
ரிட்ஸ் என்ற ஆங்கில இதழின் சார்பாக சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன் குடும்பத்தோடு கலந்து கொண்டார். இவரது மகனும் வாரணம் ஆயிரம், தமிழ் படம், மற்றும் பையா படங்களின் தயாரிப்பாளருமான துரை தயாநிதிக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது வழங்கப்பட்டது. அதை காணும் ஆவலில்தான் வந்திருந்தார் மு.க.அழகிரி.
பல்வேறு துறைகளில் பங்கு பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது சில விருதுகள்தான். அதில் முக்கியமான விருது செல்வராகவனுக்கு வழங்கப்பட்ட சிறந்த இயக்குனர் விருது. அமைச்சர் அழகிரியின் கையால் இந்த விருதை பெற்றுக் கொண்ட செல்வராகவன் பேசும்போது செம கிளாப்ஸ்.
ரிட்ஸ் இதழை நான் பாராட்டணும். ஏன்னா, டெக்னீஷியன்கள் படங்களை எந்த பத்திரிகைகளும் அட்டையில் போடுவதில்லை. ஆனால் என் படத்தை கூட அவர்கள் அட்டைப்படமாக போட்டிருந்தார்கள். இந்த முகத்தை அட்டையில் போட எவ்வளவு துணிச்சல் வேண்டும்? என்று அவர் கூற, அழகிரி முகத்தில் கூட லேசான புன்முறுவல்!.
நான் வாங்குகிற முதல் விருது இது. என்னை என்கரேஜ் செய்த என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நன்றி என்றார் தயாநிதி அழகிரி.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.