Pages

Tuesday, April 13, 2010

இளையராஜா புகார் மீது...

இளையராஜா புகார் மீது என்னை கைது செய்ய கூடாது என்று எக்கோ நிறுவன இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இசை அமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது புகார் அளித்தார்.

அதில் தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் இது சம்பந்தமாக ஒப்பந்தமும் போடப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஒப்பந்தபடி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்றும் புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் எக்கோ நிறுவன இயக்குனர் ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:

எங்களுக்கும் இளையராஜாவுக்கும் இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே சிவில் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையாக இருக்கும்போது இளையராஜா புகார் அளித்து இருப்பது தவறானது. இதை சட்டப்படி அணுகிக்கொண்டு இருக்கிறோம்.

இவ்வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.