ராவணா பட விளம்பரத்திற்கு பக்கத்திலேயே ராமர் என்ற புதிய படத்தின் விளம்பரமும் வர, ஒட்டுமொத்த அட்டன்ஷனும் இந்த விளம்பரத்தின் மீதும்தான்! ராவணனை போட்டு தள்ளிடுவாரா ராமர்? என்ற கேள்வியோடு படத்தின் இயக்குனர் ஆதிராஜாவை சந்தித்தால், கட்டுக்குலையாத கான்பிடன்ட்டும், கருத்தை சிதைக்காத யதார்த்தமும் இழையோட பேசுகிறார். "அது பெரிய படம் சார். அதுக்கு நம்ம போட்டிங்கறதெல்லாம் ரொம்ப ஓவர். ஆனா ஒண்ணு. ராமர் எதுக்காக பொறந்தாரு தெரியுமா? ராவணனை அழிக்கதான்". புள்ளைய கிள்ளி விட்டுட்டு புட்டிப்பாலை வாயில வச்சா மாதிரி பதில் சொல்கிறார் இந்த அறிமுக இயக்குனர். வி.இசட் துரையிடம் உதவி இயக்குனரா இருந்தேன். பத்து வருட போராட்டத்துக்கு இப்போதுதான் விடியல் என்றார். படத்தில் நடிக்கிற எல்லாரும் புதுமுகங்கள். தியேட்டருக்குள்ளே ஜனங்களை வரவழைக்க என்ன பண்ணியிருக்கீங்க என்றால், இந்த டைட்டில் ஒன்ணு போதாதா என்கிறார் ஆதிராஜா. படத்தின் கான்சப்ட்? சீதை கற்புள்ளவள்னு ஊருக்கு நிருபிக்க அவளை தீக்குளிக்க வச்சான் ராமன். இந்த படத்து ராமன் தன்னையே தீக்குளிச்சுப்பானாம். வினய் தத்தா என்பவர்தான் ஹீரோ. பார்ன் வித் சில்வர் ஸ்பூன். சட்டக்கல்லு£ரியில் படிச்சிட்டு இருந்தவர். எப்பவும் ஏசியிலேயே திரியுற பையனை வெயில் மழைன்னு வறுத்து எடுத்திட்டேன் என்று ஆதிராஜா அறிமுகம் கொடுக்க, வசீகர புன்னைகையோடு வணக்கம் சொல்கிறார் வினய் தத்தா. நமக்கும் சினிமாவுக்கும் ரொம்ப து£ரம். நடிக்க வர்றீயான்னு கூப்பிட்டதும் வந்திட்டேன். நல்லவேளை என்னை சரிபண்ணி நடிக்கவும் வச்சிட்டாரு டைரக்டர் என்றார் பார்டருக்குள் இருக்கும் இந்த இளம் வக்கீல். இந்த படத்திலும் ஒரு கேரளா குயின்தான் நாயகியாம். பெயர் அனுமோல். கண்ணுல காட்டுவாருன்னு பார்த்தா, நேரடியா ஸ்கிரீன்ல பார்த்துக்கோங்க என்றார் ஆதிராஜா. என்ன பிரச்சனையோ? |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.