Pages

Friday, April 9, 2010

சோயப் மாலிக் - சானியா மிர்சா தேனிலவு..


இஸ்லாமாபாத் : சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி, திருமணத்திற்குப் பிறகு தேனிலவை தங்களது பகுதியில் கொண்டாடவேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோயப்-சானியா திருமணம் பெரும் சர்ச்சைக்குப் பின்னர் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு தேனிலவை தங்கள் பகுதியில் கொண்டாட வருமாறு பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த கில்ஜிட்-பல்திஸ்தான் மாநில முதலமைச்சர் சையத் மெகதி ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சோயப்-சானியா திருமணத்தை மையமாக வைத்து காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற முயற்சிப்பதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.