2009 ம் ஆண்டு மார்ச் 31 ந் தேதியுடன் முடிந்த ஓராண்டுக்கான கணக்கு தணிக்கையர் அறிக்கை, மராட்டிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளான நேற்று வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக கூறி இருப்பதாவது:
பொழுதுபோக்கை மையமாகக் கொண்டுதான் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படுகின்றன. டி.வி. பொழுதுபோக்குக்கு மாற்றாக இந்தப் போட்டிகள் அமைகின்றன. எனவே மக்களுக்கு பொழுது போக்காக திகழ்வது என்ற நோக்கத்தை கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படுவதால்,டிக்கெட் விற்பனைக்கு கேளிக்கை வரி விதிப்பது சரியானது. ஐ.பி.எல்.போட்டிகளுக்கு நல்ல வருவாய் வாய்ப்பு உரியது. முழுக்க முழுக்க வணிக மயமானது.
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற அணிகளை வாங்குவதற்கு தொழில் அதிபர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். பணம் கொழிக்கும் இந்தக் கிரிக்கெட் போட்டிகளில் உலகமெங்கும் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கிரிக்கெட் மைதானங்களின் இருக்கைகளின் எண்ணிக்கை அடிப்படையில், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.500 ஐ கணக்கில் கொண்டால், மராட்டிய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.4 கோடியே 99 லட்சம் ஆகும்.
2008 ம் ஆண்டு மும்பை வாங்கடே மைதானத்தில் 6 போட்டிகளும், நவிமும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் 4 போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. டிக்கெட்டு விற்பனை இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை.
டிக்கெட் விலை, பல்வேறு போட்டிகளுக்கும் விற்பனையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் அரசு அதை அளிக்க வில்லை.
டெல்லி மாநில அரசைப் பின்பற்றி ஐ.பி.எல். போட்டிகளுக்கு வரி விதிப்பது பற்றி மராட்டிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.