நவ்யாநாயருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் அவர், மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் கேரளா வந்த அவர், நேற்றுமுன்தினம் தனியார் விமானத்தில், கொச்சியில் இருந்து மும்பைக்கு செல்ல வந்தார். இவரது லக்கேஜ்கள் பாதுகாப்பு சோதனைக்குப்பின் விமானத்தில் ஏற்றப்பட்டன. விமானம் புறப்பட சிறிது நேரம் இருந்த போது தான், தனது நகைகளும், கேமராவும் விமானத்தில் ஏற்றப்பட்ட லக்கேஜில் இருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
இதையடுத்து விமான நிலைய மேலாளரை தொடர்பு கொண்ட நவ்யா, விமான லக்கேஜ்களில் இருக்கும் தனது நகை, கேமராக்களை எடுத்து தருமாறு கேட்டார். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் லக்கேஜ் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று நவ்யாவின் நகை, கேமரா இருந்த பையை எடுத்து வந்து கொடுத்தனர். விமான நிலைய விதிகளின் படி சோதனைக்குப்பின் விமானத்தில் ஏற்றப்பட்ட லக்கேஜ்களை திறக்க முடியாது. விமானம் புறப்பட்டு போன பின்னர் தான் இந்த விதிகுறித்து தொழில்பாதுகாப்பு படையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து கொச்சி ஏர்போர்ட் இயக்குனர் மற்றும் சிஐஎஸ்ப் கமாண்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.