நானும் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமும் இணைந்து ஜேஎஸ் பிலிம்ஸ் என்ற விளம்பர பட நிறுவனத்தை ஆரம்பித்தோம். இதன் மூலம் 500க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியுள்ளோம். இதற்கிடையில் கர்நாடக இசையை மையபடுத்தி ‘மார்கழி ராகம்’ என்ற படத்தை சில வருடங்களுக்கு முன் இயக்கினேன். இது உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்போது இந்த படத்தை இயக்குகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘பாய்ஸ்’ சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயின். தமிழ், தெலுங்கில் எடுக்க முடிவு செய்துள்ளோம். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக, ரெட் ஒன் கேமரா நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ள ‘ரெட் எபிக்’ என்ற நவீன கேமராவை பயன்படுத்த உள்ளோம். யதார்த்தமான ரொமான்டிக் படமாக இது இருக்கும். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறு ஜெயேந்திரா கூறினார். |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.