| சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம் |
எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறாராம். இது கிளைமாக்சா? அல்லது படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காட்சியா? எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் இப்படியொரு காட்சி எடுக்க முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறார் ரஜினி.கடந்த வாரத்தில் ஒருநாள்... எந்திரன் யூனிட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றி விட்டு ரகசியமாக ஒரு காட்சியை படம் பிடித்தார் ஷங்கர். வெளியேற்றப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லைட்மேன்கள் மட்டுமல்ல... முக்கிய அசிஸ்ட்டென்ட் டைரக்டர்களும், தொழில் நுட்ப உதவியாளர்களும் கூட அடக்கம் என்கிறார்கள். ஏதாவது படுக்கையறை காட்சிகள் என்றால் தான் இப்படி வெளியேறச் சொல்வார்கள் இந்தப்படத்தில் அப்படியா இருந்திருக்கும்? அதுதான் இல்லை. எங்காவது ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்தால் விஷயம் கசிந்துவிடும் என்பதால் சன் டி.வி ஸ்டுடியோவிலேயே இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் அவர் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. ஆச்சர்யம்தான்! |

GIF animations generator gifup.com




0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.