளாமர் நடிகை என்று என்னை அழைப்பதை விரும்பவில்லை. தமிழில் இப்போது நடிக்கவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு நீது சந்திரா கூறினார்.

Read More

ஹீரோவாகும் விஜய் ஆன்டனி –



10-vijay-antony200


விதி புரட்டிப் போட்ட ஒரு இளைஞன் புகலிடம் தேடி சென்னை வருகிறான். வந்த இடத்திலும் தாங்க முடியாத சோதனைகள். அந்த நேரத்தில்தான் அவனுக்கு ஒரு புதிய நட்பு கிடைக்கிறது. அந்த நட்ப்பின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையையும் வாழ முடியாத அளவுக்கு தொடர்ந்து போராட்டங்கள்.... அதில் எப்படி ஜெயிக்கிறான் என்ற அழுத்தமான கதைக் களத்தில் உருவாகும் படம் 'நான்'. இந்தப் படம் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமாகிறார் நாக்க மூக்க புகழ் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவருக்கு ஜோடி, திரு திரு துறு துறு ரூபா மஞ்சரி. இன்னொரு நாயகனாக, ஆனந்தத் தாண்டவம் படத்தில் நடித்த சித்தார்த் நடிக்கிறார். மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவிடம் உதவியாளராக இருந்த ஜீவா ஷங்கர் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவும் இவரே. விஜய் ஆன்டனியின் கல்லூரித் தோழராம் இவர். வெங்கட்ரமணியுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் இசையமைப்புப் பணிகளையும் விஜய் ஆன்டனியே கவனிக்கிறார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது. ஹீரோவாக நடிப்பதால் இசை அமைப்புப் பணி பாதிக்காதா என்று விஜய் ஆன்டனியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தன்னம்பிக்கை டானிக்: "ஒரு இசையமைப்பாளராக ஜெயிக்கணும் என்று சென்னை வந்தேன். ஆனால் அப்போது எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது. இன்று நானும் ஒரு இசையமைப்பாளன். அதே போலத்தான், நடிகனாகவும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களுக்கு தொந்தரவில்லாத எந்த வேலையும் செய்து முன்னேறலாம்... தப்பே இல்லை" என்றார்.
Read More

தெலுங்கில் ‘ஹிட்டான’ ஆயிரத்தில் ஒருவன்!


13-aayirathil-oruvan200


செல்வராகவன் இயக்கி, பொங்கல் வெளியீடாக வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தமிழில் தோல்வியைத் தழுவினாலும் தெலுங்கில் பெரிய வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ 32 கோடி செலவில் தயாரான ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழில் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒரு கதையைச் சொன்னார்கள். சிலர் அந்தப் படத்தை ஈழத்தின் கதை என்றெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டார்கள். இதைவிடக் கொடுமை, படத்தின் கதை இதுதான் என்று பிரஸ் ரிலீஸ் அடித்துக் கொடுத்தார் இயக்குநர் செல்வராகவன். வித்தியாசமான கதைக் களம் என்றாலும் பெரும்பான்மை ரசிகர்களுக்குப் பிடிக்காததால், இந்தப் படம் தமிழில் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு. 2010ம் ஆண்டில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது ஆயிரத்தில் ஒருவன். இந்த நிலையில், இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு யுகானிக்கி ஒக்கடு (யுகத்துக்கு ஒருவன்) என்ற பெயரில் ஆந்திராவில் ரிலீஸானது. ஆனால் முன்கூட்டியே, படத்தின் அருவருப்பான காட்சிகள், குழப்பமான காட்சிகள் அனைத்தையும் வெட்டியெறிந்துவிட்டு 2 மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக வெளியிட்டனர். கடந்த 5ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கு [^] ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது. முதல் நான்கு நாட்களில் ரூ 2 கோடி வசூல் செய்துவிட்டதாக 'பாக்ஸ் ஆபீஸ்' தகவல்கள் கூறுகின்றன. விட்டதைப் பிடித்த நிம்மதியில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பழையபடி மிடுக்குடன் நடமாட ஆரம்பித்துள்ளார். இந்த வெற்றியை கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, செல்வராகவன், ரவீந்திரன் ஆகிய ஐந்து பேரும் ஆந்திர தியேட்டர்களில் நேரில் தோன்றி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தை அவசரம் அவசரமாக ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். கார்த்தியே சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறாராம்.
Read More

3 இடியட்ஸ்’ Vs ‘மை நேம் இஸ் கான்’..


16-srk-gauri-karan200


வசூலில் சாதனை படைப்பது யார் என்பதில் ஆமிர்கானின் 3 இடியட்ஸ் படத்துக்கும், ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படத்துக்கும் கடும் மோதல் மூண்டுள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் வெளியான படம் மை நேம் இஸ் கான். அதற்கு முன்பு வெளியாகி பரபரப்போடு ஓடிக் கொண்டிருப்பது ஆமிரின் 3 இடியட்ஸ். இந்த இரு படங்களுமே வசூலை வாரியள்ளிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பெரும் நஷ்டத்தை சந்தித்த பாலிவுட்டுக்கு இந்த இரு படங்களுமே பெரும் வசூல் மழையை வாரிக் கொண்டு வந்துள்ளன. ஷாருக்கான் படம் இதுவரை உலகம் முழுவதும் 900 மில்லியன் ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. அதேசமயம், 3 இடியட்ஸ் படம் வெளியான முதல் நான்கு நாட்களில் 1 பில்லியன் ரூபாயை அள்ளியது. 3 இடியட்ஸ் படம் அமெரிக்காவிலும் சிறப்பாக ஓடி வசூலைக் குவித்தது. அதே போலத்தான் இப்போது ஷாருக் படமும் அமெரிக்காவிலும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தியாவில் மை நேம் இஸ் கானை திரையிட்டுள்ளது. அதன் கிளை நிறுவனமான பாக்ஸ் சர்ச்லைட் நிறுவனம் அமெரிக்காவல் திரையிட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளில் தாய் நிறுவனமான டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் திரையிட்டுள்ளது. ஆமிர்கான், ஷாருக் கான் படங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள வசூல் போட்டியால் பாலிவுட்டினர் குஷியடைந்துள்ளனர். யார் வென்றாலும் அது இந்தி சினிமாவுக்கு நல்லதே என்பதால் வந்த குஷி இது. தாக்கரேக்கள் வேற ரூட் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு...!
Read More

சந்தோஷமான தம்பதி:

15-abishek-aish200


மும்பை: பிரபலமானவர்களில் மிகவும் அதிகமாக விரும்பப்படும், மகிழ்ச்சிகரமான தம்பதியர் பட்டியலில் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இணையதளம் இதுதொடர்பான கருத்துக்கணிப்பை நடத்தியது. சுமார் 3.6 லட்சம் பேர் இதில் தங்களின் ஓட்டை பதிவு செய்தனர். இதில், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி தான் மிகவும் சந்தோஷமான தம்பதி, தாங்கள் விரும்பும் தம்பதி என 32 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அடுத்த இடத்தை ஷாருக்கான்-கௌரி ஜோடி பெற்றுள்ளது. இவர்களை 29 சதவீதம் பேர் மகிழ்ச்சிகரமான தம்பதி எனக் கூறியுள்ளனர். மூன்றாவது இடத்தில் அமிதாப் பச்சன்-ஜெயாபச்சன் ஜோடியை சுமார் 20 சதவீதம் மக்கள் தேர்வு செய்துள்ளனர். நான்காவது இடத்தை அமிர் கான்-கிரன் ராவ் ஜோடி பிடித்துள்ளது. கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என தென்னகத்திலும் கூட ஏராளமான பிரபல சினிமா தம்பதிகள் உள்ளனர். வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த சினிமாக்காரர்களை எல்லாம் தெரியாது போலும்!
Read More

பத்திரிகையாளர்களை பார்த்து ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்!



13-nayanthara200


சென்னை விமான நிலையத்தில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள். இந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. மனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்!)



Read More

ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்!


Genilia Rithesh-reel-6


: பாலிவுட் நடிகை ஜெனிலியாவுக்கும், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. விசாரித்த உண்மை : இது உண்மை இல்லை. இந்தியில் 2003ம் ஆண்டு வெளியான துஜே மேரி கசம் என்ற படத்தில் ஜெனிலியாவும், ரித்தேஷூம் ஜோடி போட்டு நடித்தார்கள். அப்போது ஏற்பட்ட நட்பு இன்னமும் தொடருகிறது என்று சொல்லும் ஜெனிலியா, இப்போதைக்கு கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். தற்போது அம்மணிக்கு, ஷாகித் கபூருடன் ஜோடி சேர்ந்து நடித்த சான்ஸ் பி டான்ஸ் படத்தில் ரீலிஸ் பற்றிய டென்ஷன் மட்டுமே இருக்கிறதாம். இந்த படத்தை ரொம்பவே நம்பியிருப்பதாக சொல்லும் ஜெனிலியா, தொடர்ந்து இந்தியில் நிறைய நடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.



Read More

இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான்' என்று நொந்துபோகும் பெண்களா நீங்கள்?


அழகா இருக்குது... மனசை ஈர்க்குது...
"வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய கஷ்டம் ஏதாவது வந்துவிட்டால், `இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான்' என்று நொந்துபோகும் பெண்களா நீங்கள்? மனதொடிந்து போகாதீர்கள். அந்த கஷ்டம் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தொடக்கத்தை ஏற்படுத்துவதற்கான பிள்ளையார்சுழியாக இருக்கும்!''- என்கிறார் வாசுகி மணிவண்ணன்.
இவர் அழகுக்கலை நிபுணர். பெண்களின் கூந்தலில் விதவிதமான பூக்கள், மணிகள், இலைகள், பழங்கள், ரிப்பன்கள் போன்றவைகளை இணைத்து அலங்காரப் படுத்துவதில் சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்.
சரி.. இவருக்கு வந்த சோதனை என்ன என்பதை முதலில் கேட்போம்..
"நான் பிளஸ்-டூ படித்திருக்கிறேன். 19 வயதில் திருமணம் நடந்தது. வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டதால் புடவை வியாபாரம் செய்யத் தொடங்கினேன். மும்பைக்கு போய் புடவைகளை வாங்கிவந்து, இரு சக்கர வாகனத்தில் வைத்து சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வேன். ஓரளவு சம்பாதிக்க முடிந்தது. வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இரண்டு குழந்தை களும் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்ததால் இரவு 11 மணிக்குத்தான் சமையல் செய்வேன். சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். தினமும் வியாபாரம் முடிந்து வந்ததும், புடவைகளை எல்லாம் கட்டி வீட்டின் அருகில் உள்ள கடையில் வைத்து விடுவோம். நான் இரவில் எத்தனை மணிக்கு தூங்கினாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
அன்று என்ன நடந்ததோ தெரியாது. காலை 9 மணிவரை தூங்கிக் கொண்டிருந்தேன். என் மகன் கடை திறந்து கிடப்பதாகக் கூறினான். ஓடிப்போய் பார்த்தால், அத்தனை புடவைகளையும் திருடர்கள் அள்ளிக்கொண்டு போயிருந் தார்கள். 15 வருடங்களுக்கு முன்பு இது நடந்தது. புடவை களின் அப்போதைய மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய்.
நான் மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டேன். அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. என் நிலையைப் பார்த்த என் கணவர், மனநிலையில் தெளிவு ஏற்பட வேண் டும் என்பதற்காக அழகுக்கலை கல்வி பயில என்னை அனுப்பினார். ஆர்வத்தோடு அதைக் கற்றேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் புதிய தொடக்கம் ஏற்பட்டது''-என்கிறார், வாசுகி.
இவரது குடும்பத்திற்கு ஆடை வடிவமைப்பது பாரம்பரிய தொழில் என்பதால், இயல்பிலே கலை ஆர்வம் இருந்திருக்கிறது. யாருக்கு எந்த மாதிரியான நிறங்கள் பொருந்தும் என்பதும் இயற்கை யாகவே இவருக்கு புரிந்திருக்கிறது. சிறுவயதிலே ஓவியம் வரைவதிலும், புதுமாதிரியான பொருட்களை வடிவமைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.
"நான் புடவை வியாபாரம் நடத்தும்போது அதை அபிவிருத்தி செய்வதற்காக வங்கியில் ஒரு லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். நான் எல்லாவற்றையும் திருட்டுக் கொடுத்துவிட்டு, எதிர் காலத்தைப் பற்றிய கேள்விக்குறியோடு இருந்தபோது, அந்த வங்கி மேலாளர் ஆய்வுக்கு வந்திருந்தார். நடந்ததைக் கூறியதும், அவர் என்னை ஆறுதல்படுத்தி விட்டு, `கலங்காதீர்கள். பிïட்டி கோர்ஸ் முடித்ததும் கடன் தருகிறேன். பார்லர் வையுங்கள்' என்றார். கடன் கிடைத்தது. பார்லர் வைத்தேன்''- என்று தான் வாழ்க்கையில் வளர்ந்த பின்னணியை விளக்குகிறார்.
அழகுக் கலை போட்டிகளில் கலந்துகொண்டு விருது, பரிசுகளை வாங்கிக் குவித்த இவர், மணப்பெண் மற்றும் வளைகாப்பு நடத்தும் பெண்களுக்கு ஜடை போடுவதில் தன் முழுத் திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்.
"மணப் பெண்களுக்கு ஜடை அலங்காரம் செய்வது தமிழ் கலாசாரத்தின் முக்கிய அம்சம். ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு மணப் பெண்களில் சிலர் தலையை விரித்துப் போடத் தொடங்கினார்கள். அதற்கு `ப்ரி ஹேர்' என்றொரு பெயரை வைத்துக்கொண்டு அதுதான் முகூர்த்த நேரத்து பேஷன் என்றார்கள். சிலர் சும்மா பெயருக்கு ஒரு போனி டைல் போட்டால் போதும் என்றனர். அதைக் கேட்டதும் நம்ம கலாசாரம் எங்கே போகிறது என்று எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
எல்லோரிடமும் முகூர்த்தத்திற்கு ஜடை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்வது வேலைக்கு ஆகாது என்பது எனக்கு தெரிந்தது. ஜடை போட்டுக்கொண்டால் அழகு எப்படி அதிகரிக்கும் என்பதை செய்து காட்டினால் தானாகவே அவர்களுக்கு அதில் ஆர்வம் வந்துவிடும் என்பதை புரிந்து, புதுப்புது ஜடை அலங்காரங்களை உருவாக்கத் தொடங்கினேன். மணப்பெண்களை விதவிதமாக அலங்கரித்தேன். அதைப் பார்த்து நிறைய பெண்களுக்கு ஜடை அலங்காரத்தில் ஆர்வம் வந்துவிட்டது''

புதிய புதிய ஜடை அலங்காரங்களை எப்படி உருவாக்குகிறீர்கள்?
"நான் கற்றது என்பது குறைவுதான். அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு நானே புது மாதிரிகளை உருவாக்கினேன். அதற்கு தேவையான பொருட்களை கண்டறிய இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். பூக்கள், இலைகள், மணிகள் போன்றவை எங்கு தரமாக அழகாக கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவைகளை வாங்கி என் கற்பனைக்கு தகுந்தபடி கோர்த்து விதவிதமாக அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறேன்.
மணப்பெண்கள் முதலிலே அவர்களது பட்டுப்புடவை, ஜாக்கெட் டிசைன், வாங்கியிருக்கும் புதிய நகை டிசைன் போன்றவைகளை எல்லாம் என்னிடம் காட்டிவிடுவார்கள். அதற்கு பொருத்தமாக நான் கூந்தல் அலங்காரத்தை செய்வேன். உடை, ஆபரண டிசைன்களுக்கு தகுந்தபடி ஜடையை யும் டிசைன் செய்வேன். மணப்பெண்ணின் சருமம், முக அமைப்பு, உடல் அளவு போன்ற வைகளையும் முதலிலே பார்த்து அதற்கு பொருத்தமாக ஜடை அலங்காரம் செய்ய வேண்டும்''
இப்போது நிறைய பெண்கள் கூந்தலை குட்டையாக வெட்டிவிடுகிறார்களே! அவர்களுக்கு நீளமான கூந்தல் அலங்காரம் செய்வது எப்படி?
"இப்போது கூந்தலை வெட்டிக்கொள்வதை குறை சொல்ல முடியாது. பராமரிக்க நேரம் இல்லை. முன்பெல்லாம் சுற்றுப்புற சூழல் நன்றாக இருந்தது. வாரத்தில் ஒரு முறை கூந்தலை கழுவிவிட்டால் போதும். இப்போது மாசு, புகை அதிகம். வாரத்தில் மூன்று நாட்கள் கழுவ வேண்டியதிருக்கிறது. அதனால் அவர்களால் பராமரிக்க ஏற்றபடி கூந்தலை வெட்டி வடிவமைத்துக்கொள்ளலாம்.

திருமணத்திற்கு ஜடை அலங்காரம் செய்யும் போது சவுரி முடியை தேவையான அளவு சேர்த்து அலங்காரம் செய்துகொள்ளலாம். சில பெண்கள் என்னிடம் `நீங்கள் கூந்தல் அலங்காரம் செய்தால், தோழிகள் எல்லாம் பின்னால் வந்து நின்று ஜடை அழகைத்தான் அதிக நேரம் பார்த்து ரசிக்கிறார்கள்' என்பார்கள். எல்லோரும் பார்த்து ரசித்து, நமது கூந்தல் அலங்கார கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதை சிரத்தையுடன் செய்து, என் திறமைகளை காட்டுகிறேன்''
முகூர்த்த ஜடை அலங்காரத்திற்கும், வளைகாப்பு ஜடை அலங்காரத்திற்கும் என்ன வித்தியாசம்?
"மணப் பெண்ணை நன்றாக அலங்காரம் செய்துவிட்டோம் என்றால், அந்த கல்யாண மண்டபமே அழகானது போல் மாறிவிடும். அந்த அலங்காரத்தை பெண் மட்டுமின்றி கணவரும் ரசிப்பார். நேர்த்தியான அழகுதான் மனதுக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உடல்ரீதியாக அவ்வப்போது சோர்ந்து போவார்கள். அவர்கள் சோர்வை விரட்டவும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்கும் விதத்திலும் மல்லிகைப் பூ, உலர்ந்த பழவகைகள், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள், பழங்களை வைத்து அலங்காரம் செய்வோம். அதன் மணமும், குணமும் தாய்க்கும், சிசுவுக்கும் நல்லது. இந்த ஜடை அலங்காரம் செய்துகொண்டால் வளைகாப்பு முடிந்து ஒரு வாரம் வரை அந்தப்பெண்ணின் கூந்தலில் ரம்மியமான இயற்கை வாசனை வீசிக்கொண்டே இருக்கும்''
கூந்தல் அலங்காரத்தில் சாதனை செய்வதில் வாசுகிக்கு அளவற்ற ஆர்வம்.
"முதலில் 27 அடி நீள அலங்கார கூந்தலை உருவாக்கினேன். தற்போது லிம்கா சாதனைக்காக 75 அடி நீள கூந்தலை உருவாக்கியிருக்கிறேன். அதன் அலங்கார இணைப்புகள் மற்றும் உழைப் பையும் சேர்த்தால் அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் வரை ஆனது. நிறைய வேலைப் பாடுகளையும் செய்திருந்தேன். அடுத்து கின்னஸ் சாதனைக்காக 100 அடி நீள கூந்தலை உருவாக்க வேண்டும்''-என்கிறார்.
இவரது பிரண்ட்ஸ் பிïட்டி கேர் என்ற அழகு நிறுவனம் மேற்கு மாம்பலத்தில் உள்ளது. ஜடை அலங்காரத்தில் சாதனை செய்வது மூலம் பெண்களிடம் கூந்தல் பராமரிப்பில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று வாசுகி நம்புகிறார்.
Read More

“சூப்பர்மேன்” ஆக ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.


இந்தியில் அமீர்கான், மாதவன் நடித்து ஹிட்டான 3 இடியட்ஸ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அமீர்கான் கேரக்டரில் விஜய் நடிக்கிறார். ஜீவாவும் நடிக்கிறார். இந்தியில் மாதவன் நடித்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. இது பற்றி மாதவன் கூறியதாவது:-
3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னை கேட்கின்றனர். எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே அந்த கேரக்டரில் நடித்தாகி விட்டது. மீண்டும் ஒரு முறை ஏற்கனவே செய்த மேஜிக்கை மீண்டும் செய்வதில் உடன்பாடு இல்லை.
கமலுடன் இணைந்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். எனக்கு பிடித்த நடிகர் கமல். தமிழில் நான் நடித்த படங்களில் “அலைபாயுதே” எனக்கு மிகவும் பிடிக்கும். “சூப்பர்மேன்” ஆக ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
விஜய் நடித்த படங்களில் கில்லி எனக்கு ரொம்ப பிடிக்கும். சூர்யா-கஜினி, படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். அமீர்கானைவிட சூர்யா நடிப்பு தான் நன்றாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்
Read More

விவேக்கின் புதிய முடிவு.....



.

.
இனி எந்த நிலையிலும் யார் மனதையும் புண்படுத்தும்படி பேச மாட்டேன் என தீர்மானித்திருக்கும் நடிகர் விவேக் படத்திற்கு படம் வித்தியாசமான கெட்அப்பில் தோன்றவும் விரும்புகிறாராம். விரைவில் வெளியாக உள்ள "வாடா' படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் கெட்அப்பில் நடித்திருக்கிறாராம். சுருளி கெட்அப்பில் கஷ்டப்பட்டு நடித்தவர் அவர் குரலில் டப்பிங் பேசதான் படாதபாடுபட்டாராம்.
.
அடுத்து வரும் படங்களில் பருவ நிலை மாற்றம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலடி செய்திருப்பதாக கூறும் விவேக், கல்லூரி விழாக்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் கோரிக்கையாக வைத்து வருகிறாராம்.

கைவசம் உள்ள படங்கள் பற்றி உற்சாகமாக செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கிடம், நித்யானந்தா பற்றி ஒரு நிருபர் கேட்டபோது விவேகானந்தர் பற்றி பேசலாமே என்று சிரித்தபடி கூறினார்.
Read More