Pages

Tuesday, April 13, 2010

எல்லா பாடலும் எனக்கே.... ஸ்ருதி கமல்



ஊருக்கு ஒரு புளிய மரமா இருந்தாலும், கிளைக்கு ஒரு புளியம் பழமாவது இருந்தாதானே மரியாதை? கமல்ஹாசனோட பொண்ணுக்கு முதல் படம் ஹிட் ஆகலேன்னா என்ன, அடுத்தடுத்து அவரது திறமைகள் வெளிப்படாமலா போய்விடும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு காதார ஒரு செய்தி.
தமிழில் சுமார் நான்கு படங்களில் நடிக்க சைன் பண்ணியிருக்கிறாராம் ஸ்ருதி. அப்படியே மும்பையில் ஒன்று, தெலுங்கில் ஒன்று என்று பேச்சு வார்த்தைகளும் பின்னி எடுக்கிறது. இந்த நிலையில் கூடுதலாக வரும் இன்னொரு தகவல் இனிப்போ இனிப்பு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சேரும் ஸ்ருதி, படத்தில் தான் ஆடவிருக்கும் எல்லா பாடல்களையும் தானே பாட முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கு இயக்குனர் தரப்பில் எக்கச்சக்க வரவேற்பு.

மகள் விஷயத்தில் அப்பா அதிக அக்கறை காட்டுவார் என்றாலும், கதை விஷயத்தில் என் பொண்ணுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரிதான் என்று ஒதுங்கிக் கொண்டாராம். முருகதாஸ் கதை பிடிக்காம போகுமா என்ன? GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.