திரையிடப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு நீடித்திருந்தால் அந்த இடமே ரத்த வாடை அடித்திருக்கும். அந்தவுக்கு அரிவாளின் ஆதிக்கம் பலமாகவே இருந்தது ரத்த சரித்திரம் பட ட்ரெய்லரில்! விவேக் ஓபராய், சூர்யா நடித்திருக்கும் இப்படத்தை அடிதடிக்கு பேர்போன ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள சென்னை வந்திருந்தார் ஆர்ஜிபி. (இப்படிதான் அழைக்கிறார்கள் அவரை) ஆந்திராவில் இரு ரவுடிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தைதான் ரத்தகளரியாக சொல்ல முற்பட்டிருக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்த காட்சிகளை சென்சார்ல விட்ருவாங்களா? என்று அத்தனை பேரும் முணுமுணுக்க, "அதுக்கான காரணத்தை முறையா சொல்லி அனுமதி வாங்குவேன்" என்றார் வர்மா நம்பிக்கையோடு! ரவி என்கிற மனிதரின் வளர்ச்சி, அதிகாரம், அரசியல் பற்றி நான் தொடர்ந்து தெரிந்து வைத்திருந்தாலும், ஆந்திராவில் ராமா நாயுடு ஸ்டுடியோ அருகே ரவியை கொல்ல நடந்த வெடிகுண்டு சம்பவத்தில்தான் சூரி என்ற மனிதரை பற்றி அறிந்தேன். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் என்னை ஆச்சர்யப்படுத்தின. சூரியின் பழிவாங்கும் உணர்வு, தண்டனைக்காக அடைக்கப்பட்ட சிறையிலும் தணியாமல் இருந்தது. சிறையிலிருந்தபடியே ரவியை பழிவாங்கும் முயற்சியில் சூரி வெற்றி பெற்றார். இந்த படத்திறக்£க ரவி, சூரி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினேன். சூரியின் குடும்பத்தையும் சந்தித்து உணர்வுகளை பதிவு செய்தேன் என்கிற ராம்கோபால் வர்மா, அனந்தப்பூர் சிறையில் இருக்கும் சூரி என்கிற அந்த பிரபல ரவுடியையும் நேரில் சந்தித்து விஷயங்களை கறந்து அதை அப்படியே படத்தில் இணைத்திருக்கிறார். மே 4 ந் தேதி ரிலீஸ். எதுக்கும் ஆம்புலன்சுக்கு சொல்லி வைக்கலாம்... ! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.