
‘பலே பாண்டியா’ படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்துள்ளார் பியா. அவர் கூறியதாவது: ‘ஏகன்’ தவிர நான் நடித்த ‘பொய் சொல¢லப் போறோம்’, ‘கோவா’, இப்போது ‘பலே பாண்டியா’ என மூன்று படங்களுமே காமெடி கதை. இது நானாக தேர்வு செய்தது அல்ல. தானாக அமைந்தது. இது உங்களுக்கு பிளஸ்ஸா, இல்லையா எனக் கேட்கிறார்கள். ஒரு படத்தின் பின்னணி காமெடியாகவோ ஆக்ஷனாகவோ எதுவாகவும் இருக்கலாம். அது சொல்லப்படும் விதம், அதில் நமது வேடம்தான் முக்கியம்.அந்த விதத்தில் இந்த மூன்று படங்களும் வெவ்வேறு கதை களம். அதே போல, காமெடி படமாக இருந்தாலும் எனது வேடம் சீரியஸாகவே இந்த படங்களில் இருந்தது. ‘பலே பாண்டியா’விலும் அப்படித்தான். வெளிநாட்டிலிருந்து பாட்டியை சந்திக்க வரும் கேரக்டர். விஷ்ணுவை பார்த்தபின் எனது வாழ்க்கை மாறுகிறது. ஜூலையில் இப்படம் ரிலீசாகும். அடுத்து நான் நடிக்கும் ‘கோ’ படம், ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது. அதனால் என் மீதான காமெடி பட நாயகி இமேஜை அது மாற்றும். இவ்வாறு பியா கூறினார்.

GIF animations generator gifup.com



0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.