முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி கதை-வசனத்தில் வளர்ந்து வரும் படம், `பெண் சிங்கம்.' இந்த படத்தில், உதயகிரண்-மீராஜாஸ்மின் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
படத்தில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் இணைந்து நடனம் ஆடும் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ``அடி, ஆடி அசையும் இடுப்பு-சோறு ஆக்கி வைக்கும் அடுப்பு...அட, ஏண்டி அதுக்கு உடுப்பு?-அதை எடுக்க சொல்லு விடுப்பு...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு, தேவா இசையமைத்து இருக்கிறார்.
இந்த பாடல் காட்சிக்காக, சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு பெரிய குடோனில் மூன்று பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் ஆடிப்பாடுவது போல் 4 நாட்கள் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.
`பெண் சிங்கம்' படத்தில் வேலு நாச்சியாரின் ஓரங்க நாடகமும் இடம்பெறுகிறது. வேலுநாச்சியாராக மீராஜாஸ்மின் நடித்த காட்சி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள கலையரங்கில் படமாக்கப்பட்டது.
கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பு வளையத்தில் உதயகிரணும், ராதாரவியும் மோதுகிற சண்டை காட்சி ஒன்றும் சமீபத்தில் படமானது.
இந்த படத்துக்காக கலைஞர் கருணாநிதி எழுதிய ``ஆகா! வீணையில் எழுவது வேணுகானமா? திருவாவடுதுறையின் தோடி ராகமா? திருவெண்காட்டு மகுடி நாதமா?'' என்ற பாடலும், கவிஞர் வைரமுத்து எழுதிய ``நீ சொன்னால் தேய் பிறை வளரும்...நீ தொட்டால் தீப்பொறி மலரும்'' என்ற பாடலும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படுகின்றன. அத்துடன், `பெண் சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் என்.ஜெயமுருகன், ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் ஆகிய இருவரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் விவேக், ரிதீஷ் எம்.பி, சுதர்சனாசென், ரம்பா, ரோகிணி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மதன்பாப், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விஜய் ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், பார்த்திபனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவருமான பாலி ஸ்ரீரங்கம் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.






இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்தி சினிமாவுக்கு செல்லும் ஆசை இல்லை என்றார் நயன்தாரா. இது பற்றி அவர் கூறியதாவது: கிளாமர் வேடங்களில் அதிகம் நடித்துவிட்டேன். நடிப்பை வெளிப்படுத்தும் படத்துக்காக காத்திருந்தேன். அப்போதுதான் மலையாள படமான ‘எல்க்ட்ரா’வில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலான படங்களில் நடிக்கும்போது மரத்தை சுற்றி நடனம் ஆட மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. பட விளம்பரத்துக்கும் கிளாமருக்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய படங்களிலும் ஹீரோயின்களுக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நல்ல கேரக்டர் கொண்ட சிறு படங்களில் நடிக்கலாம்.







டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். இந்தி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுபவர் போனி வர்மா. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்களில் இவர் பணியாற்றினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ் ராஜ்.











