நகைச்சுவை மன்னன் சார்ளி சாப்ளினைத் தெரியாதவர்கள் மிகச் சிலரே இருக்க முடியும். வலியவனை எளியவனால் வெல்ல முடியும் என்ற ஒரே கருத்தே அவரின் கோமாளித்தனமான படங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ஏழ்மையும் வறுமையும் தான் இவரது சுவாரஸ்யமான படங்களுக்குப் பின்னணியாக இருந்தது.
சர்வாதிகாரி ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அதே காலப் பகுதியிலே (1940) சார்ளி சாப்ளினும் வாழ்ந்தார். ஹிட்லரைக் கண்டு முழு உலகமும் நடுங்கிய போதும் சார்ளி சாப்ளினோ (ஹிhலீ மிrலீat ளிiணீtator) அந்த சிறந்த சர்வாதிகாரி என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஹிட்லர் மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சாப்ளினின் மற்ற குறும் படங்களைப் போலல்லாமல் இது இரண்டு மணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது. கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்த படம்.
இந்தப் படத்தில் சாப்ளின் இரட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி, இன்னொருவர் சாதாரண சிகை திருத்தும் யூதர். சிகை அலங்கரிப்பவர் வாழும் சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை. சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும் ஹிட்லரை மன நோயாளி போல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.
ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலுமாரியைத் திறக்கிறார். அதில் பல விதங்களில் முகம் பார்க்கும் கண்ணாடிகள். அதில் முகத்தை சரி செய்கிறார். சில நேரம் குழந்தை போல சிரித்துக் கொண்டே அறையிலுள்ள திரைச் சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவது போல நடனமாடுகிறார்.
படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர், ஆள் மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப் பதிலாக ஜெர்மனி படை வீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார்.
ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துகளை அந்த உரையில் வைக்கிறார். பின்பு தன காதலியிடம் சேருகிறார். இதுதான் படம். ஹிட்லர் உலகையே மிரட்டிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து படம் எடுப்பதென்பது சாதாரண விடயமா என்ன?
GIF animations generator gifup.com
1 comments:
நான் எத்தனை தடவை பார்த்தேனோ? ஞாபகம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தடவையும்
ரசித்துப் பார்ப்பேன். ஜேர்மன் மொழி பேசும்போது கரடு முரடாகத் தொனிக்கும் அதை
மிக தத்துரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்.
அப்படத்தில் கழித்துவிடக் காட்சியே எனக்கில்லை.
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.