ஐ.பி.எல். போட்டிகளில் தனது பஞ்சாப் அணி சொதப்பினாலும் தொடர்ந்து புன்னகை முகமாகவே வலம் வருகிறார் பிரீத்தி ஜிந்தா. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். போட்டிகளின் போது இவரை `பிரெட்டி... பிரெட்டி' என்று அழைத்தார்களாம் அந்நாட்டு ரசிகர்கள்.
சினிமா, கிரிக்கெட் தவிர இந்த அழகு நட்சத்திரத்துக்குப் பிடித்த இன்னொரு விஷயம், சுற்றுலா. தனது மனதுக்குப் பிடித்த இடங்கள் குறித்து மனம் திறக்கிறார் பிரீத்தி...
செல்ல விரும்பும் இடம்
``பிடல் காஸ்ட்ரோ இறக்கும் முன் கிïபாவுக்குச் செல்ல விரும்புகிறேன். அதேபோல நான் இறப்பதற்கு முன் காண விரும்பும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. எனது கடைசிக் காலத்துக்கு முன் உலகின் அழகான அத்தனை இடங்களையும் பார்த்து விடத் துடிக்கிறேன். எங்கப்பா ராணுவத்தில் இருந்ததால் நாங்கள் ஒரே இடத்தில் வசித்ததே இல்லை. காஷ்மீர் முதல் கேரளா, மிசோரம் வரை நாங்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தோம். நமது மிக அழகான நாட்டை முழுமையாகத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது.''
தென் ஆப்பிரிக்க அனுபவம்
``கடந்த முறை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டி அதற்கே உரிய `த்ரில்'லை அளித்தது. உள்ளூர் மைதானம் என்ற வசதி இல்லாததால் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்க மக்கள் மிகவும் இதமாக நடந்து கொண்டார்கள். நான் மைதானத்தை நெருங்கும்போதே `பிரெட்டி... பிரெட்டி...' என்ற உற்சாகக் கோஷம் கேட்கும். ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு வருத்தம். அது, அங்கு காட்டுக்குள் சுற்றிப் பார்க்க (சபாரி) முடியவில்லை என்பதுதான். எனது மெய்க்காவலர், `சபாரி' போனார். அவரை ஒரு சிங்கக் குட்டி கடித்துவிட்டது. ஆனால் அவர் தன்னை ஒரு `சிங்கம்' கடித்துவிட்டது என்பதைப் போல கூறி என்னையும் கதிகலங்க வைத்துவிட்டார்!''
லண்டனில் `திக்... திக்...'
``தனியாகப் பயணம் செய்வது சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் சமயங்களில் அது வேறு மாதிரியாகவும் போய்விடும். பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒருமுறை லண்டனில் ஒரு குறுகலான சந்தில் மாட்டிக் கொண்டேன். அப்போது ஒரு திருடன் எனது நகைகள், பர்ஸ் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். நான் ஆசை ஆசையாய் வாங்கிய இனிப்புகளைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அதிலிருந்து நான் எங்கு சென்றாலும் கார், டிரைவர், மெய்க்காவலர் இல்லாமல் செல்வதில்லை!''
மனங்கவர்ந்த பாரீஸ்
``லண்டன், சுவிட்சர்லாநëதுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நகரம் பாரீஸ். கடந்த ஜுலையில் நானும் எனது பேஷன் டிசைனர் தோழி சுரிலி கோயலும் ஒரு திடீர்ப் பயணமாக லண்டனிலிருந்து பாரீஸுக்குப் புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஜாலியாகப் பொழுதைக் கழித்த நாங்கள், மிகவும் ஆடம்பரமான ஓட்டலான `ஐந்தாம் ஜார்ஜ்'-ல் தங்கினோம். நாங்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். பகல் வேளையில் அவள் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, மாலை வேளையில் நான் விரும்பும் இடங்களுக்குச் செல்வது. அவள் என்னைக் கடை கடையாக இழுத்துச் சென்றாள். மாலையில் எனது விருப்பப்படி புதிய புதிய உணவு வகைகளை ருசி பார்த்தோம். காரணம், நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை!''
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.