Pages

Tuesday, April 27, 2010

வில்லனை தேடி 100 கிலோ மீட்டர் ஓடிய கதாநாயகன்

 
திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி ஆகிய படங்களை தயாரித்த பட நிறுவனம், ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,' `மதராசப்பட்டணம்' ஆகிய இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
 
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், `பலே பாண்டியா' என்ற படம் வெளிவர இருக்கிறது.
 
இதில், `வெண்ணிலா கபடி குழு' படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணுவும், `பொய் சொல்ல போறோம்,' `கோவா' படங்களில் நடித்த பியாவும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அமர், ஜிப்ரான் என்ற இரண்டு வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
புக்கட் தீவு மற்றும் ஹாலிவுட் படங்களில் வந்த ஜேம்ஸ்பாண்டு தீவு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. புக்கட் தீவில், உச்சக்கட்ட சண்டை காட்சி 10 நாட்கள் படமாக்கப்பட்டது. கதாநாயகன் விஷ்ணுவும், வில்லன் ஜிப்ரனும் `டூப்' போடாமல் மோதினார்கள்.
 
படத்தின் இரண்டாம் பகுதியில் கதைப்படி விஷ்ணு, வில்லனை தேடி ஓடிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் படத்துக்காக, குறைந்தது 100 கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறார்.
 
இந்த படத்துக்காக கவிஞர் வாலி மூன்று பாடல்களையும், தாமரை இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். பின்னணி பாடகர் தேவன் ஏகாம்பரம், இசையமைத்து இருக்கிறார். பல படங்களுக்கு விளம்பர டிசைனராக இருந்த சித்தார்த் டைரக்டு செய்துள்ளார்.
 
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
 

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.