அடிக்கடி சென்னையில் தென்படும் ப்ரீத்தி வர்மா ஒரு ஆஃப் லைன் புரடியூசர். தமிழை பொறுத்தவரைதான் இந்த ஒளிவுமறைவு. பாலிவுட்டில் இவர் ஒரு முக்கியமான தயாரிப்பாளர். இவருக்கும் சீயான் விக்ரமுக்கும் வெகு கால நட்பு. சினிமாவை பொறுத்தவரை நட்பு கரிக்கும். உப்பு இனிக்கும். உவர்ப்பு புளிக்கும். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கும். அப்படிதான் இந்த நட்பில் ஒரே உப்பு கரிப்பு என்கிறது கோடம்பாக்க குளறுபடி செய்தி ஒன்று. ஏனாம்? விக்ரம் தயாரிப்பில்(?) சசிக்குமார் இயக்கி வருகிறார் ஒரு புதுப்படத்தை. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிவிட்டார் விக்ரம் என்றே சினிமா வட்டாரம் கொட்டமடித்து கும்மாளம் கொட்டியது. ஏனென்றால் ஒரு நடிகர், தான் சம்பாதிக்கிற பணத்தை சம்பாதித்த இடத்திலேயே முதலீடு செய்வதென்பது குதிரைக் கொம்பு அல்லவா? அதனால்தான் இந்த கொண்டாட்டம். ஆனால் இந்த படத்தின் நிஜ தயாரிப்பாளர் நாம் சொன்ன ப்ரித்தி வர்மாதான் என்கிறார்கள் சிலர். யூனிட்டில் முப்பது பேரை மட்டும் வைத்துக் கொண்டு சிக்கன சிகாமணியாக படம் எடுத்து வருகிறாராம் சசிகுமார். ஆனால் படம் துவங்கி பத்தே நாட்களில் பட்ஜெட் விண்ணை முட்டிக் கொண்டு நிற்கிறதாம். எப்படி என்பது புரியாத வர்மா, கர்ம சிரத்தையோடு கணக்கு போட்டு பார்த்தால் ஒரே டவுன் பஸ் இடி அந்த கணக்கில்! கணக்கு காட்டிய விக்ரம்தான் தப்பு கணக்கு போட்டுவிட்டார் என்ற முடிவுக்கு வந்த ப்ரீத்தி வர்மா, இப்போது சென்னைக்கே வந்துவிட்டார். வேறென்ன? மிச்ச கணக்கையாவது முறையாக போடலாம் என்றுதான். படத்துக்கு வேணும்னா இன்னும் பேரு வைக்காம இருக்கலாம். இந்த தப்புக்கணக்குக்கு சின்ஹா வைச்ச பேரு என்ன தெரியுமா? துரோகம்! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.