சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்படும்போது இருதரப்பினருக்கும் பொதுவான வகையில் இருந்து நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள். தேவையில்லாமல் யாருடைய மனதைம் புண்படும் படியான வார்த்தைகளை பேச வேண்டாம். உங்கள் துணையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொள் ளுங்கள். அப்போது தான், `உங்கள் ஆழமான நம்பிக்கையை தன் மீது வைத்திருக்கிறீர்கள்’ என்று அவர் சந்தோஷபடுவார். இதன் முலம் உங்கள் துணைடன் நீண்ட நாட்களுக்கு புரிதலுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தலாம். எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள். சுதந்திரமாகவும், அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழிகாட்டுங்கள். இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமானவை. அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிக கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போது தான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு அபிராயம் ஏற்படும். |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.