[ |
பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த “பிரின்ஸ்” என்ற இந்தி படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. |
இதையொட்டி விவேக் ஒபராய் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ் சினிமா மார்க்கெட் பெரியது. இதனால் தான் எனது “பிரின்ஸ்” படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறேன்.இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டது. இந்திய சினிமாவில் ஞாபகமறதி கதாபாத்திரம் கொண்ட படங்கள் 84 வெளி வந்து உள்ளது. இதுவும் கதாநாயகனின் மறதி பற்றிய கதைதான் மெகா திருடனாக நடிக்கிறேன். என் நினைவுகளை திருட வில்லன், போலீஸ் என்னை துரத்தும் 6 நாள்களுக்குள் அவர்கள் என்னை பிடிக்கனும் இதை சுவராசியமாக எடுத்து உள்ளோம். தமிழ் படத்தில் ரஜினி, கமல் படங்களை பார்த்து வளர்ந்தேன். ரஜினி பில்லா, கமலின் சகலகலா வல்லவன் எனக்கு பிடிக்கும். தமிழ் நடிகர்கள் எனது “பிரின்ஸ்” படத்தை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.