சீடன்’ படத்துக்காக பழனி மலை அடிவாரத்தில் வீடு இருப்பது போல செட் அமைத்து, ஷூட்டிங் நடத்தினர். தனுஷ், அனன்யா, புதுமுகம் கிருஷ்ணா நடிக்கும் படம் ‘சீடன்’. படம் பற்றி இயக்குனர் சுப்ரமணியம் சிவா கூறியதாவது: பட ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டது. தனுஷ் பங்குபெறும் ஒரு பாடலும் ஓரிரு காட்சிகளுமே பாக்கி. கதை முழுவதும் பழனியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. பட ஹீரோயின் அனன்யாவின் வீடு பழனி மலை அடிவாரத்தில் இருப்பது போல சென்னையில் செட் அமைத்தோம். பெரும்பாலான ஷூட்டிங் இங்குதான் நடந்தது. ரூ. 1 கோடியே 20 லட்சம் இதற்கு செலவானது. படத்தில் தனுஷுக்கு ஜோடியில்லை. அனன்யாவுக்கு ஜோடியாக கிருஷ்ணா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் செம்மீன் ஷீலா நடிக்கிறார். சுகாசினி, விவேக் உள்ளனர். தினா இசைமையத்துள்ளார். ஒளிப்பதிவு, சீனு. ஜூலையில் படம் வெளியாகும். இவ்வாறு சுப்ரமணியம் சிவா கூறினார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.