அவரது மார்க்கெட் வேல்யூ நேற்று வரை அதலபாதாளத்தில்தான் இருந்தது. ஆனால் இன்று...? மலை மலை சுமாராக போனது அருண் விஜய்யின் மார்ககெட்டை ஜிவ்வென்று தூக்கிவிட்டிருக்கிறது. மலை மலையில் பணிபுரிந்த அதே டீமுடன் மாஞ்சா வேலு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது. மாஞ்சா வேலுக்கு மொத்தம் 215 பிரிண்ட்டுகள் போட திட்டமிட்டுள்ளனர். அருண் விஜய் நடித்தப் படங்களில் அதிக பிரிண்ட்டுகள் போடப்படும் படம் என்ற பெருமை மாஞ்சா வேலுக்கு கிடைத்திருக்கிறது. 200 பிரிண்ட்டுகளை தாண்டும் முதல் அருண் விஜய்யின் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மாஞ்சா வேலுவில் அருண் விஜய்யுடன் பிரபு, கார்த்திக், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர். கனல் கண்ணனின் ஆக்சன் காட்சிகள் படத்தின் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். |

GIF animations generator gifup.com
மலை மலை சுமாராக போனது அருண் விஜய்யின் மார்ககெட்டை ஜிவ்வென்று தூக்கிவிட்டிருக்கிறது. மலை மலையில் பணிபுரிந்த அதே டீமுடன் மாஞ்சா வேலு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது. 


0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.