நடிச்ச வரைக்கும் போதும். பிடிச்ச கட்சியில இணைஞ்சிரலாம்ங்கிற முடிவுக்கு வந்த குஷ்புவுக்கு எந்த பக்கம் போறதுன்னு திக்கு முக்காடுற அளவுக்கு அழைபபுகள் வருதாம். ஆனாலும் இந்த நேரத்திலதான் பொறுமையா இருந்து பொருத்தமா முடிவெடுக்கணும் என்று நிதானம் காக்கிறாராம். லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த வேகத்தில் தனது அரசியல் பிரவேசம் இப்போது இல்லை என்று அறிவித்துவிட்டார் குஷ். நேரம் வரும்போது கட்சியில சேருவேன். அது எந்த கட்சின்னு இன்னும் முடிவெடுக்கல. ஆனால் எங்க குடும்பமே காங்கிரஸ் குடும்பம்னு ஒரு பதிலை சொல்லி, சத்யமூர்த்தி பவனுக்கு புது ரத்தம் பாய்ச்சிவிட்டார். இவ்வளவு சொன்ன பிறகும், எங்க கட்சிக்கு வாங்கன்னு ஆளு மேல ஆளு தூது வர்றாங்களாம். முன்பு அரசாண்ட கட்சியிலேர்ந்து 'வெயிட்'டான அழைப்பும் வந்திருக்கிறதாம். ஒரு காலத்துல அந்த கட்சிக்கு அனுதாபியா இருந்தாலும், இப்போது எஸ் சொல்ல முடியாதபடி எல்லா கட்சியிடத்தும் அன்பு செலுத்தி வருகிறார் குஷ். (இதுல திருமா கட்சிய சேர்த்திராதீங்க மக்களே..) இந்த நேரத்தில அந்த வெயிட் அழைப்பை அன்போடு தவிர்த்தாராம். மாநாட்ட கூட்டி மணியாட்டாம விடமாட்டாங்க போலிருக்கு! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.