Pages

Saturday, April 3, 2010

மூன்று மாத பிளான் ஒன்றரை மாதத்திலே...ஏன்?


மூன்று மாத பிளானில் ஃபார்முலா -2 ரேசுக்கு கிளம்பிய அஜீத், ஒன்றரை மாதத்திலேயே திரும்பும் மூடில் இருக்கிறாராம். ஏன்? அவரது மனசுக்குள் புகுந்து புறப்படுகிற ஆற்றல் யாருக்கு இருக்கிறது?

அவர் நினைத்தால் நினைத்ததுதான். நல்லவேளையாக இது சலிப்பினால் வந்த ரிட்டர்ன் இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அவரது எளிமைக்கு இன்னும் ஒரு சான்று என்று அஜீத் தரப்பில் வைக்கப்படுகிற சங்கதி, ரொம்பவே அழகு. பைவ் ஸ்டார் ஓட்டல்கள், பளபள தங்கும் விடுதிகள் என்று இவர் போயிருக்கிற ஏரியாவில் பிரபலமாக இருந்தாலும், 3 படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றில்தான் தங்கியிருக்கிறாராம் தல. இவருக்கென்று சமைத்துப்போட இந்திய சமையல்காரர் ஒருவரும் அவருடன் இருக்கிறாராம். (குழந்தைக்கு பனி ஒத்துக் கொள்ளாது என்பதால் கடைசி நேரத்தில் குடும்பத்தை இங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறார் தல)

முதல்வரை சந்தித்து தனது ரேசுக்காக ஸ்பான்சர் கேட்டிருந்த அஜீத், அதன்பின் இந்த விஷயத்தை திரும்ப திரும்ப கேட்டு நச்சரிக்காமல் போனதாலோ என்னவோ, அது பற்றி இவர் கிளம்புகிற வரைக்கும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கும்பிட போனவருக்கு குறுக்கேவே பிள்ளையார் என்பது மாதிரி ஒரு அதிர்ஷ்டம். ஈராசியா மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் அஜீத்திற்கு ஸ்பான்சர் செய்திருக்கிறதாம். இது ஒருபக்கம் இருந்தாலும், தனது கை பணத்தில் சுமார் இரண்டு கோடி வரை செலவு செய்திருக்கிறாராம் அஜீத்.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.