Pages

Thursday, April 1, 2010

அசினைப் பற்றி இன்னொரு காதல் கிசுகிசு....

அசினின் காதலன் நீல் நிதின் முகேஷ்


அமீர் கான், சல்மான் கான் கிசுகிசுக்கள் முடிந்து இப்போது புதிய காதல் சுகிசுவில் மாட்டியுள்ளார் அசின்.

கஜினி மூலம் இந்தியில் பரபரப்பானதுமே, அமீர்கானுடன் இணைத்துப் பேசப்பட்டார் நடிகை அசின். ஆனால் அதை இருவரும் மறுத்தனர்.

பின்னர் லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கான் ஜோடியானார். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கப்பட்டது. காதல் பரிசாக சல்மான்கான் மும்பையில் பங்களா ஒன்றை அசினுக்கு வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் பரவின. குறுகிய நாட்களிலேயே சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு அவர்களை காதல் வலையிலும் வீழ்த்தியதாகவும் எப்போதும் மீடியாவின் பரபரப்பு பக்கத்தில் அசின் பெயர் இடம்பெறுவதாகவும் மும்பை நடிகைகளே பொறாமைப்படும் அளவு படு வேகமான வளர்ச்சியைச் சந்தித்தார் அசின்.

ஆனால் லண்டன் டீரிம்ஸ் படம் தோல்வி அடைந்ததால் இந்தியில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது அவருக்கு.

இந்த நிலையில் அசினைப் பற்றி இன்னொரு காதல் கிசுகிசு பரவிவருகிறது. சூப்பர் ஸ்டார் நடிகர்களை விட்டு விட்டு, இந்தி நடிகர் நீல் நிதின் முகேசை அசின் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி ஓட்டல்களில் ஜோடியாகக் காணப்படுவதாகவும், பின்னிரவு நேரம் வரை பார்ட்டிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தீபிகா படுகோனேவுடன் நீல் நிதின் முகேசை இணைத்து பேசினர். இப்போது தீபிகாவை உதறிவிட்டு அசின் பக்கம் தாவி உள்ளாராம் நீல்.

ஆனால் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் இதை, வெறும் நட்பு என்கிறார்கள். உண்மை என்னவோ…!

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.