பேராவூரணி நிலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதழுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் பேராவூரணி பேரூராட்சி மண்டகப்படியை முன்னிட்டு நடன நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரூராட்சி நிர்வாகம் மூலம் காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கோரிமனு கொடுத்திருந்தும் மிகக்குறைவான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பெண்கள் பகுதியில் ஆண்கள் அமர்ந்து கிண்டலும், கேலியும் பேசி கலாட்டா செய்தனர். ஒரு சில போலீசார் தடுக்க முயன்ற போது கூட்டமாக சேர்ந்து கொண்டு போலீசாரை தாக்க ரசிகர் கூட்டம் முற்பட்டது. பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து சென்று போலீசாரை காப்பாற்றும் நிலை ஏற்பட்டது.
மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில் திருவிழாவிற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கூடுவர். இந்த ஆண்டும் நடைபெற இருக்கிற காவடி தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழாக்களுக்கு பெருந்திரளாக கூட்டம் கூடும். இதற்கு போதிய போலீசார் இல்லாவிட்டால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். இதற்கு போதிய போலீசாரை நியமித்து திருவிழா சிறப்பாக நடக்க உதவிட வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேராவூரணி காவல்துறையினரிடம் கேட்டபோது பாதுகாப்புக்கு போதுமான அளவில் போலீசார் இல்லையென்பது உண்மையென்றாலும் விழாவன்று திரைப்பட நடிகை சங்கவி நடனமாடுவார் என கூறி விட்டு அவர் நடனமாடாமல் கையை காட்டி ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு சென்றதால் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர் என்று கூறினர்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.